GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2016

General Tamil Questions 26 to 50

1.  "யாழ் கேட்டு மகிழ்ந்தாள்" - இவ்வாக்கியத்தில் யாழ் என்பது
A.   சொல்லாகு பெயர்
B.   கருத்தாகு பெயர்
C.   காரியவாகு பெயர்
D.   கருவியாகு பெயர்
Answer: D.  கருவியாகு பெயர்
2.  வாரணம், பெளவம், பரவை, புணரி என்பது ________ யைக் குறிக்கும்.
A.   சிங்கம்
B.   கடல்
C.   மாலை
D.   சந்தனம்
Answer: B.  கடல்
3.  "எயிறு" என்றும் சொல் - சொல்லின் எவ்வகை?
A.   திரிசொல்
B.   இயற்சொல்
C.   வினைத் திரிசொல்
D.   பெயர்த் திரிசொல்
Answer: D.  பெயர்த் திரிசொல்
4.  அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
A.   எதுகை மட்டும் வந்துள்ளது
B.   எதுகையும், மோனையும் வந்துள்ளது
C.   எதுகை, மோனை, அந்தாதி வந்துள்ளன
D.   மோனை மட்டும் வந்துள்ளது
Answer: D.  மோனை மட்டும் வந்துள்ளது
5.  பெயரெச்சத்தை எடுத்து எழுது.
A.   படித்து
B.   எழுதி
C.   வந்த
D.   நின்றான்
Answer: C.  வந்த
6.  பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
(a) அறுவை வீதி 1. அந்தணர் வீதி
(b) கூல வீதி 2. பொற்கடை வீதி
(c) பொன் வீதி 3. ஆடைகள் விற்கும் வீதி
(d) மறையவர் வீதி 4. தானியக்கடை வீதி
A.   4 3 2 1
B.   3 4 2 1
C.   1 3 2 4
D.   2 1 3 4
Answer: B.  3 4 2 1
7.  துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு
A.   கலையரசி துணி தைத்தாள்
B.   கலையரசி தைத்தாள் துணி
C.   கலையரசி என்ன தைத்தாள்
D.   கலையரசி துணியைத் தைத்தாள்
Answer: D.  கலையரசி துணியைத் தைத்தாள்
8.  “ஒறுத்தாரை ஒன்றாக வையாரே" இத்தொடரில் "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு
A.   முற்றெச்சம்
B.   தொழிற்பெயர்
C.   வினையாலணையும் பெயர்
D.   வினையெச்சம்
Answer: C.  வினையாலணையும் பெயர்
9.  வா - என்னும் வேர்ச் சொல்லின் வினையெச்சத்தைக் கூறு
A.   வந்தான்
B.   வந்து
C.   வருதல்
D.   வந்த
Answer: B.  வந்து
10.  "உவமைத்தொகை" இலக்கண குறிப்பிற்கு பொருந்தாத சொல்லை காண்க
A.   கயல்விழி
B.   மலர் முகம்
C.   வெண்ணிலவு
D.   தாமரைக் கண்கள்
Answer: C.  வெண்ணிலவு
11.  "கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு" -இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை
A.   இன்னிசை அளபெடை
B.   செய்யுளிசை அளபெடை
C.   சொல்லிசை அளபெடை
D.   ஒற்றளபெடை
Answer: B.  செய்யுளிசை அளபெடை
12.  இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக் கொள்ளப்படும் வழுவை கண்டுபிடி
A.   வழுவமைதி
B.   வினாவழு
C.   காலவழு
D.   வழாநிலை
Answer: A.  வழுவமைதி
13.  ‘யவனர்' என பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர்
A.   ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர்
B.   கிரேக்கர், உரோமானியர்
C.   பிரெஞ்சுக்காரர், அமெரிக்கர்
D.   சீனர், மலேசியர்
Answer: B.  கிரேக்கர், உரோமானியர்
14.  தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருட்களை சரியாக காண்க.
A.   ஏலமும், இலவங்கமும்
B.   இஞ்சியும், மிளகும்
C.   பட்டும், சருக்கரையும்
D.   முத்தும், பவளமும்
Answer: C.  பட்டும், சருக்கரையும்
15.  இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு “இந்திய மாமணி" என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு
எது?
A.   1991
B.   1990
C.   1993
D.   1992
Answer: B.  1990
16.  “ஞானபோதினி” என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார்?
A.   முடியரசன்
B.   மு.சி. பூர்ணலிங்கம்
C.   நாமக்கல்லார்
D.   சுரதா
Answer: B.  மு.சி. பூர்ணலிங்கம்
17.  பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு
A.   1860
B.   1870
C.   1880
D.   1890
Answer: B.  1870
18.  காரைக்குடி மீ.சு.உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்
A.   சுரதா
B.   கண்ணதாசன்
C.   முடியரசன்
D.   நா.காமராசன்
Answer: C.  முடியரசன்
19.  வள்ளலார் பதிப்பித்த நூல்
A.   ஜீவகாருண்ய ஒழுக்கம்
B.   சின்மய தீபிகை
C.   இந்திர தேசம்
D.   வீரசோழியம்
Answer: B.  சின்மய தீபிகை
20.  கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்
A.   ஒளிப் பறவை
B.   சிரித்த முத்துக்கள்
C.   ஒரு கிராமத்து நதி
D.   நிலவுப் பூ
Answer: C.  ஒரு கிராமத்து நதி
21.  அகழாய்வில் "முதுமக்கள் தாழிகள்" கண்டுபிடிக்கப்பட்ட ஊர்
A.   தச்சநல்லூர்
B.   ஆதிச்சநல்லூர்
C.   பெரவல்லூர்
D.   பெரணமல்லூர்
Answer: B.  ஆதிச்சநல்லூர்
22.  பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர்
A.   முடியரசன்
B.   வாணிதாசன்
C.   சுரதா
D.   மோகனரங்கன்
Answer: B.  வாணிதாசன்
23.  "விடிவெள்ளி" என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர்
A.   ஈரோடு தமிழன்பன்
B.   மு. மேத்தா
C.   சாலை இளந்திரையன்
D.   சுரதா
Answer: A.  ஈரோடு தமிழன்பன்
24.  தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல்
A.   துறைமுகம்
B.   சுவரும் சுண்ணாம்பும்
C.   தேன்மழை
D.   இது எங்கள் கிழக்கு
Answer: C.  தேன்மழை
25.  எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு - எனக் கூறியவர்
A.   பாவாணர்
B.   காந்தி
C.   தெ.பொ.மீ
D.   அயோத்திதாசப் பண்டிதர்
Answer: A.  பாவாணர்
;