TNPSC Group 4 2016
General Tamil Questions 1 to 25
1.
மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில்
உறங்கிய போது கவரி வீசிய மன்னன்
உறங்கிய போது கவரி வீசிய மன்னன்
Answer:
A.
சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
2.
பொருத்துக:
| (a) கவுந்தியடிகள் | 1. ஆயர்குல மூதாட்டி |
| (b) மாதரி | 2. மாநாய்கனின் மகள் |
| (c) மாதவி | 3. சமணத்துறவி |
| (d) கண்ணகி | 4. ஆடலரசி |
Answer:
A.
3 1 4 2
3.
கடிகை என்பதன் பொருள் யாது?
Answer:
A.
அணிகலன்
4.
'கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா'
- எனக் கூறும் நூல்
- எனக் கூறும் நூல்
Answer:
B.
பழமொழி நானூறு
5.
"வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார்
உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து"
- எனத் திருக்குறளை பாராட்டியவர்
உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து"
- எனத் திருக்குறளை பாராட்டியவர்
Answer:
D.
பரணர்
6.
நூல் - நூலாசிரியர் அறிதல்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) சயங்கொண்டார் | 1. சடகோபரந்தாதி |
| (b) காரியாசான் | 2. புறநானூறு |
| (c) கம்பர் | 3. கலிங்கத்துப்பரணி |
| (d) கண்ணகனார் | 4. சிறுபஞ்சமூலம் |
Answer:
A.
3 4 1 2
7.
"என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்"
- என்ற வரிகளைப் பாடியவர்
- என்ற வரிகளைப் பாடியவர்
Answer:
B.
குலசேகராழ்வார்
8.
"செறு" என்பதன் பொருள்
Answer:
D.
வயல்
9.
திருக்குறளில் "ஏழு" என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?
Answer:
C.
08
10.
கீழ்க்கண்ட நூற்களில் "தமிழ் மூவாயிரம்” என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?
Answer:
C.
திருமந்திரம்
11.
"தொண்டர்சீர் பரவுவார்" என்று போற்றப்படுபவர் யார்?
Answer:
C.
சேக்கிழார்
12.
யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?
Answer:
C.
அறவணவடிகள்
13.
'தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்' என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்
Answer:
B.
இளங்கோவடிகள்
14.
கம்பரைப் புரந்தவர் யார்?
Answer:
B.
சடையப்ப வள்ளல்
15.
ஜி.யு. போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
Answer:
C.
ஆங்கிலம்
16.
நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு?
Answer:
A.
2004
17.
குரூக், மால்தோ, பிராகுயி என்பன
Answer:
C.
வடதிராவிட மொழிகள்
18.
"ஓர் இலட்சிய சமூகம் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது" என்றவர்
Answer:
B.
அண்ணல் அம்பேத்கர்
19.
திரு.வி. கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது?
Answer:
B.
சித்திரக்கவி
20.
பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக
Answer:
D.
மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்
21.
தமிழக அரசு, கவிஞர் சாலை இளந்திரையனுக்கு வழங்கிய விருது
Answer:
A.
பாவேந்தர் விருது
22.
ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு
Answer:
D.
1886
23.
'மணநூல்' என அழைக்கப்பெறும் நூல்
Answer:
C.
சீவக சிந்தாமணி
24.
பொருத்துக:
| (a) சிந்தை | 1. நீர் |
| (b) நவ்வி | 2. மேகம் |
| (c) முகில் | 3. எண்ணம் |
| (d) புனல் | 4. மான் |
Answer:
C.
3 4 2 1
25.
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
| (a) Writs | 1. வாரிசுரிமைச் சட்டம் |
| (b) Succession Act | 2. உரிமைச் சட்டங்கள் |
| (c) Substantive Law | 3. சான்றுச் சட்டம் |
| (d) Evidence Act | 4. சட்ட ஆவணங்கள் |
Answer:
B.
4 1 2 3