TNPSC Group 4 2012
Aptitude Questions 1 to 8
1.
இரு எண்களின் இசைச்சராசரி மற்றும் பெருக்கல் சராசரி, முறையே 6.4 மற்றும் 8 ஆகும். அவ்வெண்களாவன
Answer:
C.
4 மற்றும் 16
2.
அடுத்தடுத்து வரும் மூன்று முழு மதிப்புகளின் கூட்டுத்தொகை 540 எனில், அம்மதிப்புகளைக் காண்க.
Answer:
D.
179, 180, 181
3.
5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட குழு ஒன்றிலிருந்து இருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதில் ஒருவர் ஆணாகவும், மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு .................... ஆகும்.
Answer:
C.
\(\dfrac{5}{9}\)
4.
ஒரு பெட்டியில் ஒத்த அளவுள்ள 4 சிவப்பு, 5 நீலம் மற்றும் 6 பச்சை பந்துகள் உள்ளன. இரு பந்துகள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று நீலமாகவும் அடுத்தது பச்சையாகவும் இருக்க நிகழ்தகவு
Answer:
B.
\(\dfrac{5 \times 6 \times 2}{15 \times 14}\)
5.
ஒரு பூங்காவில் A, B, C, D மற்றும் E எனும் ஐந்து மாணவர்கள் வட்ட வடிவத்தில் அமர்ந்துள்ளனர். இவர்களில் A எனும் மாணவர் தென்மேற்கை பார்த்தும், D எனும் மாணவர் தென்கிழக்கைப் பார்த்தும் அமர்ந்துள்ளனர். B மற்றும் E எனும் மாணவர்கள் A மற்றும் D க்கு நேர் எதிராக உள்ளனர். மேலும் C எனும் மாணவர் D மற்றும் B க்கு சமதொலைவில் இருப்பின் C எனும் மாணவர் எத்திசையை நோக்கி இருப்பார்?
Answer:
D.
கிழக்கு
6.
ஒருவரின் மாத வருமானம் ரூ. 28.000. அவருடைய செலவினமும், சேமிப்பும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பொழுதுபோக்கிற்கு செலவிடும் தொகை யாது?
Answer:
B.
ரூ. 1960
7.
ஒரு வியாபாரியானவர் தன்னிடம் உள்ள பொருட்களை அடக்க விலையைவிட 20% கூடுதலாக விலை நிர்ணயம் செய்து குறிப்பிட்டு, பின் 10% தள்ளுபடியில் விற்பனை செய்கிறார் எனில், அவரது இலாப சதவீதம்
Answer:
B.
8%
8.
ஒரு வகுபடும் எண்ணின் வகுத்தியானது ஈவைப்போல் 12 மடங்கு, மீதியைப் போல் 5 மடங்கு உள்ளது. மேலும் மீதியானது 24 எனில், வகுபடும் எண்
Answer:
A.
1224