TNPSC Group 4 2016
General Tamil Questions 51 to 75
1.
பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார்?
A.
விதுரன்
B.
துரியோதனன்
C.
தர்மன்
D.
சகுனி
Answer:
A.
விதுரன்
2.
நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர்
A.
பூரிக்கோ
B.
பாண்டியன் உக்கிர பெருவழுதி
C.
பன்னாடு தந்த மாறன் வழுதி
D.
உருத்திர சன்மார்
Answer:
C.
பன்னாடு தந்த மாறன் வழுதி
3.
“.......................... நெடுநீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்”
-இவ்வடிகள் இடம்பெறும் நூல்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்”
-இவ்வடிகள் இடம்பெறும் நூல்
A.
பெரியபுராணம்
B.
மணிமேகலை
C.
கம்பராமாயணம்
D.
சீவக சிந்தாமணி
Answer:
C.
கம்பராமாயணம்
4.
“புலனழுக்கற்ற அந்தணாளன்” - எனப் பாராட்டப்படுபவர்
A.
ஓதலாந்தையார்
B.
நக்கீரர்
C.
பரணர்
D.
கபிலர்
Answer:
D.
கபிலர்
5.
பொருந்தாத நூலை எடுத்து எழுதுக
A.
நான்மணிக்கடிகை
B.
நாலடியார்
C.
புறநானூறு
D.
இனியவை நாற்பது
Answer:
C.
புறநானூறு
6.
அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது
A.
மலையைப் போன்றது
B.
கடலைப் போன்றது
C.
வளர்பிறையைப் போன்றது
D.
தேய்பிறையைப் போன்றது
Answer:
C.
வளர்பிறையைப் போன்றது
7.
பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொட்ருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) ஒழுக்கத்தின் எய்துவர் | 1. செல்வம் நிலைக்காது |
| (b) இழுக்கத்தின் எய்துவர் | 2. மேன்மை |
| (c) பொறாமை உடையவரிடம் | 3. உயர்வு இருக்காது |
| (d) ஒழுக்கமில்லாதவரிடம் | 4. எய்தாப் பழி |
A.
2 4 1 3
B.
2 3 1 4
C.
1 4 2 3
D.
3 4 1 2
Answer:
A.
2 4 1 3
8.
வாய்மை எனப்படுவது
A.
குற்றமோடு பேசுதல்
B.
மற்றவர் வருந்த பேசுதல்
C.
சுடும் சொற்களைப் பேசுதல்
D.
தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
Answer:
D.
தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
9.
'கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்'
A.
சுந்தர காண்டம்
B.
அயோத்திய காண்டம்
C.
ஆரண்ய காண்டம்
D.
யுத்த காண்டம்
Answer:
A.
சுந்தர காண்டம்
10.
'நூறாசிரியம்' என்னும் கவிதை நூலின் ஆசிரியர்
A.
கவிஞர் மீரா
B.
கவிஞர் சுரதா
C.
கவிஞர் பெருஞ்சித்திரனார்
D.
மு. மேத்தா
Answer:
C.
கவிஞர் பெருஞ்சித்திரனார்
11.
'மடங்கல்' என்னும் சொல்லின் பொருள்
A.
மடக்குதல்
B.
புலி
C.
மடங்குதல்
D.
சிங்கம்
Answer:
D.
சிங்கம்
12.
அகநானூற்றின் கடைசி 100 பாடல்கள் அடங்கிய பகுதி
A.
களிற்று யானை நிரை
B.
மணிமிடைப் பவளம்
C.
நித்திலக் கோவை
D.
வெண்பாமாலை
Answer:
C.
நித்திலக் கோவை
13.
குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர்
A.
பூரிக்கோ
B.
நல்லாதனார்
C.
கணிமேதாவியார்
D.
கார்மேகப்புலவர்
Answer:
A.
பூரிக்கோ
14.
'உத்தர வேதம்' என்று அழைக்கப்படும் நூல்
A.
நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
B.
நாலடியார்
C.
திருக்குறள்
D.
இன்னாநாற்பது
Answer:
C.
திருக்குறள்
15.
பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க
A.
ஏலாதி
B.
ஆசாரக் கோவை
C.
திரிகடுகம்
D.
சிறுபஞ்சமூலம்
Answer:
B.
ஆசாரக் கோவை
16.
‘திரைக்கவித் திலகம்’ என்ற சிறப்புக்குரியவர்
A.
வாலி
B.
உடுமலை நாராயண கவி
C.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
D.
மருதகாசி
Answer:
D.
மருதகாசி
17.
‘சதகம்’ என்பது ———————— பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும். நிரப்புக
A.
10
B.
100
C.
400
D.
1000
Answer:
B.
100
18.
பொருத்துக:
| (a) வசன நடை கை வந்த வல்லாளர் | 1. இராமலிங்க அடிகள் |
| (b) புது நெறி கண்ட புலவர் | 2. நாமக்கல் கவிஞர் |
| (c) தைரியநாதர் | 3. ஆறுமுக நாவலர் |
| (d) காந்தியக் கவிஞர் | 4. வீரமாமுனிவர் |
A.
3 1 4 2
B.
3 4 2 1
C.
2 1 3 4
D.
1 4 2 3
Answer:
A.
3 1 4 2
19.
உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்
A.
ரா.பி. சேதுப்பிள்ளை
B.
கடிகை முத்துப்புலவர்
C.
சி. இலக்குவனார்
D.
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்
Answer:
D.
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்
20.
பொருத்துக:
| (a) சிறுமலை, பூம்பாறை | 1. முல்லை நில ஊர்கள் |
| (b) ஆற்காடு, பனையபுரம் | 2. நெய்தல் நில ஊர்கள் |
| (c) ஆத்தூர், கடம்பூர் | 3. குறிஞ்சி நில ஊர்கள் |
| (d) கீழக்கரை, நீலாங்கரை | 4. மருத நில ஊர்கள் |
A.
2 1 3 4
B.
3 4 2 1
C.
3 1 4 2
D.
4 2 1 3
Answer:
C.
3 1 4 2
21.
இதில் 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்பது யாருடைய மொழி
A.
கணியன் பூங்குன்றனார்
B.
பாரதியார்
C.
ஔவையார்
D.
கம்பர்
Answer:
C.
ஔவையார்
22.
"இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்!
அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார்.
என்றும் வாழ்வார்” — யார்?
அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார்.
என்றும் வாழ்வார்” — யார்?
A.
உ.வே. சாமிநாதர்
B.
ஜி.யு. போப்
C.
கால்டுவெல்
D.
வீரமாமுனிவர்
Answer:
B.
ஜி.யு. போப்
23.
“இந்திய நூலகத் தந்தை" எனப் போற்றப்படுபவர்
A.
சி.இராமநாதன்
B.
சி.இரா.அரங்கநாதன்
C.
ப. கமலநாதன்
D.
ம. இளந்திரையன்
Answer:
B.
சி.இரா.அரங்கநாதன்
24.
“வினையே ஆடவர்க்குயிர்” எனக் கூறும் நூல்
A.
குறுந்தொகை
B.
கலித்தொகை
C.
புறநானூறு
D.
பரிபாடல்
Answer:
A.
குறுந்தொகை
25.
"மனமொத்த நட்புக்கு
வஞ்சகம் செய்யாதே”
-இக்கூற்றை கூறியவர்
வஞ்சகம் செய்யாதே”
-இக்கூற்றை கூறியவர்
A.
கணியன் பூங்குன்றனார்
B.
கம்பர்
C.
உமறுப்புலவர்
D.
வள்ளலார்
Answer:
D.
வள்ளலார்