GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2016

General Tamil Questions 76 to 100

1.  பொங்கலை "அறுவடைத் திருவிழாவாகக்" கொண்டாடும் மேலை நாடுகள்
A.   இலங்கை, மலேசியா
B.   ஜப்பான், ஜாவா
C.   மொரீசியஸ், சிங்கப்பூர்
D.   இங்கிலாந்து, அமெரிக்கா
Answer: B.  ஜப்பான், ஜாவா
2.  இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்
A.   பொன்மனம்
B.   ஆர்த்து
C.   உற்றார்
D.   சார்பு
Answer: C.  உற்றார்
3.  பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
(a) இரண்டு சீர்களான அடி 1. நெடிலடி
(b) நான்கு சீர்களான அடி 2. கழிநெடிலடி
(c) ஐந்து சீர்களான அடி 3. குறளடி
(d) ஐந்துக்கும் அதிக சீரடி 4. அளவடி
A.   4 3 2 1
B.   2 1 3 4
C.   1 2 3 4
D.   3 4 1 2
Answer: D.  3 4 1 2
4.  அங்காப்பு என்பதன் பொருள்
A.   சலிப்படைதல்
B.   வாயைத் திறத்தல்
C.   அலட்டிக் கொள்ளுதல்
D.   வளைகாப்பு
Answer: B.  வாயைத் திறத்தல்
5.  “கார்குலாம்" எனும் சொல் - எவ்வேற்றுமைத் தொகையைக் குறிக்கும்?
A.   ஐந்தாம் வேற்றுமைத் தொகை
B.   மூன்றாம் வேற்றுமைத் தொகை
C.   ஆறாம் வேற்றுமைத் தொகை
D.   நான்காம் வேற்றுமைத் தொகை
Answer: C.  ஆறாம் வேற்றுமைத் தொகை
6.  பொருத்துதல்:
பட்டியல் I பட்டியல் II
(a) திணைமாலை நூற்றைம்பது 1. உ.வே. சாமிநாதைய்யர்
(b) திரிகடுகம் 2. கணிமேதாவியர்
(c) திணைமொழி ஐம்பது 3. நல்லாதனார்
(d) புறப்பொருள் வெண்பாமாலை 4. கண்ணஞ்சேந்தனார்
A.   3 1 2 4
B.   1 4 2 3
C.   2 3 4 1
D.   4 3 2 1
Answer: C.  2 3 4 1
7.  'இல்லை' - என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக.
A.   தெரிநிலை வினைமுற்று
B.   எதிர்மறை பெயரெச்சம்
C.   குறிப்பு வினைமுற்று
D.   வியங்கோள் வினைமுற்று
Answer: C.  குறிப்பு வினைமுற்று
8.  'Might is right' இதன் தமிழாக்கம்.
A.   'கடமையே உரிமை'
B.   'வல்லான் வகுத்ததே வாய்க்கால்'
C.   'வலிமையே சரியான வழி'
D.   ‘ஒற்றுமையே வலிமை'
Answer: B.  'வல்லான் வகுத்ததே வாய்க்கால்'
9.  பொருத்துக:
(a) குமரன், தென்னை 1. இடப்பெயர்
(b) காடு, மலை 2. காலப்பெயர்
(c) பூ, காய் 3. பொருட்பெயர்
(d) திங்கள், வாரம் 4. சினைப்பெயர்
A.   4 1 3 2
B.   3 1 4 2
C.   3 4 2 1
D.   2 3 1 4
Answer: B.  3 1 4 2
10.  அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்க
A.   நைதல் நாடு நொச்சி நுங்கு
B.   நுங்கு நொச்சி நாடு நைதல்
C.   நொச்சி நுங்கு நைதல் நாடு
D.   நாடு நுங்கு நைதல் நொச்சி
Answer: D.  நாடு நுங்கு நைதல் நொச்சி
11.  பொருத்துக
பிறமொழிச்சொல் தமிழ்ச்சொல்
(a) ஐதீகம் 1. விருந்தோம்பல்
(b) இருதயம் 2. சொத்து
(c) ஆஸ்தி 3. உலக வழக்கு
(d) உபசரித்தல் 4. நெஞ்சகம்
A.   2 3 1 4
B.   3 4 2 1
C.   4 1 2 3
D.   1 2 3 4
Answer: B.  3 4 2 1
12.  பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக
A.   சினிமா தியேட்டர் அருகாமையில் உள்ளது
B.   திருநெல்வேலி சமஸ்தானம் பெரியது
C.   விழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர்
D.   வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்
Answer: D.  வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்
13.  இலக்கணக் குறிப்பு அறிக. பட்டியல் I ஐ II உடன் பொருத்து
பட்டியல் I பட்டியல் II
(a) உரிச்சொற்றொடர் 1. சூழ்கழல்
(b) வினைத் தொகை 2. தழீஇய
(c) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் 3. தடக்கை
(d) சொல்லிசை அளபெடை 4. கூவா
A.   2 1 3 4
B.   3 1 4 2
C.   1 3 2 4
D.   4 1 2 3
Answer: B.  3 1 4 2
14.  ஜி.யு. போப் தொகுத்த நூலின் பெயர்
A.   கலம்பகம்
B.   காவலூர்க் கலம்பகம்
C.   கதம்பமாலை
D.   தமிழ்ச்செய்யுட் கலம்பகம்
Answer: D.  தமிழ்ச்செய்யுட் கலம்பகம்
15.  கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்
A.   மாங்கனி
B.   ஆயிரம் தீவு
C.   அங்கயற்கண்ணி
D.   இராச தண்டனை
Answer: D.  இராச தண்டனை
16.  வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில்
கூறினார்?
A.   இந்தியன் ஒப்பினியன்
B.   டிஸ்கவரி ஆப் இந்தியா
C.   தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்
D.   யங் இந்தியா
Answer: C.  தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்
17.  "நான் தனியாக வாழவில்லை
தமிழோடு வாழ்கிறேன்”
இக்கூற்றுக்குரியவர் தமிழ் மூச்சை விட்டு சென்ற நாள்
A.   1973 - செப்டம்பர் - 17
B.   1943 - செப்டம்பர் - 17
C.   1953 - 2 - 17
D.   1963 - செப்டம்பர் -17
Answer: C.  1953 - 2 - 17
18.  'சட்டை' என்ற சிறுகதையை எழுதியவர்
A.   பார்த்தசாரதி
B.   ஜெயகாந்தன்
C.   மீரா
D.   புதுமைப்பித்தன்
Answer: B.  ஜெயகாந்தன்
19.  "கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம்"
எனப் போற்றப்படும் நூல்
A.   இரட்சண்ய மனோகரம்
B.   இரட்சண்ய யாத்திரிகம்
C.   போற்றி திருவகல்
D.   தேம்பாவணி
Answer: D.  தேம்பாவணி
20.  "மருமக்கள் வழி மான்மியம்", என்ற நூலை எழுதியவர்
A.   கவிமணி
B.   சிவதாமு
C.   பாரதிதாசன்
D.   புதுமைப்பித்தன்
Answer: A.  கவிமணி
21.  "தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை"
என்று அழைக்கப்படுபவர்
A.   பெரியார்
B.   அம்பேத்கர்
C.   அயோத்திதாசப் பண்டிதர்
D.   இராமலிங்க அடிகளார்
Answer: C.  அயோத்திதாசப் பண்டிதர்
22.  பம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை
A.   சுகுணவிலாச சபை
B.   மாடர்ன் தியேட்டர்
C.   பாய்ஸ் கம்பெனி
D.   கூத்துப்பட்டறை
Answer: A.  சுகுணவிலாச சபை
23.  “இந்திய அரசியலில் சாணக்கியர்" என்று போற்றப்படுபவர்
A.   காந்தியடிகள்
B.   பாலகங்காதர திலகர்
C.   இராசகோபாலாச்சாரியார்
D.   சர்தார் வல்லபாய் படேல்
Answer: C.  இராசகோபாலாச்சாரியார்
24.  பூக்களில் சிறந்த பூ “பருத்திப் பூ" எனக் கூறியவர்
A.   சோமசுந்தரபாரதியார்
B.   திரு. வி. கலியாண சுந்தரனார்
C.   பாரதிதாசன்
D.   தாரா பாரதி
Answer: B.  திரு. வி. கலியாண சுந்தரனார்
25.  'குயில்' என்ற இதழை நடத்தியவர்
A.   சுரதா
B.   வாணிதாசன்
C.   பாரதியார்
D.   பாரதிதாசன்
Answer: D.  பாரதிதாசன்
;