GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2014 Preliminary Examination

General Studies Questions 51 to 75

51.  பொருத்துக:
(a) பாலிடேக்டைலி 1. “Y” சார்ந்த குணம்
(b) நிறக் குருட்டுத்தன்மை 2. ஆட்டோசோமால் ஒடுங்கு குணம்
(c) பிகேயு 3. பால் பிணைத்த ஒடுங்கு குணம்
(d) காதில் முடி வளர்வது 4. ஆட்டோசோமால் ஓங்கு குணம்
Answer: A.   4 3 2 1
52.  வரிசை I ஐ வரிசை II உடன் பொருத்தி கீழ்கண்ட இரு தொகுப்பிலிருந்தும் பொருத்தமான விடையை கொடுக்கப்பட்ட குறியீட்டை பயன்படுத்தி குறிப்பிடவும்.
வரிசை I வரிசை II
(a) நில ஆக்கிரமிப்பு குத்தகைதாரர் 1. அதிகபட்ச பலவீனமானவர்
(b) விருப்ப குத்தகைதாரர் 2. நிரந்தரமான மற்றும் வாரிசுரிமை பெற்றவர்
(c) உட்பகுதி குத்தகைதாரர் 3. தற்காலிக குத்தகைதாரர்
(d) இடைத்தரகர்கள் 4. மறைமுக நிலப்பிரபு
Answer: A.   2 3 1 4
53.  2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 1.21 பில்லியனாகும். இது உலக மக்கட்தொகையின் _________ சதவீதமாகும்.
Answer: B.   17.5%
54.  இந்தியாவின் 2013-14 வரவு-செலவு திட்டத்தின்படி, எத்தனை விழுக்காடு நடப்பு வருவாய் செலவில், வட்டியாகச் செலுத்தப்படுகிறது?
Answer: B.   26 விழுக்காடு
55.  தமிழ்நாட்டில் 2009-10ல் தனிநபர் வருமானத்தில் முதலிடத்தில் பெற்ற மாவட்டம் எது?
Answer: D.   கன்னியாகுமரி
56.  கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களை லேந்தனைடு, ஆக்டினைடாக பிரித்து அறிக.
1. சமோரியம் (Sm)
2. யுரேனியம் (U)
3. புளுட்டோனியம் (Pu)
4. டிஸ்புரோஸியம் (Dy)
Answer: A.   லேந்தனைடு : சமோரியம், டிஸ்புரோஸியம் ; ஆக்டினைடு : யுரேனியம், புளுட்டோனியம்
57.  கீழே கொடுக்கப்பட்டுள்ள ரேடியோ ஐசோடோப்புகள் பட்டியலை அதன் பயன்களோடு பொருத்துக. சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு தெரிவு செய்.
(a) கோபால்ட் 60 1. உரம்
(b) Ag191 2. மூளை கட்டியை படம் பிடிக்க
(c) Hg197 3. இரத்த புற்றுநோய்
(d) P32 4. நுண்ம கிருமி ஒழிப்பு
Answer: B.   4 3 2 1
58.  கீழ்க்காணும் வாக்கியங்களை கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
கூற்று (A) : ஸ்கிளரன்கைமா செல்கள் தாவரங்களுக்கு உறுதித் தன்மையினை அளிக்கின்றன.
காரணம் (R) : ஸ்கிளரன்கைமா செல்கள் மென்மையான செல்சுவர்களை பெற்றுள்ளன.
Answer: C.   (A) சரி ஆனால் (R) தவறு
59.  டி.என்.ஏ (DNA) மற்றும் ஆர்.என்.ஏ (RNA) ஆகிய இரண்டிலும் காணப்படுகின்ற நைட்ரோஜீனஸ் காரங்களாவன
Answer: D.   அடினைன், குவானைன் மற்றும் சைட்டோசின்
60.  தெற்காசிய இலக்கியம் தொடர்பான DSC பரிசை பெற்ற நாவல்
Answer: B.   கிரானிக்கல்ஸ் ஆஃப் கார்ப்பஸ் பேரர்
61.  “INDRA” — கீழே கண்ட நாடுகளுக்கிடையேயான கூட்டு கடற்படை பயிற்சியை குறிக்கும்
Answer: C.   இந்தியா மற்றும் ரஷ்யா
62.  கீழ்கண்டவற்றில் எந்த நாட்டில் உலகிலேயே அதிக அளவு யுரேனியம் உள்ளது?
Answer: D.   ஆஸ்திரேலியா
63.  கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
நடனங்கள் — மாநிலங்கள்
Answer: C.   யக்ஷகானம் — குஜராத்
64.  ஐ.நா. சபையின் கொடியில் இடம்பெற்றுள்ள இலைகளின் படங்கள் எந்த மரத்தை சேர்ந்தவை?
Answer: A.   ஆலிவ்
65.  இந்தியத் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
Answer: D.   1978
66.  உலகின முதல் ‘நுண்ணறிவுக் கத்தி’ என்பது எதைக் கண்டறியக் கூடியது?
Answer: C.   புற்றுநோய்
67.  உலகின அதிவேக மேம்பட்ட கணினியின் வேகம்
Answer: C.   33.86 பீட்டாஃபிளாப்ஸ்
68.  PSLV-C22 — ஆல் சுற்றுவட்டப் பாதையில் 2 ஜூலை 2013 அன்று செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்
Answer: A.   IRNSS - 1A
69.  தட்பவெப்ப நிலை மாற்றத்தை கண்காணிக்கும் முதல் மையம் சமீபத்தில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட இடம்
Answer: B.   சென்னை
70.  லோக்பால் குறித்த கருத்துகளில் பின்வருவனவற்றுள் தவறானவை எது/எவை?
(i) ஒரு மந்திரி அல்லது செயலாளரின் நிர்வாக செயலை விசாரணை செய்ய லோக்பாலுக்கு அதிகாரம் உண்டு.
(ii) நிர்வாகச் சீர்கேடு மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை லோக்பால் விசாரிக்கலாம்.
(iii) இந்திய அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு அரசாங்கத்துடன் ஏற்படும் ஒப்பந்தங்களைக் குறித்து விசாரிக்கலாம்.
(iv) மரியாதை மற்றும் விருதுகள் அளிப்பது.
Answer: D.   (iii), (iv)
71.  பின்வருவனவற்றுள் எந்த ஒன்று என்.ஜி.ஓ.க்களுடன் தொடர்புடையது அன்று?
Answer: D.   பொதுக் கழகங்கள்
72.  இந்திய அரசமைப்பின், அரசின் கொள்கையை வழி செலுத்தும் நெறிமுறைகளை எடுத்துரைக்கும் உறுப்புகள்
Answer: B.   உறுப்பு 36 முதல் உறுப்பு 51 வரை
73.  கீழ்கண்ட வாக்கியங்களை கவனித்து அவற்றில் சரியான விடையினை குறியீட்டெண் கொண்டு தேர்ந்தெடுக்கவும்.
I. IGOANPS தொடர்புடையது BPL மக்கட்தொகையில் 65 வயதானவர்களுக்கு ரூ. 200 மாதம் கொடுக்கப்படுவதாகும்
II. இந்தியாவில் வறுமை தவிர்ப்பு என்பது எந்த ஒரு மனிதன் 2100 கலோரிகள் ஒரு நாட்களுக்கு நகர்ப்புறத்திலும் மற்றும் 2200 கலோரிகள் கிராமப்புறத்திலும் எட்டுவதாகும்.
Answer: C.   I மற்றும் II
74.  கீழே கொடுக்கப்பட்டுள்ள குழுக்களில் எது அடிப்படை கடமைகளை இந்திய அரசமைப்பில் இணைக்க காரணமாக இருந்தது?
Answer: C.   ஸ்வரன் சிங் குழு
75.  பின்வருவனவற்றை இறங்கு வரிசையில் முறைப்படுத்துக
1. தாசில்
2. துணைப்-பிரிவு
3. கிராமம்
4. பர்கானா
Answer: A.   2, 1, 4, 3
;