GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 76 to 100

76.  விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
'இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா'
Answer: C.   இரட்டிற் பிரிந்திசையாதது எது?
77.  "சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே" -இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது - எனப் பாடியவர்
Answer: C.   மருதகாசி
78.  கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது?
Answer: D.   கொய்யாக்கனி
79.  உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது?
Answer: C.   தேன்மழை
80.  தம்மை நாயகியாகக் கற்பனை செய்து நாரையைத் தூது விட்ட ஆழ்வார் யார்?
Answer: B.   நம்மாழ்வார்
81.  உமர்கய்யாம், 'ரூபாயத்' என்ற பெயரில் எழுதிய நூலைக் கவிமணி மொழி பெயர்த்தார். அடிக் கோடிட்ட சொல்லின் பொருளை எழுதுக.
Answer: C.   நான்கடிச் செய்யுள்
82.  கீழ்க்காணும் சொற்களில் தொழிற்பெயர் அல்லாததை அறிக.
Answer: B.   தொல்லை
83.  செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.
Answer: B.   தொல்காப்பியம் வ.உ.சி.யால் பதிப்பிக்கப்பட்டது
84.  'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது' - இக்குறளில் அடி எதுகையாவது.
Answer: C.   குணமென்னும் — கணமேயும்
85.  வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்.
பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
Answer: A.   தனி வாக்கியம்
86.  பிறவினை வாக்கியத்தை கண்டறிக:
Answer: C.   அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்
87.  பின்வரும் இலக்கணக் குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க:
பண்புத்தொகை
Answer: B.   செய்வினை
88.  'நெறியினில் உயிர்செகுத் திடுவ' - இதில் 'உயிர்செகுத்து' எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?
Answer: D.   இரண்டாம் வேற்றுமைத்தொகை
89.  சரியானவற்றைத் தேர்க.
பொருள் — திணை
1. எதிரூன்றல் — வெட்சி
2. மீட்டல் — வஞ்சி
3. செருவென்றது — வாகை
4. எயில்காத்தல் — நொச்சி
Answer: C.   3ம், 4ம் சரி
90.  பிரித்தெழுதுக
நெடுநாவாய்
Answer: C.   நெடுமை + நாவாய்
91.  'நல்ல' எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?
Answer: B.   குறுந்தொகை
92.  'கடலில் கரைத்த பெருங்காயம் போல' இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்
Answer: C.   வீணாதல்
93.  தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக.
Answer: C.   நடந்து வந்தான்
94.  பொருத்துக:
(a) கை 1. துன்பம்
(b) நோ 2. கைப்பற்றுதல்
(c) யா 3. ஒழுக்கம்
(d) வௌ 4. ஒருவகை மரம்
Answer: D.   3 1 4 2
95.  ஈற்றயலடி 'சிந்தடி' பெற்று வரும் பா வகை
Answer: D.   நேரிசை ஆசிரியப்பா
96.  "சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்" - எனக் கூறியவர்.
Answer: C.   காந்தியடிகள்
97.  'கவி காளமேகம்' எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?
Answer: C.   வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்
98.  உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடுக்க.
Answer: C.   தமிழ்ச்சிட்டு
99.  மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது
Answer: A.   கற்றது மறவாமை
100.  இலக்கணக்குறிப்பறிந்து பொருத்துக:
(a) வழிக்கரை 1. வினைத்தொகை
(b) கரகமலம் 2. உரிச்சொற்றொடர்
(c) பொங்குகடல் 3. ஆறாம் வேற்றுமைத்தொகை
(d) உறுவேனில் 4. உருவகம்
Answer: C.   3 4 1 2
;