GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 76 to 100

76.  ஆங்கிலச் சொல்லைக் கண்டறிக.
Answer: D.   உயில்
77.  எதிர்ச்சொற்களைப் பொருத்துக:
(a) அணுகு 1. தெளிவு
(b) ஐயம் 2. சோர்வு
(c) ஊக்கம் 3. பொய்மை
(d) உண்மை 4. விலகு
Answer: A.   4 1 2 3
78.  எதிர்ச்சொல்லைக் கண்டறிக:
எந்தை
Answer: A.   நுந்தை
79.  பிழையான தொடரைக் கண்டறிக.
Answer: D.   பெருமலையைக் கண்டதும் மக்கள் மழைத்து போய்விட்டனர்.
80.  கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்.
(1) அன்பு இருப்பது தான் உயிருள்ள உடல்
(2) அன்பு இல்லாதது உயிரற்ற உடல்
(3) அன்பு உடையவர்கள் தம் உடலும் பிறர்க்கே என்பர்
(4) அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கே என்பர்
Answer: B.   (2) மட்டும்
81.  "அன்றே யொழிய விடல்" என வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார்?
Answer: C.   நடுநிலை கடந்து உண்டாகும் செல்வம்
82.  கிளைஞரை அளக்கும் கோல் எது?
Answer: A.   நமக்கு வரும் துன்பம்
83.  கூற்று [A]: திருப்புகழில் அருணகிரிநாதர் தப்பாட்ட இசை குறித்துப் பதிவு செய்துள்ளார்.
காரணம் [R]: புலியைப் போன்று கருப்பும் மஞ்சளுமான வண்ணக் கோடுகளிட்டு, வீரத்தைக் காட்டி தப்பு இசைக்கேற்பத் தப்பாட்டத்தை ஆடுவர்.
Answer: A.   கூற்று [A] சரி; காரணம் [R] தவறு, [R] என்பது [A] இன் சரியான விளக்கம் அல்ல
84.  கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றைத் தேர்வு செய்க.
தென் திராவிட மொழிகள்
(1) தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம்
(2) தமிழ், கன்னடம், மலையாளம், குடகு
(3) தமிழ், மலையாளம், குடகு, கூயி
(4) தமிழ், குடகு, கூயி, குரூக்
Answer: B.   (2) மட்டும்
85.  கண்ணதாசன் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடு:
(i) 1949 ஆம் ஆண்டு கலங்காதிரு மனமே என்ற பாடலை எழுதித் திரைப்படப் பாடலாசிரியரானார்.
(ii) இயேசு காவியம் என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
(iii) இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார்.
Answer: D.   (i) மற்றும் (iii) மட்டும்
86.  வேலுநாச்சியார் கற்றறிந்த மொழிகளைக் கண்டறிக:
Answer: A.   தமிழ், ஆங்கிலம், உருது, பிரெஞ்சு
87.  "EVILDOER" என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ்ச்சொல் கண்டறிக.
Answer: C.   கெடுப்பவர்
88.  ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சொல்லை அறிந்து எழுதுக.
'Omniscient'
Answer: D.   எல்லாம் அறிந்த நிலை
89.  மறு ஆய்வு மனு என்பதை ஆங்கிலத்தில் _________ என்றழைப்பர்.
Answer: C.   Review Petition
90.  உவமைத் தொடர்களுக்கு ஏற்ற சரியான பொருளைப் பொருத்துக:
(a) ஆண்டிகள் மடம் கட்டியது போல 1. போலி
(b) ஆற்றில் கரைத்த புளி போல 2. மிக அரிது
(c) கரடி பிறை கண்டது போல 3. பயனற்ற செயல்
(d) உள்ளீடற்ற புதர் போல 4. உருவாகாத் திட்டம்
Answer: A.   4 3 2 1
91.  "நீர்மேல் எழுத்துப்போல" என்ற உவமைத்தொடரின் சரியான பொருளைத் தேர்க:
Answer: D.   நிலையற்ற தன்மை
92.  மரபுத் தொடர்களைப் பொருளோடு பொருத்துக:
(a) கானல் நீர் 1. விட்டுவிடுதல்
(b) கரையேறுதல் 2. உறுதியாகப்பற்றுதல்
(c) கைகழுவுதல் 3. கிடைக்காத ஒன்று
(d) குரங்குப்பிடி 4. துன்பத்திலிருந்து மீளுதல்
Answer: A.   3 4 1 2
93.  'கடுக்காய்க் கொடுத்தல்' என்னும் மரபுத்தொடரின் சரியான பொருளைக் கண்டறிக.
Answer: B.   ஏமாற்றுதல்
94.  பின்வரும் பழமொழி உணர்த்திடும் சரியானவற்றைக் குறிப்பிடுக.
"எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை
தாய்க்கும் எட்டே கடுக்காய்".
(a) இப்பழமொழி வேளாண்மை சார்ந்தது.
(b) எரு கெட்டார் என்பது மலச்சிக்கல் கொண்டவர்களை குறிக்கிறது.
(c) கடுக்காய் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து.
(d) பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.
Answer: A.   (b), (c), (d) - சரி
95.  போர்டு, அரசினர் இவர்களிடமிருந்து வரும் முக்கிய கடிதக் குறிப்புக்களின் தனிப்பதிவேடு :
விதிகள் மற்றும் விதிமுறைகள் :
அரசினரிடமிருந்து வரும் முக்கியமான நேர்முகக் கடிதங்கள், கடிதக் குறிப்புகள் இவற்றிற்குத் தயக்கமில்லாமல் விடைகள் அனுப்புவதைக் கவனிப்பதற்கு இது ஏற்பட்டது. இது இணைப்பு 'ஆ' - XVI எண் படிவத்தில் வைக்கப்பட வேண்டும். இதனை நேர்முக உதவியாளர் வைத்துவருவார், உடனுக்குடன் தயக்கமில்லாமல் இத்தகைய கடிதக் குறிப்புகளுக்கும் நினைவூட்டுகளுக்கும் விடை செல்வதை அவர் நேர்முகமாகக் கவனித்து வருவார். மாவட்ட ஆட்சியர் தலைமை இடத்தில் இருக்கும்போது அன்றாடம் அவருடைய பார்வைக்கு இது அனுப்பப்படவேண்டும்.

மாவட்ட ஆட்சித் தலைவரின் அன்றாடப் பார்வைக்கு அனுப்ப வேண்டிய
பதிவேட்டைக் கண்டறிக.
Answer: C.   கடிதக் குறிப்புக்களின் தனிப்பதிவேடு
96.  உயிரியியலில் "Abulomania" என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையான கலைச்சொல் தருக.
Answer: D.   மனநோய்
97.  தொழில்நுட்பச் சொற்களைப் பொருத்துக:
(a) Nautical mile 1. மணல் தொடுவரை
(b) Natric horizon 2. நெப்டியூனின் துணைக்கோள்
(c) Narbonnaise 3. 1852 மீ
(d) Nalad 4. மழை புயற்காற்று
Answer: A.   3 1 4 2
98.  கீழ்க்காணும் கலைச்சொற்களைப் பொருத்துக:
(a) Nanotechnology 1. அறிவாளர்
(b) Biotechnology 2. விண்வெளித் தொழில்நுட்பம்
(c) Spacetechnology 3. உயிர்த் தொழில்நுட்பம்
(d) Intellectual 4. மீநுண் தொழில்நுட்பம்
Answer: A.   4 3 2 1
99.  'Presbyoesophagus' எனும் கலைச்சொல்லுக்கு இணையான சொல்லைக் கண்டறிக.
Answer: B.   உணவுக்குழல் தளர்ச்சி அடைதல்
100.  வணிக மேலாண்மை குறித்த ஆங்கிலச் சொற்களைத் தமிழ்க் கலைச்சொற்களோடு பொருத்துக:
(a) Barter 1. வாராக் கடன்
(b) Bargaining 2. பண்டமாற்று
(c) Bad debt 3. கைப்பற்றப்பட்ட நிறுவனம்
(d) Acquiree 4. பேரம் பேசுதல்
Answer: C.   2 4 1 3
;