GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2014 Preliminary Examination

General Studies Questions 26 to 50

1.  e-PPS ன் விரிவாக்கம்
A.   மின்னணு திட்ட முன்மொழிதல் அமைப்பு
B.   மின்னணு மக்கள் தொகை வருவதுரைத்தல் அமைப்பு
C.   மின்னணு பாலிமர் கொள்வினை அமைப்பு
D.   மின்னணு பெட்ரோல் கொள்வினை அமைப்பு
Answer: A.  மின்னணு திட்ட முன்மொழிதல் அமைப்பு
2.  குறுங்கோள் பகுதியில் நீரின் ஆவி இருப்பதை பற்றிய தெளிவான முடிவை வெளியிட்டது
A.   இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்
B.   நாசா
C.   ரஷ்ய விண்வெளி நிறுவனம்
D.   ஐரோப்பா விண்வெளி நிறுவனம்
Answer: D.  ஐரோப்பா விண்வெளி நிறுவனம்
3.  இந்தியாவின் துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது
I. மக்களவை உறுப்பினர்கள்
II. மாநிலங்களவை உறுப்பினர்கள்
இவற்றுள்
A.   I அல்லது II-ம் இல்லை
B.   I மட்டும்
C.   II மட்டும்
D.   I மற்றும் II இரண்டும்
Answer: D.  I மற்றும் II இரண்டும்
4.  கால வரிசைப்படி எழுதுக :
I. பைரோன் சிங் ஷெகாவத்
II. K.R. நாராயணன்
III. முகமது ஹமீத் அன்சாரி
IV. கிருஷ்ண காந்த்
A.   III, IV, I மற்றும் II
B.   II, IV, I மற்றும் III
C.   I, III, II மற்றும் IV
D.   IV, II, III மற்றும் I
Answer: B.  II, IV, I மற்றும் III
5.  உலக வன நாள் அனுசரிக்கப்படுவது
A.   மார்ச் - 8
B.   மார்ச் - 15
C.   மார்ச் - 21
D.   மார்ச் - 22
Answer: C.  மார்ச் - 21
6.  2013 ல் நடைபெற்ற விம்பிள்டன் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றவர் யார்?
A.   M. பர்டோலி
B.   S. லிஸிக்கி
C.   S. பென்ங்க்
D.   K. நாரா
Answer: A.  M. பர்டோலி
7.  ‘சர்வ சிக்‌ஷா அபியான்’ என்ற திட்டத்தின் நோக்கமாவது
A.   ஏழை மக்களுக்கு உணவளிக்கும் திட்டம்
B.   சிறார்களுக்கான கல்வி வழங்கும் திட்டம்
C.   வேலையற்றோருக்கு நிதி உதவி வழங்கும் திட்டம்
D.   ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவி வழங்கும் திட்டம்
Answer: B.  சிறார்களுக்கான கல்வி வழங்கும் திட்டம்
8.  கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று உலகின் நிலைப்பேறுடைய நகரம் என அழைக்கப்படுகிறது?
A.   ஏதென்ஸ்
B.   பெர்லின்
C.   கெய்ரோ
D.   ரோம்
Answer: D.  ரோம்
9.  தேசிய சராசரி கல்வியறிவு வீதத்தை விட குறைவான கல்வியறிவு வீதம் உள்ள மாநிலம்
A.   மேற்கு வங்காளம்
B.   மகாராஷ்டிரா
C.   ஆந்திர பிரதேசம்
D.   கர்நாடகா
Answer: C.  ஆந்திர பிரதேசம்
10.  பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
(a) மாநிலங்களவைத் துணைத்தலைவர் 1. ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார்
(b) மக்களவை சபாநாயகர் 2. மக்களவையால் நியமனம் செய்யப்படுகிறார்
(c) பொதுக் கணக்கு குழுவின் தலைவர் 3. மக்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
(d) மைய தலைமை தேர்தல் ஆணையர் 4. மாநிலங்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
A.   4 3 2 1
B.   2 3 4 1
C.   3 2 1 4
D.   1 3 2 4
Answer: A.  4 3 2 1
11.  “பிரதம அமைச்சர் அரசு என்கின்ற கப்பலின் கேப்டன்” என்று கூறியவர் யார்?
A.   மண்ட்ரோ
B.   ராம்சே மூர்
C.   ஜென்னிங்ஸ்
D.   H.J. லாஸ்கி
Answer: A.  மண்ட்ரோ
12.  கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு உறுப்புகளில் எந்த உறுப்பில் அரசியலமைப்புத் திருத்தமுறை குறிப்பிடப்பட்டுள்ளது?
A.   உறுப்பு 230
B.   உறுப்பு 320
C.   உறுப்பு 358
D.   உறுப்பு 368
Answer: D.  உறுப்பு 368
13.  கீழ்கண்ட வாக்கியங்களை கவனி
கூற்று (A) : இந்தியா ஒரு குடியரசு ஆட்சிஅமைப்பு முறை.
காரணம் (R) : இந்தியாவில் மரபு வழி தலைமையல்லாமல் மக்கள் தம் அரசை தாமாகவே தேர்ந்து எடுப்பார்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான விடையை தெரிவு செய்க.
A.   (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B.   (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C.   (A) சரி, ஆனால் (R) தவறு
D.   (A) தவறு, ஆனால் (R) சரி
Answer: A.  (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
14.  சர்க்காரியா குழுவின் தலைவர்
A.   இரஞ்சித் சிங் சர்க்காரியா
B.   இராஜீவ் சிங் சர்க்காரியா
C.   சிவராமன் சர்க்காரியா
D.   இரமேஷ் சிங் சர்க்காரியா
Answer: A.  இரஞ்சித் சிங் சர்க்காரியா
15.  பதினோராவது மக்களவையின் சபாநாயகர் யார்?
A.   பல்ராம் ஜாக்கர்
B.   சிவராஜ் படேல்
C.   பி.ஏ. சங்மா
D.   சோம்நாத் சாட்டர்ஜி
Answer: C.  பி.ஏ. சங்மா
16.  மாநிலத்தின் அட்வகேட் ஜெனரலை நியமனம் செய்பவர் யார்?
A.   குடியரசு தலைவர்
B.   பிரதம அமைச்சர்
C.   ஆளுநர்
D.   உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
Answer: C.  ஆளுநர்
17.  பட்டியல் I-உடன் பட்டியல் II-டினை பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியாகப் பொருத்துக.
பட்டியல் I பட்டியல் II
(a) லாலாலஜபதிராய் 1. வெடிகுண்டு தத்துவம்
(b) பகத்சிங் 2. சிட்டகாங் ஆயுதக் கிடங்கு தாக்குதல்
(c) சூரியா சென் 3. சாண்டரஸ் கொலை
(d) பகவதிசரண் வோரா 4. தீவிரவாத தேசியவாதி
A.   2 1 4 3
B.   3 4 1 2
C.   2 4 1 3
D.   4 3 2 1
Answer: D.  4 3 2 1
18.  வரிசை I-இல் உள்ளவற்றை வரிசை II-உடன் பொருத்துக. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
வரிசை I வரிசை II
(a) பெக் 1. லாகூர் மாநாடு
(b) ஆஸ்பால்ட் 2. முகமதியர் தற்காப்புச் சங்கம்
(c) ரெமத் அலி 3. முதல்வர், அலிகார் கல்லூரி
(d) பாகிஸ்தான் தீர்மானம் 4. பாகிஸ்தான் என்ற சொல்லாக்கம்
A.   2 3 4 1
B.   3 1 2 4
C.   1 4 3 2
D.   4 2 1 3
Answer: A.  2 3 4 1
19.  பின்வருவனவற்றுள் மங்கள் பாண்டே குறித்த சரியானதை தெரிவு செய்.
I. கொழுப்பு தடவிய துப்பாக்கியை பயன்படுத்த மறுத்தார்.
II. பெர்காம்பூரில் நிறுத்தப்பட்டிருந்த 19 ஆவது பிரிவை சார்ந்த சிப்பாய்.
III. பரக்பூரிலிருந்த 34 N.I படை பிரிவை சார்ந்தவர்.
IV. ஆங்கிலேயரால் தண்டிக்கப்படவில்லை.
A.   I மற்றும் II
B.   II மற்றும் IV
C.   II மற்றும் III
D.   I மற்றும் III
Answer: D.  I மற்றும் III
20.  சூர்தாஸ் யாருடைய சீடர்
A.   மாதவாச்சாரியர்
B.   வல்லபாச்சாரியர்
C.   நாமதேவர்
D.   ஏக்நாத்
Answer: B.  வல்லபாச்சாரியர்
21.  நம்பிக்கையில்லா தீர்மானம் முதன் முதலாக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபொழுது பிரதம அமைச்சராக இருந்தவர் யார்?
A.   ஜவகர்லால் நேரு
B.   இந்திரா காந்தி
C.   மொரார்ஜி தேசாய்
D.   லால்பகதூர் சாஸ்திரி
Answer: A.  ஜவகர்லால் நேரு
22.  வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட முக்கிய தாக்கும் ஆயுதம்
A.   வாள்
B.   கோடாரி
C.   ஈட்டி
D.   வில் மற்றும் அம்பு
Answer: D.  வில் மற்றும் அம்பு
23.  பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க.
இரும்புத்தாது படிவுகள் — மாநிலம்
I. பாபாபுடன் மலைகள் — கர்நாடகா
II. பாதம்பகார் — கோவா
III. டாலி ராஜ்ஹரா — ஒரிசா
IV. குண்டம்-சுர்லா — சட்டீஸ்கர்
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி?
A.   I மட்டும்
B.   I மற்றும் II
C.   II மற்றும் III
D.   II மற்றும் IV
Answer: A.  I மட்டும்
24.  பின்வரும் மாநிலங்களை மக்கள்தொகையோடு ஒப்பிடுக (2011).
(a) மணிப்பூர் 1. 29,64,007
(b) மேகாலயா 2. 19,80,602
(c) மிசோரம் 3. 27,21,756
(d) நாகாலாந்து 4. 10,91,014
A.   2 4 1 3
B.   1 2 3 4
C.   4 3 2 1
D.   2 1 4 3
Answer: A.  2 4 1 3
25.  கடலின் பரப்பளவை அதற்குரிய பேராழிகளுடன் பொருத்துக.
(a) அட்லாண்டிக் பெருங்கடல் 1. 165,000,000 km2
(b) இந்தியப் பெருங்கடல் 2. 82,000,000 km2
(c) பசிபிக் பெருங்கடல் 3. 73,000,000 km2
(d) ஆர்க்டிக் பெருங்கடல் 4. 14,090,000 km2
A.   3 1 2 4
B.   1 2 4 3
C.   4 3 2 1
D.   2 3 1 4
Answer: D.  2 3 1 4
;