GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 1 to 25

1.  மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில்
உறங்கிய போது கவரி வீசிய மன்னன்
Answer: A.   சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
2.  பொருத்துக:
(a) கவுந்தியடிகள் 1. ஆயர்குல மூதாட்டி
(b) மாதரி 2. மாநாய்கனின் மகள்
(c) மாதவி 3. சமணத்துறவி
(d) கண்ணகி 4. ஆடலரசி
Answer: A.   3 1 4 2
3.  கடிகை என்பதன் பொருள் யாது?
Answer: A.   அணிகலன்
4.  'கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா'
- எனக் கூறும் நூல்
Answer: B.   பழமொழி நானூறு
5.  "வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார்
உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து"
- எனத் திருக்குறளை பாராட்டியவர்
Answer: D.   பரணர்
6.  நூல் - நூலாசிரியர் அறிதல்
பட்டியல் I பட்டியல் II
(a) சயங்கொண்டார் 1. சடகோபரந்தாதி
(b) காரியாசான் 2. புறநானூறு
(c) கம்பர் 3. கலிங்கத்துப்பரணி
(d) கண்ணகனார் 4. சிறுபஞ்சமூலம்
Answer: A.   3 4 1 2
7.  "என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்"
- என்ற வரிகளைப் பாடியவர்
Answer: B.   குலசேகராழ்வார்
8.  "செறு" என்பதன் பொருள்
Answer: D.   வயல்
9.  திருக்குறளில் "ஏழு" என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?
Answer: C.   08
10.  கீழ்க்கண்ட நூற்களில் "தமிழ் மூவாயிரம்” என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?
Answer: C.   திருமந்திரம்
11.  "தொண்டர்சீர் பரவுவார்" என்று போற்றப்படுபவர் யார்?
Answer: C.   சேக்கிழார்
12.  யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?
Answer: C.   அறவணவடிகள்
13.  'தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்' என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்
Answer: B.   இளங்கோவடிகள்
14.  கம்பரைப் புரந்தவர் யார்?
Answer: B.   சடையப்ப வள்ளல்
15.  ஜி.யு. போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
Answer: C.   ஆங்கிலம்
16.  நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு?
Answer: A.   2004
17.  குரூக், மால்தோ, பிராகுயி என்பன
Answer: C.   வடதிராவிட மொழிகள்
18.  "ஓர் இலட்சிய சமூகம் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது" என்றவர்
Answer: B.   அண்ணல் அம்பேத்கர்
19.  திரு.வி. கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது?
Answer: B.   சித்திரக்கவி
20.  பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக
Answer: D.   மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்
21.  தமிழக அரசு, கவிஞர் சாலை இளந்திரையனுக்கு வழங்கிய விருது
Answer: A.   பாவேந்தர் விருது
22.  ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு
Answer: D.   1886
23.  'மணநூல்' என அழைக்கப்பெறும் நூல்
Answer: C.   சீவக சிந்தாமணி
24.  பொருத்துக:
(a) சிந்தை 1. நீர்
(b) நவ்வி 2. மேகம்
(c) முகில் 3. எண்ணம்
(d) புனல் 4. மான்
Answer: C.   3 4 2 1
25.  ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
(a) Writs 1. வாரிசுரிமைச் சட்டம்
(b) Succession Act 2. உரிமைச் சட்டங்கள்
(c) Substantive Law 3. சான்றுச் சட்டம்
(d) Evidence Act 4. சட்ட ஆவணங்கள்
Answer: B.   4 1 2 3
;