TNPSC Group 2 2014 Preliminary Examination
General Tamil Questions 1 to 25
1.
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
தண்மை
தண்மை
A.
குளிர்ச்சி
B.
வெம்மை
C.
கடுமை
D.
மென்மை
Answer:
B.
வெம்மை
2.
'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே' எனப் பாடியவர்
A.
பாரதியார்
B.
பாரதிதாசன்
C.
கவிமணி
D.
நாமக்கல் கவிஞர்
Answer:
B.
பாரதிதாசன்
3.
பொருத்துக:
| நூல் | நூலாசிரியர் |
|---|---|
| (a) சிலப்பதிகாரம் | 1. திருத்தக்கதேவர் |
| (b) மணிமேகலை | 2. நாதகுத்தனார் |
| (c) சீவகசிந்தாமணி | 3. இளங்கோவடிகள் |
| (d) குண்டலகேசி | 4. சீத்தலைச் சாத்தனார் |
A.
2 3 1 4
B.
3 4 1 2
C.
3 4 2 1
D.
4 1 3 2
Answer:
B.
3 4 1 2
4.
பொருளறிந்து பொருத்துக:
| (a) திங்கள் | 1. நட்சத்திரம் |
| (b) வேந்தர் | 2. ஆகாயம் |
| (c) வானம் | 3. மாதம் |
| (d) விண்மீன் | 4. அரசர் |
A.
1 2 3 4
B.
2 3 4 1
C.
3 4 2 1
D.
4 1 2 3
Answer:
C.
3 4 2 1
5.
கீழ்வருவனவற்றுள் சரியான இணையைக் கண்டறிக.
A.
துடிப்பு -கோமகன்
B.
அனுமதி - ஜெயகாந்தன்
C.
ஆளுகை - டாக்டர் சி.என். அண்ணாதுரை
D.
சோணாசலம் - சுஜாதா
Answer:
A.
துடிப்பு -கோமகன்
6.
இவற்றில் எது அறிஞர் அண்ணா கூற்று?
A.
"பாட்டாளி ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று"
B.
"மெய்வைத்த செல்வமெங்கே ! மண்டலீகர்தம் மேடை எங்கே"
C.
"உள்ளத்தே பொருள் இருக்க புறம்பே பொருள் தேடுதல்"
D.
"மன்னருக்குத் தன் தேசமில்லாமல் இறப்பில்லை"
Answer:
A.
"பாட்டாளி ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று"
7.
தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க.
A.
இலக்கியம் - இலக்கு + இயம்
B.
செம்மொழி செம்மை + மொழி
C.
தமிழ்மொழி - தமிழ் + மொழி
D.
வேரூன்றிய - வேரு + ஊன்றிய
Answer:
D.
வேரூன்றிய - வேரு + ஊன்றிய
8.
ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிக.
இந்தச் செஞ்சுரி டென்ஷன் நிறைந்தது.
இந்தச் செஞ்சுரி டென்ஷன் நிறைந்தது.
A.
இந்த நூற்றாண்டு பரபரப்பானது
B.
இந்த ஆண்டு பதற்றம் நிறைந்தது
C.
இந்த நூற்றாண்டு மனக்கவலை அளிப்பது
D.
இந்த நூற்றாண்டு மன அழுத்தம் நிறைந்தது
Answer:
D.
இந்த நூற்றாண்டு மன அழுத்தம் நிறைந்தது
9.
பொருந்தா இணையைக் கண்டறிக.
A.
பாண்டியர் - கொற்கை
B.
சோழர் - காவிரிப்பூம்பட்டினம்
C.
பல்லவர்- விசாகப்பட்டினம்
D.
சேரர் - முசிறி
Answer:
C.
பல்லவர்- விசாகப்பட்டினம்
10.
பிரித்தெழுதுக :- 'கரியன்'
சரியாகப் பிரித்த தொடரைக் கண்டுபிடி
சரியாகப் பிரித்த தொடரைக் கண்டுபிடி
A.
கரு + அன்
B.
கருமை + அன்
C.
கரிய +அன்
D.
கரி + அன்
Answer:
B.
கருமை + அன்
11.
பொருத்துக:
| (a) திருக்கோவையார் | 1. சேக்கிழார் |
| (b) திருப்பாவை | 2. மாணிக்கவாசகர் |
| (c) கலிங்கத்துப்பரணி | 3. ஆண்டாள் |
| (d) பெரியபுராணம் | 4. செயங்கொண்டார் |
A.
1 2 3 4
B.
2 3 4 1
C.
4 2 1 3
D.
2 3 1 4
Answer:
B.
2 3 4 1
12.
விடைத் தேர்க:
“பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா
ஒருவன் தாயையும், நாட்டையும்
பழித்தவனாவான்” - என்று கூறியவர் யார்?
“பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா
ஒருவன் தாயையும், நாட்டையும்
பழித்தவனாவான்” - என்று கூறியவர் யார்?
A.
திரு.வி.க.
B.
மறைமலையடிகள்
C.
பரிதிமாற் கலைஞர்
D.
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
Answer:
A.
திரு.வி.க.
13.
விடைத்தேர்க:
"புதுநெறிகண்ட புலவர்" என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் எவர்?
"புதுநெறிகண்ட புலவர்" என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் எவர்?
A.
சேக்கிழார்
B.
தாயுமானவர்
C.
மாணிக்கவாசகர்
D.
இராமலிங்க அடிகளார்
Answer:
D.
இராமலிங்க அடிகளார்
14.
'இமயம் எங்கள் காலடியில்' என்ற கவிதைத் தொகுப்பு யாரால் எழுதப்பட்டது?
A.
சிற்பி பாலசுப்பிரமணியம்
B.
தாரா பாரதி
C.
ஆலந்தூர் கோ.மோகனரங்கன்
D.
சுரதா
Answer:
C.
ஆலந்தூர் கோ.மோகனரங்கன்
15.
இரண்டு உதடுகள் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள்
A.
ய், ர்
B.
க், ங்
C.
ல், ள்
D.
ப், ம்
Answer:
D.
ப், ம்
16.
எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை, யாரைச் சாரும்?
A.
பாரதிதாசன்
B.
பாரதியார்
C.
நாமக்கல் கவிஞர்
D.
கவிமணி
Answer:
B.
பாரதியார்
17.
கீழுள்ள பாரதிதாசன் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?
A.
குடும்ப விளக்கு
B.
பாண்டியன் பரிசு
C.
தேன் மழை
D.
குறிஞ்சித் திட்டு
Answer:
C.
தேன் மழை
18.
கீழ்க்காணும் தொடரில் வழூஉச் சொற்களற்ற தொடரைக் கண்டுபிடி
A.
வலதுபக்கச் சுவறில் எழுதாதே
B.
வலதுபக்கச் சுவரில் எழுதாதே
C.
வலப்பக்கச் சுவற்றில் எழுதாதே
D.
வலப்பக்கச் சுவரில் எழுதாதே
Answer:
D.
வலப்பக்கச் சுவரில் எழுதாதே
19.
'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' என வழங்கப் பெறும் நூல் எது?
A.
மணிமேகலை
B.
சிலப்பதிகாரம்
C.
வளையாபதி
D.
குண்டலக்கேசி
Answer:
B.
சிலப்பதிகாரம்
20.
திருக்குறள் பாயிர இயலில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A.
ஐந்து
B.
நான்கு
C.
இரண்டு
D.
மூன்று
Answer:
B.
நான்கு
21.
சந்திப்பிழையில்லாத தொடரைர்க் கண்டறிக?
A.
கைதொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
B.
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
C.
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
D.
கைத்தொழில் ஒன்றைக் கற்றுகொள்
Answer:
B.
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
22.
இனத்தில் சேராத ஒன்றைச் சுட்டுக
A.
அம்பி
B.
பஃறி
C.
திமில்
D.
புணரி
Answer:
D.
புணரி
23.
'எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் குடியரசுத் தலைவர்களாகவும்' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?
A.
சிங்கப்பூர், மொரிசியசு
B.
இலங்கை, மலேசியா
C.
அமெரிக்கா, கனடா
D.
தென் அமெரிக்கா, வட அமெரிக்கா
Answer:
A.
சிங்கப்பூர், மொரிசியசு
24.
பொருத்தமில்லாத எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி
A.
தேய்ந்து × வளர்ந்து
B.
குழப்பம் × தெளிவு
C.
நண்பர் × செறுநர்
D.
கரத்தல் × மறைத்தல்
Answer:
D.
கரத்தல் × மறைத்தல்
25.
விடைத்தேர்க:
'அகராதி' என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நூல் எது?
'அகராதி' என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நூல் எது?
A.
சதுரகராதி
B.
திருமந்திரம்
C.
திருவருட்பா
D.
திருக்குறள்
Answer:
B.
திருமந்திரம்