GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2016

General Studies Questions 26 to 50

26.  புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது _______________ கல்வெட்டு
குறிப்பிடப்படுகிறது.
Answer: A.   குடுமியான் மலை
27.  களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி
Answer: A.   வஜ்ரநந்தி
28.  உலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள்
Answer: A.   இந்தியா மற்றும் வங்காளதேசம்
29.  குறுங்கோள்கள் இவைகளுக்கிடையே அமைந்துள்ளன
Answer: A.   செவ்வாய்க்கும் வியாழனுக்கும்
30.  பொருத்துக:
(a) கண்ட்லா 1. மகாராஷ்டிரம்
(b) ஜவஹர்லால் நேரு 2. குஜராத்
(c) பாரதீப் 3. மேற்கு வங்காளம்
(d) ஹால்தியா 4. ஒரிசா
Answer: D.   2 1 4 3
31.  பொருத்துக:
(a) சத்ய சோதக் சமாஜம் 1. இராமலிங்க அடிகள்
(b) ஜீவ காருண்யம் 2. ஜோதிபா பூலே
(c) தர்ம பரிபாலனம் 3. சுவாமி விவேகானந்தா
(d) ஜீவாவே சிவா 4. ஸ்ரீ நாராயண குரு
Answer: A.   2 1 4 3
32.  இந்திய பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்?
Answer: C.   1991
33.  இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?
Answer: B.   சூரத்
34.  நிகர நாட்டு உற்பத்தி என்பது
Answer: B.   மொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானம்
35.  வாழ்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகளுக்குக் கீழே ஒருவர் வாழும் வறுமை நிலையை இவ்வாறு கூறலாம்
Answer: A.   முழுமையான வறுமை
36.  ஒரு செவ்வக அறையில் சமதள ஆடிகள் பொருத்தப்பட்ட இரண்டு அடுத்தடுத்த சுவர்களுக்கு இடையே நீ நிற்கிறாய் எனில், உனது மொத்த பிம்பங்களின் எண்ணிக்கை எத்தனை?
Answer: C.   3
37.  முயலின் செவியுணர் நெடுக்கம்
Answer: C.   1,000 - 1,00,000 Hz
38.  காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டி வைக்கும் போது பழுப்பு நிறமாக மாறுவதேன்?
Answer: A.   காற்றிலுள்ள ஆக்ஸிஜன் மற்றும் பீனாலிக் சேர்மம் வினைபுரிவதால்
39.  பின்வருவனவற்றில் எது உயிரி-உரம் அல்ல?
Answer: C.   லின்டேன்
40.  கீழ்கண்ட கூற்றுகளை கவனி:
(a) இனப்பெருக்கச் செயல் குறைபாடு (மலட்டுத் தன்மை) வைட்டமின் K குறைவினால் ஏற்படுகிறது.
(b) மாலைக்கண் நோய் வைட்டமின் D குறைவினால் ஏற்படுகிறது.
Answer: A.   (a) மற்றும் (b) தவறானவை
41.  வலது வெண்ட்ரிக்கிலிலிருந்து (இதயக் கீழறை) நுரையீரத் தமனிக்கு இரத்தம் செல்வதை ஒழுங்குபடுத்தும் வால்வின் (அடைப்பான்) பெயர்
Answer: A.   பிறைசந்திர வால்வு
42.  வரிசை I உடன் வரிசை IIயை பொருத்துக:
வரிசை I வரிசை II
(a) கிளைக்காலிசிஸ் 1. ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுவதில்லை
(b) கிரெப் சுழற்சி 2. ATP-க்கள் உருவாகிறது
(c) எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி 3. பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்றம்
(d) நொதித்தல் 4. சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது
Answer: B.   4 3 2 1
43.  அமெரிக்காவின் கௌரவமிக்க விருதான லெமல்சன்-எம்ஐடி (Lemelson-MIT) 5,00,000 டாலர் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி அமெரிக்க விஞ்ஞானி யார்?
Answer: C.   ரமேஷ் ரஷ்கர்
44.  2016 ஆம் ஆண்டிற்கான அறிவியல் ஆராய்ச்சிக்கான GD பிர்லா விருதினை பெற்றவர் யார்?
Answer: D.   சஞ்சய் மிட்டல்
45.  இந்திய தலைமை தகவல் ஆணையர் ஆக செப்டம்பர், 2016ல் இருந்தவர் யார்?
Answer: C.   ஆர்.கே. மாத்தூர்
46.  “ஆப்ரேஷன் காம் டவுன்” என்பது எந்த மாநிலத்துடன் தொடர்பு உடையது?
Answer: C.   ஜம்மு காஷ்மீர்
47.  எந்த மின்கலம் வெப்பம் உயரும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டு, குளிர்ந்த நிலையில் மீண்டும் இயங்கத் தொடங்கும்?
Answer: B.   லித்தியம் அயனி
48.  2016 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் அமைப்பில், பெண்களின் சம உரிமை மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்காக, இந்தியாவின் சார்பாக நியமிக்கப்பட்ட தூதர் யார்?
Answer: C.   ஐஸ்வர்யா தனுஷ்
49.  கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் பெயர் என்ன?
Answer: A.   நமாமி கங்கா திட்டம்
50.  எந்த ராக்கெட் மூலம், விண்வெளி ஆராய்ச்சிக்காக INSAT-3DR-யை, கடந்த 8, செப்டம்பர், 2016 அன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது?
Answer: A.   GSLV-F05
;