GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2014 Preliminary Examination

General Tamil Questions 26 to 50

1.  கீழ்க்காணும் 'வல்லினம் மிகா இடம்' குறித்த இலக்கணக் கூற்றில் பிழையான கூற்று எது?
A.   வினைத்தொகையில் வல்லினம் மிகாது
B.   உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது
C.   இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது
D.   நான்காம் வேற்றுமை விரியில் வரும் வல்லினம் மிகாது
Answer: D.  நான்காம் வேற்றுமை விரியில் வரும் வல்லினம் மிகாது
2.  கலித்தொகையில் நெய்தற்கலியின் ஆசிரியர் யார்?
A.   பெருங்கடுங்கோ
B.   கபிலர்
C.   நல்லந்துவனார்
D.   நல்லுருத்திரன்
Answer: C.  நல்லந்துவனார்
3.  பொருத்துக.
ஊர் சிறப்புப்பெயர்
(a) மதுரை 1. திருவடிசூலம்
(b) திருநெல்வேலி 2. கடம்பவனம்
(c) சிதம்பரம் 3. வேணுவனம்
(d) திருவிடைச்சுரம் 4. தில்லைவனம்
A.   1 3 2 4
B.   2 3 1 4
C.   2 3 4 1
D.   4 2 3 1
Answer: C.  2 3 4 1
4.  'கா'- எனும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?
A.   சோலை
B.   ஆறு
C.   மலை
D.   காடு
Answer: A.  சோலை
5.  கம்பராமாயணத்தின் ஐந்தாவது காண்டம்
A.   ஆரண்ய காண்டம்
B.   சுந்தர காண்டம்
C.   கிட்கிந்தா காண்டம்
D.   யுத்த காண்டம்
Answer: B.  சுந்தர காண்டம்
6.  இலக்கணக் குறிப்பறிதல்
“நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே"
கூற்று (A) செய்யுளிசையளபெடை
காரணம் (R) : ஒரு சீரில் இயல்பாக உள்ள நெட்டெழுத்து அளபெடுத்து, அளபெடைக் குறியை நீக்கினால் செய்யுளில் சீர், தளை கெடும்
A.   (A) - சரி, ஆனால் (R) - தவறு
B.   (A) - மற்றும் (R) - இரண்டும் சரி, மேலும் (R) - என்பது (A) - விற்குச் சரியான விளக்கம்
C.   (A) -தவறு, ஆனால் (R) - சரி
D.   (A) - மற்றும் (R) -இரண்டும் தவறு
Answer: B.  (A) - மற்றும் (R) - இரண்டும் சரி, மேலும் (R) - என்பது (A) - விற்குச் சரியான விளக்கம்
7.  எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
'தமிழக அரசு சிறந்த கலைஞர்களைக் கௌரவிக்கிறது'
A.   செயப்பாட்டு வாக்கியம்
B.   தொடர் வாக்கியம்
C.   கலவை வாக்கியம்
D.   செய்வினை வாக்கியம்
Answer: D.  செய்வினை வாக்கியம்
8.  விகுதிப் பெற்றுள்ள தொழிற்பெயரைக் கண்டறிக
A.   தொண்டு
B.   கூத்து
C.   நசை
D.   ஆட்டம்
Answer: D.  ஆட்டம்
9.  கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிதல்
'எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கே'
A.   உம்மைத்தொகை, வினைத்தொகை
B.   முற்றும்மை, பண்புத்தொகை
C.   இழிவு சிறப்பும்மை, உயர்வு சிறப்பும்மை
D.   வினைத்தொகை, பண்புத்தொகை
Answer: B.  முற்றும்மை, பண்புத்தொகை
10.  பொருந்தா இணையைக் கண்டறிக
A.   கலை - வித்தை
B.   கழை - மூங்கில்
C.   களை - முகத்தின் ஒளி
D.   காளை - மேகம்
Answer: D.  காளை - மேகம்
11.  கீழ்க்காணும் சொற்களுள் 'யானை' என்னும் பொருள் குறிக்காத சொல்
A.   கரி
B.   களிறு
C.   வேழம்
D.   கேழல்
Answer: D.  கேழல்
12.  இலக்கணக் குறிப்பறிதல் :
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.
அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பு.
A.   முற்றும்மை
B.   உயர்வு சிறப்பும்மை
C.   எண்ணும்மை
D.   இழிவு சிறப்பும்மை
Answer: D.  இழிவு சிறப்பும்மை
13.  கீழ்க்காண்பனவற்றுள் எந்த நூல் முடியரசன் கவிதை நூலில் இல்லாதது?
A.   பூங்கொடி
B.   இயேசு காவியம்
C.   காவியப்பாவை
D.   வீரகாவியம்
Answer: B.  இயேசு காவியம்
14.  'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' என்னும் புகழ்மிக்க நகரம் எது?
A.   திருநள்ளாறு
B.   திருநெல்வேலி
C.   தஞ்சாவூர்
D.   மதுரை
Answer: D.  மதுரை
15.  ரூபாயத் - என்ற சொல்லின் பொருள்
A.   பணம்
B.   பாட்டு
C.   மூன்றடிச் செய்யுள்
D.   நான்கடிச் செய்யுள்.
Answer: D.  நான்கடிச் செய்யுள்.
16.  'கோதைவில் குரிசில் அன்னான்'
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
A.   சிவன்
B.   இராமன்
C.   அருச்சுனன்
D.   இலக்குவன்
Answer: B.  இராமன்
17.  பொருந்தாத இணையினைக் காண்க.
A.   யாதும் ஊரே யாவரும் கேளிர் — கணியன் பூங்குன்றன்
B.   கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது — நாமக்கல் கவிஞர்
C.   மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும் — கவிமணி
D.   தேனொக்கும் செந்தமிழே நீ கனி — பாரதியார்
Answer: D.  தேனொக்கும் செந்தமிழே நீ கனி — பாரதியார்
18.  "தமிழ் செய்யுள் கலம்பகம்"
இது யார் தொகுப்பு?
A.   மறைமலை அடிகளார்
B.   திரு.வி.க.
C.   க.சு. பிள்ளை
D.   ஜி.யு. போப்
Answer: D.  ஜி.யு. போப்
19.  கீழ்க்காணும் நூல்களில் பாரதிதாசனால் எழுதப்படாதது எந்த நூல்?
A.   இசையமுது
B.   கண்ணகி புரட்சிக்காப்பியம்
C.   தமிழியக்கம்
D.   தமிழ்ப்பசி
Answer: D.  தமிழ்ப்பசி
20.  திருநாவுக்கரசரைக் குறிப்பிடாத பெயர் எது?
A.   தருமசேனர்
B.   தாண்டகவேந்தர்
C.   தம்பிரான் தோழர்
D.   வாகீசர்
Answer: C.  தம்பிரான் தோழர்
21.  "உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்"
என்னும் — வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.
A.   சீத்தலைச்சாத்தனார்
B.   மாணிக்கவாசகர்
C.   கம்பர்
D.   திருமூலர்
Answer: C.  கம்பர்
22.  ஒரு பாடலில் சொல் பிரிவுறாது நின்று பலபொருள் தருவது
A.   சிலேடை
B.   செம்மொழிச் சிலேடை
C.   பிரிமொழிச் சிலேடை
D.   பிறிதுமொழிதல்
Answer: B.  செம்மொழிச் சிலேடை
23.  'தற்குற்றம் வருவது ஓரான் புனைமலர்ச் சார்பால் அன்றி
அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்'
- இதில் 'அல்கு' என்பதன் பொருள்
A.   மருள்
B.   இருள்
C.   உருள்
D.   திரள்
Answer: B.  இருள்
24.  வாக்கிங் போகும் போது மொபைல் யூஸ் பண்ண வேண்டாம் சரியாக மொழிபெயர்க்கப்பட்ட வாக்கியத்தைக் கண்டறிக.
A.   நடைபயிற்சி செய்யும் போது செல்பேசியைப் பயன்படுத்த வேண்டாம்
B.   நடைபயிற்சி போகும் போது அலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம்
C.   நடைபயிற்சி போகும் போது தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம்
D.   நடைபயிற்சியின் போது இணையதளம் பயன்படுத்த வேண்டாம்
Answer: B.  நடைபயிற்சி போகும் போது அலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம்
25.  பொருத்துக பொருத்தமான இடைநிலையைத் தேர்க.
(a) வருவான் 1. இறந்தகால இடைநிலை
(b) காணான் 2. நிகழ்கால இடைநிலை
(c) பார்த்தான் 3. எதிர்கால இடைநிலை
(d) நடக்கிறான் 4. எதிர்மறை இடைநிலை
A.   3 4 2 1
B.   4 1 3 2
C.   3 4 1 2
D.   1 2 4 3
Answer: C.  3 4 1 2
;