GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2025

Aptitude Questions 76 to 100

1.  3 ஆண்கள் அல்லது 4 பெண்கள் அல்லது 12 சிறுவர்கள் ஒரு வேலையை ஒரு நாளில் முடிப்பார்கள் எனில் 1 ஆண், 1 பெண் மற்றும் 5 சிறுவர்கள் இணைந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
A.   1 நாள்
B.   2 நாட்கள்
C.   3 நாட்கள்
D.   4 நாட்கள்
Answer: A.  1 நாள்
2.  8 செ.மீ விட்டமுள்ள கோளமானது உருக்கப்பட்டு 3 மி.மீ விட்டமுள்ள கம்பியாக உருவாக்கப்பட்டால், அக்கம்பியின் நீளம் ________.
A.   36.9 மீ
B.   37.9 மீ
C.   38.9 மீ
D.   39.9 மீ
Answer: B.  37.9 மீ
3.  ஒரு குறிப்பிட்ட தொகையானது கூட்டு வட்டி முறையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 13,380 ஆகவும், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 20,070 ஆகவும் வளர்ச்சி அடைகிறது எனில் அந்தத் தொகை எவ்வளவு?
A.   ரூ. 4,014
B.   ரூ. 8,460
C.   ரூ. 9,210
D.   ரூ. 8,920
Answer: D.  ரூ. 8,920
4.  ஒரு பள்ளியில் கணிதம், இயற்பியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்கான இடங்கள் 5 : 7 : 8 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. இந்த இடங்களை முறையே 40%, 50% மற்றும் 75% உயர்த்துவதற்கான நெறிமுறை பெறப்பட்டுள்ளது எனில் உயர்த்தப்படும் இடங்களின் விகிதம் என்னவாக இருக்கும்?
A.   2 : 3 : 4
B.   6 : 7 : 8
C.   6 : 8 : 9
D.   மேற்கண்ட எதுவுமில்லை
Answer: A.  2 : 3 : 4
5.  A, B மற்றும் C ஆகியோர் ஒரே திசையில் தொடங்கி ஒரு வட்ட வடிவமான அரங்கத்தை ஒரு முறை சுற்றி வர 'A' விற்கு 252 வினாடிகளும் 'B' விற்கு 308 வினாடிகளும் 'C' விற்கு 198 வினாடிகளும் ஆகின்றன எனில் இவர்கள் எந்த நேரத்தில் தொடங்கிய நிலையில் தொடங்கிய இடத்தில் சந்திப்பார்கள்?
A.   26 நிமிடங்கள் 18 வினாடிகள்
B.   45 நிமிடங்கள்
C.   46 நிமிடங்கள் 12 வினாடிகள்
D.   42 நிமிடங்கள் 36 வினாடிகள்
Answer: C.  46 நிமிடங்கள் 12 வினாடிகள்
6.  15 கி.கி சர்க்கரையின் விலை ரூ. 255, 17 கி.கி டீத்தூள் விலை ரூ. 1,615 மற்றும் 22 கி.கி அரிசியின் விலை ரூ. 572 எனில் 18 கி.கி சர்க்கரை, 21 கி.கி டீத்தூள் மற்றும் 27 கி.கி அரிசி ஆகியவற்றின் மொத்த விலை என்ன?
A.   ரூ. 2,442
B.   ரூ. 3,923
C.   ரூ. 3,003
D.   ரூ. 2,932
Answer: C.  ரூ. 3,003
7.  ஒரு நபரின் வருமானம் 10% உயர்த்தப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில் அவருடைய வருமானத்தில் ஏற்படும் மாற்ற விகிதத்தைக் காண்க.
A.   1% குறைகிறது
B.   1% கூடுகிறது
C.   2% குறைகிறது
D.   2% கூடுகிறது
Answer: A.  1% குறைகிறது
8.  அடுத்த உறுப்பு காண்.
64, 32, 48, 120, 420, _____
A.   1260
B.   1890
C.   1686
D.   2318
Answer: B.  1890
9.  குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள இலக்கங்கள்-எழுத்துக்கள்-குறியீடுகள் தொடரிலிருந்து கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிக்கவும்.
@18HLI6K*&?UE
இத்தொடரில் எத்தனை எண்கள் உயிரெழுத்தை தொடர்ந்தும், உயிர்மெய் எழுத்துக்கு முன்னும் அமைந்துள்ளது?
A.   இரண்டு
B.   நான்கு
C.   மூன்று
D.   ஒன்று
Answer: D.  ஒன்று
10.  45 மாணவர்கள் உள்ள வகுப்பில் ரவி 9 வது தரம் பெற்றுள்ளார். இராஜ்க்கு கீழே 18 மாணவர்கள் தரம் பெற்றுள்ளனர். ரவி மற்றும் ராஜ்க்கு இடைப்பட்ட தரம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை என்ன?
A.   27
B.   17
C.   18
D.   19
Answer: B.  17
11.  ஒன்பது வண்ண பெட்டிகள் சிவப்பு, கருப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், நீலம், ஆரஞ்ச், ஊதா, இளஞ்சிவப்பு இருக்கின்றன. ஆனால் அதே வரிசையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஐந்து பெட்டிகள் சிவப்பு மற்றும் வெள்ளை பெட்டிகளுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ளன. மஞ்சள் பெட்டியை வெள்ளை பெட்டிக்கு உடன் மேலே வைக்கப்பட்டுள்ளது. மூன்று பெட்டிகள் மட்டுமே மஞ்சள் மற்றும் பச்சை பெட்டிகளுக்கு இடையே உள்ளது. சிவப்பு மற்றும் பச்சை பெட்டிகளுக்கு இடையே உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையிலேயே கருப்பு மற்றும் மஞ்சள் பெட்டிகளுக்கு இடையில் உள்ளது. நீலப்பெட்டி, கருப்பு பெட்டிக்கு கீழே வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அது அடியில் வைக்கப்படவில்லை. நான்கு பெட்டிகளுக்கு மேல் மஞ்சள் மற்றும் நீலப் பெட்டிகளுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டி நீலப்பெட்டிக்கும் ஆரஞ்சு பெட்டிக்கும் இடையில் வைக்கப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு பெட்டி ஊதா பெட்டிக்கு மேல் வைக்கப்பட்டுள்ளது. எந்த பெட்டி கருப்பு பெட்டிக்கு மேலும், கீழும் இருக்கும்?
A.   இளஞ்சிவப்பு மற்றும் பச்சை
B.   இளஞ்சிவப்பு மற்றும் ஊதா
C.   பச்சை மற்றும் நீலம்
D.   இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு
Answer: A.  இளஞ்சிவப்பு மற்றும் பச்சை
12.  DANGER என்பது 10-7-20-13-11-24 என குறியிடப்பட்டிருந்தால், அதே குறியீட்டில் MACHINE என்னும் சொல்லின் குறியீடு
A.   13-7-20-9-11-25-15
B.   13-7-20-10-11-25-15
C.   19-7-9-15-14-11-20
D.   19-7-9-14-15-20-11
Answer: D.  19-7-9-14-15-20-11
13.  → என்பது கூட்டலையும்,
← என்பது கழித்தலையும்,
↑ என்பது வகுத்தலையும்,
↓ என்பது பெருக்கலையும்,
↗ என்பது சமம் என்பதையும் குறித்தால் கீழ்க்கண்டவற்றில் எது சரியானதாகும்?
A.   7 ← 43 ↑ 6 ↓ 1 ↗ 4
B.   3 ↓ 6 ↑ 2 → 3 ← 6 ↗ 5
C.   5 → 7 ← 3 ↑ 2 ↗ 4
D.   2 ↓ 5 ← 6 → 2 ↗ 6
Answer: D.  2 ↓ 5 ← 6 → 2 ↗ 6
14.  A, B மற்றும் C ஆகியோர் தனித்தனியாக ஒரு வேலையை முறையே 12 நாட்கள், 15 நாட்கள் மற்றும் 20 நாட்களில் செய்கின்றனர். இப்போது மூன்று பேரும் அவ்வேலையை ஒன்றாக செய்யத் துவங்குகின்றனர். ஆனால் C இரண்டு நாட்களில் வேலையை விட்டுவிடுகிறார் எனில், A-ம், B-ம் மீதமுள்ள வேலையை _________ நாட்களில் முடிப்பர்.
A.   4
B.   5
C.   6
D.   15
Answer: A.  4
15.  ஒரு சதுர வடிவிலான பூங்காவானது, அதன் அனைத்து பக்கங்களிலும் 2 மீ அகலமுள்ள ஒரே அளவிலான பாதையால் சூழப்பட்டுள்ளது. அந்தப் பாதையின் பரப்பளவு 288 ச.மீ எனில் அந்தப் பூங்காவின் சுற்றளவினைக் காண்க.
A.   124 மீ
B.   144 மீ
C.   100 மீ
D.   136 மீ
Answer: D.  136 மீ
16.  தனி வட்டியில், A என்பவர் ரூ. 16,000 தொகையை 12% ஆண்டு வட்டிக்கு கடன் வாங்குகிறார். தனி வட்டியில், B என்பவர் ரூ. 12,000 தொகையை 18% ஆண்டு வட்டிக்கு கடன் வாங்குகிறார். எத்தனை ஆண்டுகளில் இவர்களின் கடன் தொகை சமமாக இருக்கும்?
A.   \(12\dfrac{2}{3}\) ஆண்டுகள்
B.   \(14\dfrac{2}{3}\) ஆண்டுகள்
C.   \(16\dfrac{2}{3}\) ஆண்டுகள்
D.   \(18\dfrac{2}{3}\) ஆண்டுகள்
Answer: C.  \(16\dfrac{2}{3}\) ஆண்டுகள்
17.  ஒரு மனிதர் ரூ. 500 க்கு, 12 மேசைகள் மற்றும் நாற்காலிகள் வாங்குகிறார். ஒரு மேசையின் விலை ரூ. 50ம், ஒரு நாற்காலியின் விலை ரூ. 40 க்கும் வாங்குகிறார் எனில் அவர் வாங்கிய நாற்காலி மற்றும் மேசையின் விலையின் விகிதத்தைக் காண்க.
A.   5 : 1
B.   2 : 10
C.   10 : 5
D.   9 : 3
Answer: A.  5 : 1
18.  \(a\) மற்றும் \(a+2\) இவற்றின் மீ.பொ.மடங்கு 1300 எனில் \(a\) மற்றும் \(a+1\) இவற்றின் மீ.பொ.மடங்கு காண்க.
A.   1350
B.   2600
C.   2550
D.   2700
Answer: C.  2550
19.  இரு எண்கள் 15 : 11 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. அவற்றின் மீ.பொ.வ 13 எனில் அந்த எண்களைக் காண்க.
A.   585 மற்றும் 429
B.   195 மற்றும் 143
C.   390 மற்றும் 286
D.   117 மற்றும் 182
Answer: B.  195 மற்றும் 143
20.  15 மீ 17 செ.மீ நீளமும் 9 மீ 2 செ.மீ அகலமும் கொண்ட ஒரு அறையின் தளத்தை அமைக்கத் தேவையான சதுர ஓடுகளின் குறைந்தபட்ச எண்ணிக்கை என்ன?
A.   738
B.   814
C.   902
D.   656
Answer: B.  814
21.  \(\dfrac{a}{b}=\dfrac{4}{5}\) மற்றும் \(\dfrac{b}{c}=\dfrac{15}{16}\) எனில் \(\dfrac{c^2-a^2}{c^2+a^2}=\)
A.   \(\dfrac{1}{7}\)
B.   \(\dfrac{7}{25}\)
C.   \(\dfrac{3}{4}\)
D.   \(\dfrac{25}{7}\)
Answer: B.  \(\dfrac{7}{25}\)
22.  311 311 311 311 311 311 311 என்ற எண் ஆனது ________
A.   3 ஆலும் மீதியின்றி வகுபடாது, 11-றாலும் மீதியின்றி வகுபடாது
B.   11 ஆல் மீதியின்றி வகுபடும் ஆனால் 3 ஆல் மீதியின்றி வகுபடாது
C.   3 ஆல் மீதியின்றி வகுபடும் ஆனால் 11-ஆல் மீதியின்றி வகுபடாது
D.   3 மற்றும் 11 ஆல் மீதியின்றி வகுபடும்
Answer: A.  3 ஆலும் மீதியின்றி வகுபடாது, 11-றாலும் மீதியின்றி வகுபடாது
23.  \(A\rightarrow1,\ B\rightarrow2,\ C\rightarrow3,\ \ldots,\ Z\rightarrow26\) எனக் கொண்டால்
\(A^B+B^C+C^A\) என்பது _________ க்கு சமமாக இருக்காது.
A.   \(\sqrt{FX}\)
B.   \(S-G\)
C.   \((B)(E)\)
D.   \(L\)
Answer: C.  \((B)(E)\)
24.  ஒரு பகடையில் 1க்கு எதிரே 4 மற்றும் 2க்கு எதிரே 5 உள்ளது எனில்
A.   3 ஆனது 4 மற்றும் 6க்கு அருகே உள்ளது
B.   3 ஆனது 5 மற்றும் 6க்கு அருகே உள்ளது
C.   2 ஆனது 3 மற்றும் 6க்கு அருகே உள்ளது
D.   1 ஆனது 4 மற்றும் 6க்கு அருகே உள்ளது
Answer: C.  2 ஆனது 3 மற்றும் 6க்கு அருகே உள்ளது
25.  P என்பவர் Q ஐ விட பெரியவர். R என்பவர் Q-வை விட பெரியவர் ஆனால் Pஐ விட சிறியவர். S என்பவர் P ஐ விட பெரியவர் ஆனால் Tஐ விட சிறியவர். இதில் யார் மிகச்சிறியவர்?
A.   R
B.   T
C.   Q
D.   S
Answer: C.  Q
;