GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 51 to 75

51.  பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார்?
Answer: A.   விதுரன்
52.  நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர்
Answer: C.   பன்னாடு தந்த மாறன் வழுதி
53.  “.......................... நெடுநீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்”
-இவ்வடிகள் இடம்பெறும் நூல்
Answer: C.   கம்பராமாயணம்
54.  “புலனழுக்கற்ற அந்தணாளன்” - எனப் பாராட்டப்படுபவர்
Answer: D.   கபிலர்
55.  பொருந்தாத நூலை எடுத்து எழுதுக
Answer: C.   புறநானூறு
56.  அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது
Answer: C.   வளர்பிறையைப் போன்றது
57.  பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
(a) ஒழுக்கத்தின் எய்துவர் 1. செல்வம் நிலைக்காது
(b) இழுக்கத்தின் எய்துவர் 2. மேன்மை
(c) பொறாமை உடையவரிடம் 3. உயர்வு இருக்காது
(d) ஒழுக்கமில்லாதவரிடம் 4. எய்தாப் பழி
Answer: A.   2 4 1 3
58.  வாய்மை எனப்படுவது
Answer: D.   தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
59.  'கம்பராமாயணத்தின் மணிமுடியாக விளங்கும் காண்டம்'
Answer: A.   சுந்தர காண்டம்
60.  'நூறாசிரியம்' என்னும் கவிதை நூலின் ஆசிரியர்
Answer: C.   கவிஞர் பெருஞ்சித்திரனார்
61.  'மடங்கல்' என்னும் சொல்லின் பொருள்
Answer: D.   சிங்கம்
62.  அகநானூற்றின் கடைசி 100 பாடல்கள் அடங்கிய பகுதி
Answer: C.   நித்திலக் கோவை
63.  குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர்
Answer: A.   பூரிக்கோ
64.  'உத்தர வேதம்' என்று அழைக்கப்படும் நூல்
Answer: C.   திருக்குறள்
65.  பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க
Answer: B.   ஆசாரக் கோவை
66.  ‘திரைக்கவித் திலகம்’ என்ற சிறப்புக்குரியவர்
Answer: D.   மருதகாசி
67.  ‘சதகம்’ என்பது ———————— பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும். நிரப்புக
Answer: B.   100
68.  பொருத்துக:
(a) வசன நடை கை வந்த வல்லாளர் 1. இராமலிங்க அடிகள்
(b) புது நெறி கண்ட புலவர் 2. நாமக்கல் கவிஞர்
(c) தைரியநாதர் 3. ஆறுமுக நாவலர்
(d) காந்தியக் கவிஞர் 4. வீரமாமுனிவர்
Answer: A.   3 1 4 2
69.  உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியர் பெயர்
Answer: D.   மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்
70.  பொருத்துக:
(a) சிறுமலை, பூம்பாறை 1. முல்லை நில ஊர்கள்
(b) ஆற்காடு, பனையபுரம் 2. நெய்தல் நில ஊர்கள்
(c) ஆத்தூர், கடம்பூர் 3. குறிஞ்சி நில ஊர்கள்
(d) கீழக்கரை, நீலாங்கரை 4. மருத நில ஊர்கள்
Answer: C.   3 1 4 2
71.  இதில் 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்பது யாருடைய மொழி
Answer: C.   ஔவையார்
72.  "இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவர்!
அவர் தமிழ் உள்ளங்களில் இன்றும் வாழ்கின்றார்,
என்றும் வாழ்வார்” — யார்?
Answer: B.   ஜி.யு. போப்
73.  “இந்திய நூலகத் தந்தை" எனப் போற்றப்படுபவர்
Answer: B.   சி.இரா. அரங்கநாதன்
74.  “வினையே ஆடவர்க்குயிர்” எனக் கூறும் நூல்
Answer: A.   குறுந்தொகை
75.  "மனமொத்த நட்புக்கு
வஞ்சகம் செய்யாதே”
- இக்கூற்றை கூறியவர்
Answer: D.   வள்ளலார்
;