TNPSC Group 2 2014 Preliminary Examination
General Tamil Questions 76 to 100
76.
'துறவை மேல் நெறி' என்று உச்சத்தில் வைத்துப் படைக்கப்பட்டவை எவை?
Answer:
B.
அற இலக்கியங்கள்
77.
சங்கம் மருவிய கால நூல்களைக் கீழ்க்கணக்கு எனக் கூறும் பாட்டியல் நூல் எது?
Answer:
C.
பன்னிரு பாட்டியல்
78.
“ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து”
- எனும் குறளில் வள்ளுவர் எடுத்தாளும் உவமை எது?
தாக்கற்குப் பேருந் தகைத்து”
- எனும் குறளில் வள்ளுவர் எடுத்தாளும் உவமை எது?
Answer:
A.
ஆட்டுக்கடா
79.
"உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்றவர்
Answer:
A.
இராமலிங்க அடிகளார்
80.
பொருத்துதல்: பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
| (a) இகல் | 1. செல்வம் |
| (b) திரு | 2. ஆட்டுக்கடா |
| (c) பொருதகர் | 3. துன்பம் |
| (d) இடும்பை | 4. பகை |
Answer:
A.
4 1 2 3
81.
'பள்ளி வேலை நாட்களை நூற்றெண்பதிலிருந்து இரு நூறாக உயர்த்தியவர் யார்?
Answer:
A.
காமராசர்
82.
சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக?
Answer:
A.
திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப் படக்கருவி பயன்படுகிறது
83.
பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
Answer:
D.
அலுவலகத்தில் கையூட்டு வாங்கக் கூடாது
84.
மரபுப் பிழையற்ற வாக்கியம் எது?
Answer:
D.
குயில் கூவியது; மயில் அகவியது
85.
'அயர்ந்தவன்'-இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
Answer:
B.
அயர்
86.
பட்டியல் I ஐ பட்டியல் II இல் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) ஊண் | 1. மகிழ்வு |
| (b) ஊன் | 2. சனி |
| (c) கலி | 3. உணவு |
| (d) களி | 4. இறைச்சி |
Answer:
C.
3 4 2 1
87.
மரபுப்பிழையற்ற தொடரைக் கண்டுபிடி
Answer:
B.
காட்டில் புலி உறுமும் சிங்கம் முழங்கும்
88.
DUBBING - என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?
Answer:
C.
ஒலிச் சேர்க்கை
89.
'உரைநடை எழுதுவது தனது தொழில்' என்ற வகையில் உழைத்தவர்
Answer:
C.
திரு.வி.கலியாணசுந்தரனார்
90.
இவற்றுள் எது திருவள்ளுவருக்கு வழங்காத பெயர்?
Answer:
D.
காளிங்கர்
91.
கீழ்வருவனவற்றுள் பண்புத் தொகை அல்லாதன,
I. நெடுநீர்
II. உகுநீர்
III. செந்நீர்
IV. கண்ணீர்
I. நெடுநீர்
II. உகுநீர்
III. செந்நீர்
IV. கண்ணீர்
Answer:
B.
(II) மற்றும் (IV) சரி
92.
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற”
மேற்கண்ட குறட்பாவில் இடம்பெறும் "ஆகுல" என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல்லைத் தேர்க.
ஆகுல நீர பிற”
மேற்கண்ட குறட்பாவில் இடம்பெறும் "ஆகுல" என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல்லைத் தேர்க.
Answer:
C.
OVATION
93.
பொருத்துக.
| சொல் | தளை |
|---|---|
| (a) பாரி பாரி | 1. இயற்சீர் வெண்டளை |
| (b) பலர்புகழ் கபிலர் | 2. நேரொன்றியத்தளை |
| (c) தாமரைப்பூ குளத்தினிலே | 3. நிரையொன்றாசிரியத்தளை |
| (d) அகர முதல | 4. கலித்தளை |
Answer:
C.
2 3 4 1
94.
“ஈன்ற ஒருத்தியையும் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும் ஒருவன், 'தாய்', 'தாய்', 'தாய்' என்று போற்றுகிறான்” என்னும் கூற்று யாருடையது?
Answer:
C.
திரு.வி.க.
95.
விடைத் தேர்க:
“சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது” என்று கூறிய சமத்துவக் காவலர் யார்?
“சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது” என்று கூறிய சமத்துவக் காவலர் யார்?
Answer:
B.
டாக்டர். அம்பேத்கர்
96.
தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் எது?
Answer:
C.
கூந்தன்குளம்
97.
இந்தியா மிகப்பெரிய நாடு -எவ்வகை வாக்கியம்?
Answer:
B.
தனிநிலை வாக்கியம்
98.
பொருத்துக.
| (a) நடந்தான் | 1. தொழிற்பெயர் |
| (b) நடந்த | 2. வினையெச்சம் |
| (c) நடந்து | 3. பெயரெச்சம் |
| (d) நடத்தல் | 4. வினைமுற்று |
Answer:
A.
4 3 2 1
99.
“சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப புலன் உணர்ந்தோரே” என்று கூறியவர் யார்?
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப புலன் உணர்ந்தோரே” என்று கூறியவர் யார்?
Answer:
D.
தொல்காப்பியர்
100.
பிரித்தெழுதுக.
பரித்தியாகம்
பரித்தியாகம்
Answer:
C.
பரி + தியாகம்