GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2019

General Studies Questions 26 to 50

1.  உத்கல் சமவெளி __________ மாநிலத்தில் அமைந்துள்ளது.
A.   ஆந்திரபிரதேசம்
B.   मुंबई
C.   ஒடிசா
D.   தமிழ்நாடு
Answer: C.  ஒடிசா
2.  0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது
A.   மத்திய ஆஸ்திரேலியா
B.   பிரேசில்
C.   தென் அடலாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா
D.   தென் துருவங்களில்
Answer: C.  தென் அடலாண்டிக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா
3.  பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்
A.   ருபல்லா வைரஸ்
B.   ரைனோ வைரஸ்
C.   H1N1 வைரஸ்
D.   அல்ஃபா வைரஸ்
Answer: C.  H1N1 வைரஸ்
4.  ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை
A.   ஹைபோதலாமஸ்
B.   லீடிக்க் செல்கள்
C.   டெஸ்டோஸ்டீரோன்
D.   செர்டோலி செல்கள்
Answer: D.  செர்டோலி செல்கள்
5.  கூற்று (A) : இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விடச் சிரைகளே சிறந்தவை
காரணம் (R) : சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்
A.   (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B.   (A) சரி ஆனால் (R) தவறு
C.   (A) தவறு ஆனால் (R) சரி
D.   (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
Answer: A.  (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
6.  பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
A.   விதை ஒருவித்திலையை கொண்டது
B.   இலைகளில் இணைப்போக்கு நரம்பமைவு காணப்படுகிறது
C.   சல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது
D.   ஐந்தங்க மலர் காணப்படுகிறது
Answer: D.  ஐந்தங்க மலர் காணப்படுகிறது
7.  மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
A.   உடல் செல்களில் மட்டும் நடைபெறுகிறது
B.   மைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது
C.   ‘2n’ குரோமோசோம்கள் நிலைநிறுத்தப்படுகிறது
D.   இரு இருமயசெல்கள் தோன்றுகின்றன
Answer: B.  மைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது
8.  பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
I. Na₂CO₃ கடின நீரை மென்னீராக மாற்றப் பயன்படுகிறது
II. NaHCO₃ பருத்தி லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது
III. CaSO₄ ½ H₂O முறிந்த எலும்புகளை ஒட்டவைக்கப் பயன்படுகிறது
IV. CaOCl₂ ரொட்டிச்சோடா தயாரிக்கப் பயன்படுகிறது
A.   I மற்றும் IV
B.   II மற்றும் IV
C.   I மற்றும் III
D.   III மற்றும் IV
Answer: B.  II மற்றும் IV
9.  40 செ.மீ வளைவு ஆரம் உடைய குவியாடி ஒன்றின் குவியத் தொலைவு
A.   20 செ.மீ
B.   40 செ.மீ
C.   80 செ.மீ
D.   முடிவிலி
Answer: A.  20 செ.மீ
10.  ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில்) 10 N அளவு விசையை செலுத்தி
திறப்பார், எனில் அதே கதவை அதன் மையப் பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின்
மதிப்பு என்ன?
A.   10 N
B.   5 N
C.   15 N
D.   20 N
Answer: D.  20 N
11.  முதல் மின்கலத்தை உருவாக்கியவா
A.   ஜூல்
B.   ஜார்ஜ் சைமன் ஓம்
C.   அலெக்சாண்ட்ரோ வோல்டா
D.   நியூட்டன்
Answer: C.  அலெக்சாண்ட்ரோ வோல்டா
12.  ‘சுத்தமான குடிநீர் பெறுதல்’ என்பது நமது அடிப்படை உரிமை. இது இந்திய அரசியலமைப்பில்
எந்தப் பிரிவில் அடங்கும்?
A.   பிரிவு 12
B.   பிரிவு 21
C.   பிரிவு 31
D.   பிரிவு 41
Answer: B.  பிரிவு 21
13.  'ஆசியாவின் டெட்ராய்ட்' என்றழைக்கப்படும் இடம்
A.   ஹைதராபாத்
B.   சென்னை
C.   மும்பை
D.   சூரத்
Answer: B.  சென்னை
14.  இந்திய கல்விமுறை, அடிப்படையில் _________ நிலைகளைக் கொண்டுள்ளது.
A.   எட்டு
B.   ஆறு
C.   நான்கு
D.   இரண்டு
Answer: B.  ஆறு
15.  தமிழ் நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்தது
A.   7 வருடங்கள்
B.   8 வருடங்கள்
C.   9 வருடங்கள்
D.   10 வருடங்கள்
Answer: C.  9 வருடங்கள்
16.  GST இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது
A.   29 மார்ச் 2017
B.   1 ஜூலை 2017
C.   29 மார்ச் 2016
D.   1 ஜூலை 2016
Answer: B.  1 ஜூலை 2017
17.  சடுதி மாற்ற கோதுமை வகை
A.   ஈனோதீரா லாமார்க்கியானா
B.   ஆமணக்கு அருணா
C.   சார்பதி சொனோரா
D.   மிராபிலிஸ் ஜலாபா
Answer: C.  சார்பதி சொனோரா
18.  எந்த கூற்று தவறானது?
A.   சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினர்
B.   சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாகரிகம் மலர்ந்தது
C.   ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லுக்கு 'புதையுண்ட நகரம்' என்பது பொருள்
D.   சதுர வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது
Answer: C.  ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லுக்கு 'புதையுண்ட நகரம்' என்பது பொருள்
19.  ‘மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள்
பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து எண் யாது?’
A.   சரத்து 201
B.   சரத்து 269
C.   சரத்து 272
D.   சரத்து 268
Answer: B.  சரத்து 269
20.  I. பாரிபடா : காடுகளைப் பாதுகாத்து வளப்படுத்தும் ஒரு குக்கிராமம்.
II. பாரிபடா : மஹாராஷ்டிரா - குஜராத் எல்லையில் அமைந்துள்ளளது
A.   I என்பது சரி, ஆனால் II தவறு
B.   I மற்றும் II சரியானவை
C.   I என்பது தவறு, ஆனால் II என்பது சரி
D.   I மற்றும் II தவறானவை
Answer: B.  I மற்றும் II சரியானவை
21.  இந்திய அளவில் சென்னை நகரம் மெட்ரோ இரயில் சேவை கொண்ட —————— நகரமாகும்.
A.   முதலாவது
B.   ஐந்தாவது
C.   ஆறாவது
D.   இரண்டாவது
Answer: C.  ஆறாவது
22.  எப்பொழுது ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது?
A.   2 அக்டோபர் 2013
B.   15 ஆகஸ்ட் 2014
C.   2 அக்டோபர் 2015
D.   2 அக்டோபர் 2016
Answer: B.  15 ஆகஸ்ட் 2014
23.  1951-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள்
எத்தனை?
A.   54
B.   64
C.   74
D.   84
Answer: A.  54
24.  இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை —————— வழியாக செல்லுகிறது.
A.   அகமதாபாத்
B.   மிர்சாபூர்
C.   கீரின்விச்
D.   குஜராத்
Answer: B.  மிர்சாபூர்
25.  ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்?
A.   சத்யஸ்ரீ ஷர்மிளா
B.   பிரீத்திகா யாஷினி
C.   நர்த்தகி நட்ராஜ்
D.   தமிழ்ச் செல்வி
Answer: C.  நர்த்தகி நட்ராஜ்
;