GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2019

General Studies Questions 26 to 50

26.  உத்கல் சமவெளி __________ மாநிலத்தில் அமைந்துள்ளது.
Answer: C.   ஒடிசா
27.  0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது
Answer: C.   தென் அடலாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா
28.  பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்
Answer: C.   H1N1 வைரஸ்
29.  ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை
Answer: D.   செர்டோலி செல்கள்
30.  கூற்று (A): இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விடச் சிரைகளே சிறந்தவை
காரணம் (R): சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்
Answer: A.   (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
31.  பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
Answer: D.   ஐந்தங்க மலர் காணப்படுகிறது
32.  மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
Answer: B.   மைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது
33.  பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
I. Na₂CO₃ கடின நீரை மென்னீராக மாற்றப் பயன்படுகிறது
II. NaHCO₃ பருத்தி லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது
III. CaSO₄ ½ H₂O முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கப் பயன்படுகிறது
IV. CaOCl₂ ரொட்டிச்சோடா தயாரிக்கப் பயன்படுகிறது
Answer: B.   II மற்றும் IV
34.  40 செ.மீ வளைவு ஆரம் உடைய குவியாடி ஒன்றின் குவியத் தொலைவு
Answer: A.   20 செ.மீ
35.  ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில்) 10 N அளவு விசையை செலுத்தி
திறப்பார், எனில் அதே கதவை அதன் மையப் பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின்
மதிப்பு என்ன?
Answer: D.   20 N
36.  முதல் மின்கலத்தை உருவாக்கியவா
Answer: C.   அலெக்சாண்ட்ரோ வோல்டா
37.  ‘சுத்தமான குடிநீர் பெறுதல்’ என்பது நமது அடிப்படை உரிமை. இது இந்திய அரசியலமைப்பில்
எந்தப் பிரிவில் அடங்கும்?
Answer: B.   பிரிவு 21
38.  'ஆசியாவின் டெட்ராய்ட்' என்றழைக்கப்படும் இடம்
Answer: B.   சென்னை
39.  இந்திய கல்விமுறை, அடிப்படையில் _________ நிலைகளைக் கொண்டுள்ளது.
Answer: B.   ஆறு
40.  தமிழ் நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்தது
Answer: C.   9 வருடங்கள்
41.  GST இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது
Answer: B.   1 ஜூலை 2017
42.  சடுதி மாற்ற கோதுமை வகை
Answer: C.   சார்பதி சொனோரா
43.  எந்த கூற்று தவறானது?
Answer: C.   ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லுக்கு 'புதையுண்ட நகரம்' என்பது பொருள்
44.  ‘மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள்
பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து எண் யாது?’
Answer: B.   சரத்து 269
45.  I. பாரிபடா: காடுகளைப் பாதுகாத்து வளப்படுத்தும் ஒரு குக்கிராமம்.
II. பாரிபடா: மஹாராஷ்டிரா - குஜராத் எல்லையில் அமைந்துள்ளளது.
Answer: B.   I மற்றும் II சரியானவை
46.  இந்திய அளவில் சென்னை நகரம் மெட்ரோ இரயில் சேவை கொண்ட —————— நகரமாகும்.
Answer: C.   ஆறாவது
47.  எப்பொழுது ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது?
Answer: B.   15 ஆகஸ்ட் 2014
48.  1951-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள்
எத்தனை?
Answer: A.   54
49.  இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை —————— வழியாக செல்லுகிறது.
Answer: B.   மிர்சாபூர்
50.  ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்?
Answer: C.   நர்த்தகி நட்ராஜ்
;