GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2016

General Studies Questions 51 to 74

1.  பாட்மிண்டன் விளையாட்டுக்காக 2016 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றவர்?
A.   சாக்‌ஷி மாலிக்
B.   மேரி கோம்
C.   பிரதீப் குமார்
D.   பி.வி. சிந்து
Answer: D.  பி.வி. சிந்து
2.  எந்த வருடத்தை சர்வதேச பருப்பு வருடமாக ஐ. நா. அமைப்பு அறிவித்தது?
A.   2012
B.   2013
C.   2016
D.   2015
Answer: C.  2016
3.  பொருத்துக:
பகுதி-I பகுதி-II
(a) ராஜ்பவன் 1. ஜனாதிபதி
(b) ராஷ்டிரபதி பவன் 2. ஆளுநர்
(c) இராஜதுரோக விசாரணை 3. யூனியன் பிரதேசங்கள்
(d) துணைநிலை ஆளுநர் 4. அரசியலமைப்பு மீறல்
A.   1 4 3 2
B.   2 3 4 1
C.   4 2 3 1
D.   2 1 4 3
Answer: D.  2 1 4 3
4.  மாநில அளவில் தேர்தல் நடைமுறையை மேற்பார்வையிடுபவர்
A.   தலைமை தேர்தல் ஆணையர்
B.   உச்சநீதிமன்ற நீதிபதி
C.   தலைமை தேர்தல் அதிகாரி
D.   உயர்நீதிமன்ற நீதிபதி
Answer: C.  தலைமை தேர்தல் அதிகாரி
5.  சரியான வாக்கியத்தை கண்டுபிடி.
இந்திய அரசியலமைப்பு _______________ கொண்டுள்ளது.
A.   XXII பாகங்கள், 449 சரத்துகள் மற்றும் 12 அட்டவணைகள்
B.   XXI பாகங்கள், 438 சரத்துகள் மற்றும் 8 அட்டவணைகள்
C.   XXIII பாகங்கள், 469 சரத்துகள் மற்றும் 21 அட்டவணைகள்
D.   XX பாகங்கள், 428 சரத்துகள் மற்றும் 18 அட்டவணைகள்
Answer: A.  XXII பாகங்கள், 449 சரத்துகள் மற்றும் 12 அட்டவணைகள்
6.  பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
A.   காந்தியடிகள் படுகொலை - ஜனவரி 30, 1948
B.   குடியரசு தினம் - ஜனவரி 26, 1950
C.   சுதந்திர தினம் - ஆகஸ்டு 15, 1947
D.   தேசிய கீதத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்காள்ளுதல் - ஜனவரி 23, 1950
Answer: D.  தேசிய கீதத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்காள்ளுதல் - ஜனவரி 23, 1950
7.  பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
A.   குடியரசுத் தலைவர் - அரசியலமைப்பின் பாதுகாவலர்
B.   முதலமைச்சர் - ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
C.   உச்சநீதிமன்றம் - சிறப்பான அடையாளங்கள்
D.   தேசிய கீதம் - பக்கிம் சந்திர சட்டர்ஜி
Answer: B.  முதலமைச்சர் - ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
8.  நுகர்வோர் நீதிமன்றங்கள் _______________ அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன.
A.   2
B.   3
C.   4
D.   5
Answer: B.  3
9.  தலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன்
A.   சேவப்ப நாயக்கர்
B.   அச்சுதப்ப நாயக்கர்
C.   இரகுநாத நாயக்கர்
D.   சரபோஜி மன்னன்
Answer: B.  அச்சுதப்ப நாயக்கர்
10.  சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது?
A.   உத்திரமேரூர் கல்வெட்டு
B.   அலகாபாத் தூண் கல்வெட்டு
C.   ஐஹோலே கல்வெட்டு
D.   அசோகரின் கல்வெட்டு
Answer: B.  அலகாபாத் தூண் கல்வெட்டு
11.  டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்?
A.   இப்ராகிம் லோடி
B.   சிக்கந்தர் லோடி
C.   இப்ராகிம் அலி
D.   தௌலத் கான் லோடி
Answer: A.  இப்ராகிம் லோடி
12.  நாளந்தாப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
A.   குமார குப்தர்
B.   ஸ்ரீ குப்தர்
C.   சந்திர குப்தர்
D.   சமுத்திர குப்தர்
Answer: A.  குமார குப்தர்
13.  குதிரை குளம்பு ஏரி உருவாகும் பகுதி
A.   பள்ளத்தாக்கு பகுதி
B.   மலைப் பகுதி
C.   சமவெளிப் பகுதி
D.   டெல்டா பகுதி
Answer: C.  சமவெளிப் பகுதி
14.  மிகக்குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை
A.   NH 48
B.   NH 9
C.   NH 45 A
D.   NH 47 A
Answer: D.  NH 47 A
15.  கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
(a) சாம்பல் புரட்சி 1. எண்ணெய் வித்துக்கள்
(b) பொன் புரட்சி 2. முட்டை மற்றும் கோழிப்பண்ணை
(c) மஞ்சள் புரட்சி 3. கடல் பொருட்கள்
(d) நீலப்புரட்சி 4. பழங்கள் உற்பத்தி
A.   2 4 1 3
B.   4 2 3 1
C.   3 1 4 2
D.   2 1 4 3
Answer: A.  2 4 1 3
16.  ‘சத்யமேவ ஜெயதே’ என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் வாய்மையே வெல்லும் என்று மாற்றியவர்
A.   அரவிந்த் கோஷ்
B.   பெரியார்
C.   காமராசர்
D.   அண்ணாத்துரை
Answer: D.  அண்ணாத்துரை
17.  Dr. B.R. அம்பேத்கர் எந்த ஊரில் பிறந்தார்?
A.   மகவு
B.   மக்காவ்
C.   சரயு
D.   லக்னோ
Answer: A.  மகவு
18.  வ.உ.சி. சிறைத் தண்டனை எத்தனை ஆண்டுகள் பெற்றார்?
A.   30
B.   35
C.   40
D.   34
Answer: C.  40
19.  “நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்து விட்டது” எனக் கூறியவர் யார்?
A.   வல்லபாய் படேல்
B.   Dr. இராஜேந்திர பிரசாத்
C.   மவுண்ட் பேட்டன்
D.   ஜவஹர்லால் நேரு
Answer: D.  ஜவஹர்லால் நேரு
20.  மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
A.   மதன் மோகன் மாளவியா
B.   W.C. பானர்ஜி
C.   பெரோஷா மேத்தா
D.   சுரேந்திரநாத் பானர்ஜி
Answer: B.  W.C. பானர்ஜி
21.  இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு காரணமான நிறுவனம்
A.   இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CSIR)
B.   இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR)
C.   இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)
D.   இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR)
Answer: B.  இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR)
22.  மக்கள் தொகை இவ்விகிதத்தில் அதிகரிக்கிறது என்று ராபர்ட் மால்தஸ் கூறியது
A.   விகிதாச்சார விகிதத்தில்
B.   பெருக்கல் விகிதத்தில்
C.   கூட்டு விகிதத்தில்
D.   சிறு விகிதத்தில்
Answer: B.  பெருக்கல் விகிதத்தில்
23.  1966 – 69 ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) பின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?
A.   இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்
B.   ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்
C.   மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்
D.   நான்காம் ஐந்தாண்டு திட்டம்
Answer: D.  நான்காம் ஐந்தாண்டு திட்டம்
24.  “பச்பான் பச்சோவ் அந்தோலன்” என்ற அமைப்பு கீழ்க்கண்டவற்றுள் எதற்காக செயல்படுகிறது?
A.   குழந்தை தொழிலாளி
B.   கொத்தடிமை
C.   பாலிய விவாகம்
D.   வறுமை ஒழிப்பு
Answer: A.  குழந்தை தொழிலாளி
25.  “மருந்துகளின் இராணி” என அழைக்கப்படும் மருந்து பொருள் எது?
A.   அட்ரோபின்
B.   பாலிமிக்சின்
C.   ஸ்ட்ரெப்டோமைசின்
D.   பெனிசிலின்
Answer: D.  பெனிசிலின்
;