GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2016

General Tamil Questions 1 to 25

1.  மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில் உறங்கிய போது கவரி வீசிய மன்னன் யார்?
A.   சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
B.   பாண்டியன் நெடுஞ்செழியன்
C.   கோப்பெருஞ்சோழன்
D.   முதலாம் குலோத்துங்கன்
Answer: A.  சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
2.  பொருத்துக:
(a) கவுந்தியடிகள் 1. ஆயர்குல மூதாட்டி
(b) மாதரி 2. மாநாய்கனின் மகள்
(c) மாதவி 3. சமணத்துறவி
(d) கண்ணகி 4. ஆடலரசி
A.   (A) 3, 1, 4, 2
B.   (B) 2, 4, 1, 3
C.   (C) 3, 4, 2, 1
D.   (D) 1, 3, 2, 4
Answer: C.  (C) 3, 4, 2, 1
3.  கடிகை என்பதன் பொருள் யாது?
A.   அணிகலன்
B.   கடித்தல்
C.   கடுகு
D.   காரம்
Answer: A.  அணிகலன்
4.  'கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா' எனக் கூறும் நூல்
A.   நான்மணிக்கடிகை
B.   பழமொழி நானூறு
C.   ஏலாதி
D.   திரிகடுகம்
Answer: B.  பழமொழி நானூறு
5.  "வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து" எனத் திருக்குறளை பாராட்டியவர்
A.   பரிமேலழகர்
B.   கபிலர்
C.   மாங்குடி மருதனார்
D.   பரணர்
Answer: B.  கபிலர்
6.  நூல் - நூலாசிரியர் அறிதல்
பட்டியல் I பட்டியல் II
(a) சயங்கொண்டார் 1. சடகோபரந்தாதி
(b) காரியாசான் 2. புறநானூறு
(c) கம்பர் 3. கலிங்கத்துப்பரணி
(d) கண்ணகனார் 4. சிறுபஞ்சமூலம்
A.   3, 4, 1, 2
B.   1, 2, 4, 3
C.   2, 1, 3, 4
D.   3, 2, 4, 1
Answer: A.  3, 4, 1, 2
7.  "என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்" - என்ற வரிகளைப் பாடியவர்
A.   திருப்பாணாழ்வார்
B.   குலசேகராழ்வார்
C.   பேயாழ்வார்
D.   ஆண்டாள்
Answer: B.  குலசேகராழ்வார்
8.  "செறு" என்பதன் பொருள்
A.   செருக்கு
B.   சேறு
C.   வயல்
D.   சோறு
Answer: C.  வயல்
9.  திருக்குறளில் "ஏழு" என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?
A.   11
B.   09
C.   08
D.   10
Answer: C.  08
10.  கீழ்க்கண்ட நூற்களில் "தமிழ் மூவாயிரம்” என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?
A.   திரிகடுகம்
B.   திருவள்ளுவமாலை
C.   திருமந்திரம்
D.   திருக்குறள்
Answer: C.  திருமந்திரம்
11.  "தொண்டர்சீர் பரவுவார்" என்று போற்றப்படுபவர் யார்?
A.   அப்பூதியடிகள்
B.   திருநாவுக்கரசர்
C.   சேக்கிழார்
D.   திருஞானசம்பந்தர்
Answer: C.  சேக்கிழார்
12.  யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?
A.   கவுந்தியடிகள்
B.   மாதவி
C.   அறவணவடிகள்
D.   கண்ணகி
Answer: C.  அறவணவடிகள்
13.  'தண்டமிழ் ஆசான் சாத்தன் நன்னூற் புலவன்' என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்:
A.   கம்பர்
B.   இளங்கோவடிகள்
C.   திருத்தக்க தேவர்
D.   காரியாசான்
Answer: B.  இளங்கோவடிகள்
14.  கம்பரைப் புரந்தவர் யார்?
A.   ஒட்டக்கூத்தர்
B.   சடையப்ப வள்ளல்
C.   சீதக்காதி
D.   சந்திரன் சுவர்க்கி
Answer: B.  சடையப்ப வள்ளல்
15.  ஜி.யு. போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
A.   பிரெஞ்சு
B.   கிரேக்கம்
C.   ஆங்கிலம்
D.   ஜெர்மன்
Answer: C.  ஆங்கிலம்
16.  நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு?
A.   2004
B.   2003
C.   2005
D.   2002
Answer: A.  2004
17.  குரூக், மால்தோ, பிராகுயி என்பன
A.   தென் திராவிட மொழிகள்
B.   நடுத்திராவிட மொழிகள்
C.   வடதிராவிட மொழிகள்
D.   மேலை நாட்டு மொழிகள்
Answer: C.  வடதிராவிட மொழிகள்
18.  "ஓர் இலட்சிய சமூகம் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது" என்றவர்
A.   பெரியார்
B.   அண்ணல் அம்பேத்கார்
C.   காந்தியடிகள்
D.   திரு.வி.க.
Answer: B.  அண்ணல் அம்பேத்கார்
19.  திரு.வி. கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது?
A.   முருகன் அல்லது அழகு
B.   சித்திரக்கவி
C.   உரிமை வேட்டல்
D.   தமிழ்ச் சோலை
Answer: B.  சித்திரக்கவி
20.  பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக
A.   சூசையப்பர் தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர்
B.   திருமந்திரம் சைவத்திருமுறைகளில் பத்தாவது திருமுறை
C.   சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
D.   மதங்க குளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்
Answer: D.  மதங்க குளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்
21.  தமிழக அரசு, கவிஞர் சாலை இளந்திரையருக்கு வழங்கிய விருது
A.   பாவேந்தர் விருது
B.   பாரதியார் விருது
C.   கலைமாமணி விருது
D.   கவிச்செம்மல் விருது
Answer: A.  பாவேந்தர் விருது
22.  ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு
A.   1786
B.   1806
C.   1856
D.   1886
Answer: D.  1886
23.  'மணநூல்' என அழைக்கப்பெறும் நூல்
A.   சிலப்பதிகாரம்
B.   மணிமேகலை
C.   சீவக சிந்தாமணி
D.   குண்டலகேசி
Answer: C.  சீவக சிந்தாமணி
24.  பொருத்துக:
(a) சிந்தை 1. நீர்
(b) நவ்வி 2. மேகம்
(c) முகில் 3. எண்ணம்
(d) புனல் 4. மான்
A.   2 1 3 4
B.   1 3 4 2
C.   3 4 2 1
D.   4 3 1 2
Answer: C.  3 4 2 1
25.  ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
(a) Writs 1. வாரிசுரிமைச் சட்டம்
(b) Succession Act 2. உரிமைச் சட்டங்கள்
(c) Substantive Law 3. சான்றுச் சட்டம்
(d) Evidence Act 4. சட்ட ஆவணங்கள்
A.   1 3 4 2
B.   4 1 2 3
C.   2 4 3 1
D.   1 2 3 4
Answer: B.  4 1 2 3
;