TNPSC Group 4 2013
Aptitude Questions 1 to 25
1.
2a×1a = 41a மற்றும் 2b×1b = 37b ஆகிய பெருக்கல்களில் a மற்றும் b என்பன மிகை முழு எண்களைக் குறித்தால், a + b=
Answer:
B.
11
2.
பின்வரும் எண்கள் தொடர்வரிசையில் பொருந்தாத எண்ணைக் கண்டுபிடி.
1, 144, 16, 25, 49, 81, 121, 36, 62
1, 144, 16, 25, 49, 81, 121, 36, 62
Answer:
D.
62
3.
2011-2012க்கான உலக தேயிலை உற்பத்தியில் 5 நாடுகளின் பங்கு:
வட்டத்தின் மையத்தில் E-ன் வட்டக்கோணம்
வட்டத்தின் மையத்தில் E-ன் வட்டக்கோணம்
Answer:
C.
54°
4.
ஒரு தேர்வில் 30% மாணாக்கியர் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. 40% மாணாக்கியர் ஹிந்திப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெறாதவர்கள் 20% என்றால் இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெற்ற மாணாக்கியரின் சதவிகிதம் என்ன?
Answer:
A.
50%
5.
ஒரு பகடையின் 3 நிலைகள் கீழேத் தரப்பட்டுள்ளது.
2 ஆல் குறித்த பக்கத்திற்கு எதிர்பக்க எண் யாது?
2 ஆல் குறித்த பக்கத்திற்கு எதிர்பக்க எண் யாது?
Answer:
B.
3
6.
RIVER என்பதை OFSBO எனும் குறியீட்டால் தரப்படின், WATER எனும் குறியீடு எதனைக் குறிக்கும்?
Answer:
B.
ZDWHU
7.
A என்பவர் ஒரு வேலையின் \(\dfrac{2}{3}\) பகுதியை 10 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையின் \(\dfrac{1}{3}\) பகுதியை A செய்து முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை
Answer:
C.
5 நாட்கள்
8.
குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில், ரூ. 800 ஆனது மூன்றாண்டுகளில் ரூ. 956 ஆக உயர்கிறது. தனிவட்டி வீதத்தை 4% அதிகரிப்பதால், மூன்றாண்டுகளுக்குப் பின் ரூ. 800ன் மதிப்பு, எந்தத் தொகையாக மாறும்?
Answer:
C.
ரூ. 1,052
9.
அமலா, ரூபாய் 6,000-த்தை ஒரு முதலீடு செய்கின்றார். இதில் முதலாண்டில் 4% வட்டியும், இரண்டாமாண்டில் 5% வட்டியும், மூன்றாமாண்டில் 10% வட்டியும் கிடைக்கும் எனில், மூன்றாமாண்டின் முடிவில் அமலா பெறும் தொகை யாது?
Answer:
D.
ரூ. 7,207.2
10.
கேள்விக் குறியிட்ட இடத்தில் வரும் எண் யாது?
Answer:
A.
9
11.
பின்வரும் தொடர்வரிசையில் தவறான எண் என்ன?
623, 251, 543, 356
623, 251, 543, 356
Answer:
A.
543
12.
பின்வரும் தொடர்வரிசையில் தவறான எண் என்ன?
121, 264, 312, 462, 583
121, 264, 312, 462, 583
Answer:
D.
312
13.
2+3 = 89, 3+4 = 2716, 4+3 = 649 எனில் 1+2= ?
Answer:
B.
14
14.
வெவ்வேறான 5 பொருட்கள் A, B, C, D மற்றும் E ஆகியவற்றை 1, 2, 3, 4, 5 எனக் குறிக்கப்பட்ட பெட்டிகளில் வைக்க வேண்டும். B மற்றும் E ஆகியவற்றை ஒன்றாக வைக்க முடியாது, எனில் பொருட்கள் வைக்கப்படாத பெட்டிகளின் அதிகபட்ச எண்ணிக்கை
Answer:
C.
3
15.
ABC என்ற பதிப்பகத்தின் இரு பிரிவு புத்தகங்களின் விற்பனை 2000-2010 (ஆயிரத்தில்)
2000 முதல் 2009 வரை எத்தனை ஆண்டுகள் அறிவியல் புத்தகங்கள் கலைப் புத்தகங்களை விட அதிகமாக விற்பனை செய்யப்பட்டது?
2000 முதல் 2009 வரை எத்தனை ஆண்டுகள் அறிவியல் புத்தகங்கள் கலைப் புத்தகங்களை விட அதிகமாக விற்பனை செய்யப்பட்டது?
Answer:
C.
6 ஆண்டுகள்
16.
A, K, L, R மற்றும் U என்ற ஐவர் ஒரு வட்டமேசையை சுற்றி அமர்கின்றனர். U-க்கு இடப்பக்கத்தில் Kவும் மற்றும் Aவுக்கும் Uவுக்கும் இடையில் R-ம் அமர்ந்திருந்தால் L-க்கு பக்கத்தில் இருபுறமும் அமர்ந்தவர்கள்
Answer:
A.
K மற்றும் A
17.
7 மீ ஆரமுள்ள ஒரு வட்ட வடிவ மைதானத்தை சுற்றி வெளிபுறம் 7 மீ அகலத்தில் ஒரு பாதை உள்ளது எனில் பாதையின் பரப்பளவு ____________. (\(\pi = \dfrac{22}{7}\))
Answer:
C.
462 ச.செ.மீ.
18.
ஒரு வேலையை முழுமையாக தனித்தனியே செய்து முடிக்க A, B, C ஆகியோருக்கு 12 நாட்கள், 6 நாட்கள் மற்றும் 3 நாட்கள் என்க. A, B இருவரும் வேலையை செய்ய ஆரம்பித்து மறுநாள் Cம் அவர்களோடு வேலையை செய்தால், அந்த வேலையை முழுமையாக செய்து முடிக்கத் தேவையான நாட்கள்
Answer:
A.
\(2\,\dfrac{2}{7}\) நாட்கள்
19.
கூட்டு வட்டி முறையில், ஒரு தொகையானது இரண்டு ஆண்டுகளில் ஒன்பது மடங்கு ஆகின்றது எனில், அதன் வட்டி வீதம் யாது?
Answer:
B.
200%
20.
சுருக்குக:
\(\displaystyle \sqrt[4]{\sqrt[3]{x^2}}\)
\(\displaystyle \sqrt[4]{\sqrt[3]{x^2}}\)
Answer:
A.
\(x^{\dfrac{1}{6}}\)
21.
விடுபட்ட படம் யாது?
Answer:
B.
22.
43, 91, 183 ஆகிய எண்களை எந்த மிகப் பெரிய எண்ணால் வகுக்கும் பொழுது மீதி சமமாக கிடைக்கும்?
Answer:
A.
4
23.
மீப்பெரு பொது காரணி 15 ஆக இருக்குமாறு எத்தனை ஜோடி எண்கள் 40க்கும் 100க்கும் இடையே இருக்கும்?
Answer:
B.
4
24.
ஒரு வட்டமான தோட்டத்தைச் சுற்றி ஒரே நேரத்தில் துவங்கி A, B, C, D என்பவர்கள் ஒரே திசையில் ஓடுகின்றனர். ஒரு முறை சுற்றி வர A, B, C, D என்பவர்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவு முறையே 30 நிமிடங்கள், 60 நிமிடங்கள், 90 நிமிடங்கள் மற்றும் 105 நிமிடங்கள் ஆகும். துவக்கப் புள்ளியில் எத்தனை மணிக்கு பிறகு இவர்கள் மீண்டும் சந்திப்பார்கள்?
Answer:
C.
21 மணி நேரம்
25.
எண்கள் 15, 25, 40 மற்றும் 75 ஆல் வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண் என்ன?
Answer:
A.
9600