GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2014

General Tamil Questions 1 to 25

1.  'கண்ணகி' எனும் சொல்லின் பொருள்
A.   கடும் சொற்களைப் பேசுபவள்
B.   கண் தானம் செய்தவள்
C.   கண்களால் நகுபவள்
D.   கண் தானம் பெற்றவள்
Answer: C.  கண்களால் நகுபவள்
2.  பகுதி I உடன் பகுதி II ஐப் பொருத்துக.
பகுதி I பகுதி II
(a) குறிஞ்சி 1. நெல்லரிதல்
(b) முல்லை 2. கிழங்ககழ்தல்
(c) மருதம் 3. உப்பு விற்றல்
(d) நெய்தல் 4. வரகு விதைத்தல்
A.   2 4 1 3
B.   1 3 2 4
C.   3 2 4 1
D.   4 3 2 1
Answer: A.  2 4 1 3
3.  வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்புடையது?
A.   பண்புத் தொகை
B.   வினைத் தொகை
C.   வேற்றுமைத் தொகை
D.   உம்மைத் தொகை
Answer: A.  பண்புத் தொகை
4.  வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?
A.   பள்ளு
B.   தூது
C.   கலம்பகம்
D.   அந்தாதி
Answer: B.  தூது
5.  பொருத்துக:
(a) வினைத் தொகை 1. நாலிரண்டு
(b) உவமைத் தொகை 2. செய்தொழில்
(c) உம்மைத் தொகை 3. பவள வாய் பேசினாள்
(d) அன்மொழித் தொகை 4. மதிமுகம்
A.   2 4 3 1
B.   4 2 3 1
C.   3 1 4 2
D.   2 4 1 3
Answer: D.  2 4 1 3
6.  'அவன் உழவன்' என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A.   தெரிநிலை வினைமுற்று
B.   குறிப்பு வினைமுற்று
C.   பெயர்ச் சொல்
D.   தொழிற்பெயர்
Answer: B.  குறிப்பு வினைமுற்று
7.  பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக.
A.   வயலில் மாடுகள் மேந்தது
B.   வயலில் மாடுகள் மேஞ்சது
C.   வயலில் மாடுகள் மேய்ந்தன
D.   வயலில் மாடுகள் மேய்ந்தது
Answer: C.  வயலில் மாடுகள் மேய்ந்தன
8.  பெயர்ச் சொல்லின் வகையறிதல் : நடிகன்
A.   பொருட்பெயர்
B.   பண்புப்பெயர்
C.   தொழிற்பெயர்
D.   காலப்பெயர்
Answer: C.  தொழிற்பெயர்
9.  பொன்னியிடம் தேன்மொழி தான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள் - எவ்வகைத் தொடர்?
A.   நேர்க்கூற்று
B.   அயற்கூற்று
C.   எதிர்மறைக் கூற்று
D.   கலவைத்தொடர்
Answer: B.  அயற்கூற்று
10.  பொருந்தாத சொல்லை தேர்வு செய்க
A.   பெறா அ
B.   தழிஇ
C.   அண்ணன்
D.   கொடுப்பதூஉம்
Answer: C.  அண்ணன்
11.  யாப்பு என்றால் ____________ என்பது பொருள்
A.   அடித்தல்
B.   சிதைத்தல்
C.   கட்டுதல்
D.   துவைத்தல்
Answer: C.  கட்டுதல்
12.  நாயக்கர் மரபில் முடிசூட்டிக் கொண்ட பெண்ணரசி யார்?
A.   மங்கையர்க்கரசி
B.   ஜான்ஸிராணி
C.   இராணி மங்கம்மாள்
D.   தடாதகைப் பிராட்டியார்
Answer: C.  இராணி மங்கம்மாள்
13.  'உலகின் எட்டாவது அதிசயம்' எனப் பாராட்டப்படுபவர்
A.   நைட்டிங்கேல்
B.   அன்னி சல்லிவான்
C.   கெலன் கெல்லர்
D.   பாலி தாம்சன்
Answer: C.  கெலன் கெல்லர்
14.  திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது?
A.   9
B.   7
C.   10
D.   133
Answer: B.  7
15.  தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல் எது?
A.   குறிஞ்சிப் பாட்டு
B.   முல்லைப் பாட்டு
C.   கலிப்பாடல்
D.   பரிபாடல்
Answer: A.  குறிஞ்சிப் பாட்டு
16.  'மனித நாகரிகத்தின் தொட்டில்' என அழைக்கப்படுவது எது?
A.   ஆப்பிரிக்கா
B.   இலெமூரியா
C.   சிந்து சமவெளி
D.   ஹரப்பா
Answer: B.  இலெமூரியா
17.  குமரகுருபரர் எழுதாத நூல்
A.   கந்தர் கலிவெண்பா
B.   மதுரைக் கலம்பகம்
C.   திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
D.   நீதிநெறி விளக்கம்
Answer: C.  திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
18.  தாயுமானவர் நினைவு இல்லம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
A.   தஞ்சாவூர்
B.   நாகப்பட்டினம்
C.   இராமநாதபுரம்
D.   புதுக்கோட்டை
Answer: C.  இராமநாதபுரம்
19.  தமிழகத்தின் 'வேர்ட்ஸ்வொர்த்' என்று புகழப்படுபவர்
A.   வாணிதாசன்
B.   வண்ணதாசன்
C.   பாரதிதாசன்
D.   சுப்புரத்தின தாசன்
Answer: A.  வாணிதாசன்
20.  குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் ____________ உயிர்வெளிப்படலத்தைச் சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
A.   குளோரோஃபுளுரோ கார்பன்
B.   ஈத்தேன்
C.   கதிரியக்கம்
D.   மீத்தேன்
Answer: A.  குளோரோஃபுளுரோ கார்பன்
21.  'திராவிடம்' என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்
A.   பெரியார்
B.   குமரிலபட்டர்
C.   கால்டுவெல்
D.   ஜி.யு. போப்
Answer: B.  குமரிலபட்டர்
22.  'சீர்திருத்தக் காப்பியம்' என்று பாராட்டப்படுவது
A.   சிலப்பதிகாரம்
B.   மணிமேகலை
C.   வளையாபதி
D.   குண்டலகேசி
Answer: B.  மணிமேகலை
23.  ஏற்றுமதி, இறக்குமதி குறித்துக் கூறும் நூல்கள் யாவை?
A.   நற்றிணை, கலித்தொகை
B.   பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி
C.   குறுந்தொகை, ஐங்குறுநூறு
D.   பரிபாடல், மலைபடுகடாம்
Answer: B.  பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி
24.  சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்
A.   பெருங்கதை
B.   குண்டலகேசி
C.   நாககுமார காவியம்
D.   மணிமேகலை
Answer: D.  மணிமேகலை
25.  பொருத்துக:
(a) நான்மணிமாலை 1. கவிதை
(b) மலரும் மாலையும் 2. சிற்றிலக்கியம்
(c) நான்மணிக்கடிகை 3. காப்பியம்
(d) தேம்பாவணி 4. நீதிநூல்
A.   2 1 4 3
B.   3 2 1 4
C.   2 3 1 4
D.   3 4 2 1
Answer: A.  2 1 4 3
;