GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2019

General Tamil Questions 26 to 50

1.  தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்?
A.   திலகவதி
B.   தில்லையாடி வள்ளியம்மை
C.   ஜான்சிராணி
D.   நாகம்மை
Answer: B.  தில்லையாடி வள்ளியம்மை
2.  உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்து சொன்னவர் யார்?
A.   கலிலியோ
B.   நிகோலஸ்கிராப்ஸ்
C.   சி.வி. இராமன்
D.   தாமஸ் ஆல்வா எடிசன்
Answer: A.  கலிலியோ
3.  தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்
A.   ஆறுமுக நாவலர்
B.   ஜோசப் கொன்ஸ்டான்
C.   ஜேம்ஸ் பிராங்கா
D.   ஜி.யு. போப்
Answer: C.  ஜேம்ஸ் பிராங்கா
4.  "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?
A.   கால்டுவெல்
B.   ஜி.யு.போப்
C.   வீரமாமுனிவர்
D.   ஷெல்லி
Answer: B.  ஜி.யு.போப்
5.  "வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்று
தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?
A.   பாவலரேறு பெருஞ்சித்திரனார்
B.   பெருங்குன்று கிழார்
C.   பெருநாவலர்
D.   பாவேந்தர் பாரதிதாசன்
Answer: A.  பாவலரேறு பெருஞ்சித்திரனார்
6.  'துரை மாணிக்கம்' என்பது இவரின் இயற்பெயர்
A.   கவிஞர் சுரதா
B.   கவிஞர் மீரான்
C.   பாரதிதாசன்
D.   பெருஞ்சித்திரனார்
Answer: D.  பெருஞ்சித்திரனார்
7.  திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
A.   சி.வை. தாமோதரம்
B.   வ. சுப. மாணிக்கம்
C.   தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
D.   சீனி. வேங்கடசாமி
Answer: C.  தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
8.  பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?
A.   மு.சி. பூர்ணலிங்கம்
B.   தெ. பொ. மீனாட்சி சுந்தரம்
C.   கே. வி. சுப்பையா
D.   எல்.வி. இராமசுவாமி
Answer: A.  மு.சி. பூர்ணலிங்கம்
9.  "கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்" எனக் கூறியவர் யார்?
A.   கந்தர்வன்
B.   நாஞ்சில் நாடன்
C.   புதுமைப்பித்தன்
D.   வண்ணதாசன்
Answer: C.  புதுமைப்பித்தன்
10.  தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்
A.   மரபியல்
B.   பொருளியல்
C.   மெய்ப்பாட்டியல்
D.   களவியல்
Answer: C.  மெய்ப்பாட்டியல்
11.  பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?
A.   நாடகக்கலை
B.   நாட்டியக்கலை
C.   இசைக்கலை
D.   ஓவியக்கலை
Answer: C.  இசைக்கலை
12.  'சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு' - என்று கூறியவர்
A.   அண்ணா
B.   காந்தி
C.   அம்பேத்கர்
D.   மு. வரதராசனார்
Answer: A.  அண்ணா
13.  தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?
A.   துறைமுகம்
B.   சுவரும் சுண்ணாம்பும்
C.   தேன்மழை
D.   சுரதாவின் கவிதைகள்
Answer: C.  தேன்மழை
14.  ''இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை..." என்று பாடியவர் யார்?
A.   சுரதா
B.   மு. மேத்தா
C.   தாரா பாரதி
D.   அப்துல் ரகுமான்
Answer: A.  சுரதா
15.  பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?
A.   கண்ணகி புரட்சிக் காப்பியம்
B.   பிசிராந்தையார்
C.   சுவரும் சுண்ணாம்பும்
D.   பாண்டியன் பரிசு
Answer: B.  பிசிராந்தையார்
16.  நாமக்கல் கவிஞருக்கு “பத்மபூஷண்” விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?
A.   நடுவணரசு
B.   மாநில அரசு
C.   ஆங்கில அரசு
D.   பிரெஞ்சு அரசு
Answer: A.  நடுவணரசு
17.  சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?
A.   பாம்பாட்டிச்சித்தர்
B.   திருமூலர்
C.   போகர்
D.   கோரக்கர்
Answer: B.  திருமூலர்
18.  'லிட்டன் பிரபு' எழுதிய 'இரகசிய வழி' என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்
A.   மனோன்மணீயம்
B.   அகத்தியம்
C.   முறுவல்
D.   குணநூல்
Answer: A.  மனோன்மணீயம்
19.  மனோன்மணியத்தை இயற்றியவர்
A.   சுந்தரம் பிள்ளை
B.   சுந்தர முனிவர்
C.   சுந்தரர்
D.   சுந்தர மூர்த்தி
Answer: A.  சுந்தரம் பிள்ளை
20.  செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது?
A.   இரண்டாம் பருவம்
B.   ஐந்தாம் பருவம்
C.   முதற் பருவம்
D.   மூன்றாம் பருவம்
Answer: A.  இரண்டாம் பருவம்
21.  பெரியபுராணத்திற்கு சேக்கிழாரிட்டப் பெயர்
A.   சிவதொண்டர் புராணம்
B.   சிவனடியார் புராணம்
C.   திருத்தொண்டர் புராணம்
D.   தொண்டர்சீர் புராணம்
Answer: C.  திருத்தொண்டர் புராணம்
22.  சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?
A.   பல்கலைக்கழகம்
B.   அரசவைக் கவிஞர் பணி
C.   அறக்கட்டளை
D.   பேராசிரியர் பணி
Answer: A.  பல்கலைக்கழகம்
23.  பொருளறிந்து பொருத்துக
(a) தடக்கர் 1. கரடி
(b) எண்கு 2. காட்சி
(c) வள்உகிர் 3. பெரிய யானை
(d) தெரிசனம் 4. கூர்மையான நகம்
A.   3 1 4 2
B.   1 4 3 2
C.   1 2 3 4
D.   1 3 2 4
Answer: A.  3 1 4 2
24.  குண்டலகேசியின் கதைத் தலைவி - குண்டலகேசி, அவளின் வேறு பெயர்
A.   கைகேயி
B.   பத்தரை
C.   சுமத்திரை
D.   மாதவி
Answer: B.  பத்தரை
25.  கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?
A.   சமணத் துறவி
B.   பௌத்தத் துறவி
C.   இஸ்லாமியத் துறவி
D.   சைவ துறவி
Answer: A.  சமணத் துறவி
;