GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2014 Preliminary Examination

General Tamil Questions 51 to 75

1.  பொருத்துக:
(a) கஃஃசு 1. இன்னிசையளபெடை
(b) உழாஅர் 2. ஒற்றளபெடை
(c) உண்பதூஉம் 3. சொல்லிசையளபெடை
(d) உரனசைஇ 4. செய்யுளிசையளபெடை
A.   2 1 3 4
B.   2 4 1 3
C.   3 1 4 2
D.   3 4 2 1
Answer: B.  2 4 1 3
2.  எதிர்ச்சொல்:
'இடும்பை' என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி.
A.   துன்பம்
B.   இன்பம்
C.   கோபம்
D.   பொறுமை
Answer: B.  இன்பம்
3.  ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
வாழை, வாளை, வாலை
A.   மரம், மீன், இளம்பெண்
B.   விலங்கு, மரம், பூப்பருவம்
C.   செடி, விலங்கு, மரம்
D.   பூ, செடி, விலங்கு
Answer: A.  மரம், மீன், இளம்பெண்
4.  பிழையற்ற தொடர் எது
A.   கயிறுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
B.   கயிற்றுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
C.   கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
D.   கயிற்று கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
Answer: B.  கயிற்றுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
5.  சரியானவற்றை தெரிந்து எழுதுக:
A.   புதுமைப்பித்தன் - அக்கரை பச்சை
B.   முல்லை சக்தி - வெள்ளி இரவு
C.   டாக்டர் மூ.வரதராசன் - கொலு பொம்மை
D.   ஜீவா - பொன்னகரம்
Answer: B.  முல்லை சக்தி - வெள்ளி இரவு
6.  முதுகுடிப் பிறந்த மகளிரும் நிகரற்ற வீர வாழ்க்கையினராவர்.
இவ்வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?
A.   வியப்பு வாக்கியம்
B.   வினா வாக்கியம்
C.   செய்தி வாக்கியம்
D.   கட்டளை வாக்கியம்
Answer: C.  செய்தி வாக்கியம்
7.  கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான வாக்கியத்தைத் தேர்ந்து எழுதுக.
A.   தம் அன்பினில் கும்பிடுதல் கூடும் கடன்
B.   அன்பினில் கும்பிடுதல் தம் கடன் கூடும்
C.   கூடும் அன்பினில் கும்பிடுதல் தம் கடன்
D.   கூடும் தம் கடன் கும்பிடுதல் அன்பினில்
Answer: C.  கூடும் அன்பினில் கும்பிடுதல் தம் கடன்
8.  “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே....”
எனும் சொற்றொடர் இடம் பெறும் நூல்?
A.   அகநானூறு
B.   புறப்பொருள் வெண்பாமாலை
C.   நாலடியார்
D.   நற்றிணை
Answer: B.  புறப்பொருள் வெண்பாமாலை
9.  'தமிழ் மொழித் தூய்மை' இயக்கம் - தோன்றிய நூற்றாண்டு
A.   21 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
B.   18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
C.   20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
D.   19-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
Answer: C.  20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
10.  கீழுள்ள நூல் பட்டியலில் பொருந்தா நூல் எது?
A.   வேதியர் ஒழுக்கம்
B.   சதுரகராதி
C.   தொன்னூல் விளக்கம்
D.   தமிழியக்கம்
Answer: D.  தமிழியக்கம்
11.  'He is a Prince among the Tamil Poets' (தமிழ்க் கவிஞர்களின் இளவரசன்) என்று வீரமாமுனிவர் பாராட்டிய புலவர்
A.   இளங்கோவடிகள்
B.   கம்பர்
C.   பாரதியார்
D.   திருத்தக்க தேவர்
Answer: D.  திருத்தக்க தேவர்
12.  "திருவாசகம்" யாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது?
A.   ரேணியஸ்
B.   ஜி.யு.போப்
C.   எல்லீசர்
D.   லாசரஸ்
Answer: B.  ஜி.யு.போப்
13.  இரகசிய வழி எனும் ஆங்கில நூலை தழுவி தமிழில் நாடக நூலினை இயற்றியவர் யார்?
A.   பம்மல் சம்பந்த முதலியார்
B.   சங்கரதாஸ் சுவாமிகள்
C.   சுந்தரம் பிள்ளை
D.   இலட்சுமண பிள்ளை
Answer: C.  சுந்தரம் பிள்ளை
14.  பொருத்துக:
நூல் ஆசிரியர் பெயர்
(a) திரிகடுகம் 1. விளம்பிநாகனார்
(b) சிறுபஞ்சமூலம் 2. கணிமேதாவியார்
(c) ஏலாதி 3. நல்லாதனார்
(d) நான்மணிக்கடிகை 4. காரியாசான்
A.   1 4 2 3
B.   3 2 1 4
C.   3 4 2 1
D.   4 1 3 2
Answer: C.  3 4 2 1
15.  எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக:-
'ஆடும் மயிலின் அழகுதான் என்னே!
A.   வினா வாக்கியம்
B.   கட்டளை வாக்கியம்
C.   உணர்ச்சி வாக்கியம்
D.   செய்தி வாக்கியம்
Answer: C.  உணர்ச்சி வாக்கியம்
16.  இணையாக இல்லாததை எழுதுக:
A.   பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சி — செய்திப் படம்
B.   ஒரு நிகழ்வை மட்டும் விளக்குவது — விளக்கப் படம்
C.   கருத்துக்கணிப்பு செய்யப்படுவது — கருத்துப் படம்
D.   கல்வி கற்பிப்பதற்கென உருவானது — கல்விப் படம்
Answer: C.  கருத்துக்கணிப்பு செய்யப்படுவது — கருத்துப் படம்
17.  வாக்கிய வகையைக் கண்டெழுதுதல்:
குடும்ப விளக்கு பாரதிதாசனால் எழுதப்பட்டது
A.   செய்வினை வாக்கியம்
B.   கட்டளை வாக்கியம்
C.   பிறவினை வாக்கியம்
D.   செயப்பாட்டுவினை வாக்கியம்
Answer: D.  செயப்பாட்டுவினை வாக்கியம்
18.  'திராவிட மொழிகள் ஒட்டுநிலை மொழிகளாகும்' எவ்வகை வாக்கியம்
A.   செய்தி வாக்கியம்
B.   கட்டளை வாக்கியம்
C.   வினா வாக்கியம்
D.   வியப்பு வாக்கியம்
Answer: A.  செய்தி வாக்கியம்
19.  'Pilgrims Progress' என்னும் நூலினைத் தழுவி எழுதிய தமிழ் நூல் எது?
A.   மனோன்மணியம்
B.   தேம்பாவணி
C.   சீறாப்புராணம்
D.   இரட்சணிய யாத்திரிகம்
Answer: D.  இரட்சணிய யாத்திரிகம்
20.  "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" இந்நூலுக்குச் சொந்தமானவர்
A.   கா.சு. பிள்ளை
B.   ரா.பி. சேதுப்பிள்ளை
C.   தேவநேய பாவாணர்
D.   கால்டுவெல்
Answer: D.  கால்டுவெல்
21.  "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே"
எனும் பாடலடிகள் யாருடையது?
A.   புரட்சிக்கவிஞர்
B.   தேசியக்கவி
C.   காந்தியக் கவிஞர்
D.   கவிமணி
Answer: B.  தேசியக்கவி
22.  "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு"
இக்கூற்றுக்குரியவர் யார்?
A.   கம்பர்
B.   கணியன் பூங்குன்றனார்
C.   ஔவையார்
D.   இளங்கோவடிகள்
Answer: C.  ஔவையார்
23.  அகர வரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக
A.   எழிலி, எழில், எழால், எழல்
B.   எழில், எழல், எழால், எழிலி
C.   எழால், எழில், எழிலி, எழல்
D.   எழல், எழால், எழிலி, எழில்
Answer: D.  எழல், எழால், எழிலி, எழில்
24.  "TROLLY' - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க?
A.   படப்பிடிப்பு
B.   உருப்பெருக்கி
C.   நகர்த்தும் வண்டி
D.   எதிர்ச்சுருள்
Answer: C.  நகர்த்தும் வண்டி
25.  பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?
A.   தேம்பாவணி
B.   கித்தேரி அம்மாள் அம்மானை
C.   செந்தமிழ் இலக்கணம்
D.   ஆசாரக் கோவை
Answer: D.  ஆசாரக் கோவை
;