GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2019

General Tamil Questions 76 to 100

1.  பொருந்தாத இணை எது?
A.   மேற்கு மலையில் இருந்து வந்தவை - சந்தனம், ஆரம்
B.   கீழ்க்கடலில் விளைந்தவை - பவளம்
C.   வடமலையில் இருந்து வந்தது - கறி (மிளகு)
D.   தென்கடலில் இருந்து கிடைத்தவை - முத்து
Answer: C.  வடமலையில் இருந்து வந்தது - கறி (மிளகு)
2.  அகர வரிசைப்படுத்துக
A.   மிளகு, மருங்கை, முசிறி, மூதூர், மேற்குமலை
B.   முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை, மருங்கை
C.   மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை
D.   மருங்கை, முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை
Answer: C.  மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை
3.  தென்னாட்டைக் கன்னந்தனியே ஆண்ட பெண்ணாசி என்னும் புகழைப் பெற்றவர் யார்?
A.   இராணி மங்கம்மாள்
B.   ஜான்சி ராணி
C.   தில்லையாடி வள்ளியம்மை
D.   வேலுநாச்சியார்
Answer: A.  இராணி மங்கம்மாள்
4.  காடுகளில் வாழ்ந்தமக்கள் விலங்கின் பெயர் கொண்டு அமைந்த ஊரின் பெயர் என்ன?
A.   ஆட்டையாம்பட்டி
B.   வேப்பனேரி
C.   புளியம்பட்டி
D.   புளியங்குடி
Answer: A.  ஆட்டையாம்பட்டி
5.  இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்?
A.   அம்பேத்கர்
B.   இராஜாஜி
C.   அண்ணா
D.   காமராசர்
Answer: A.  அம்பேத்கர்
6.  அறிஞர் அண்ணாவின் கவிதைகள் ‘தமிழ்ப்பீடம்’ என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு எது?
A.   2005
B.   2004
C.   2003
D.   2006
Answer: A.  2005
7.  தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்
A.   ஜி.யு. போப்
B.   வீரமாமுனிவர்
C.   H.A. கிருஷ்ணப்பிள்ளை
D.   ரா.பி. சேதுபிள்ளை
Answer: B.  வீரமாமுனிவர்
8.  ‘தபோலி’ என்னும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது.
A.   மராட்டிய மாநிலம்
B.   குஜராத் மாநிலம்
C.   தமிழ்நாடு
D.   கர்நாடகம்
Answer: A.  மராட்டிய மாநிலம்
9.  பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்
A.   மறைமலையடிகள்
B.   உ.வே. சாமிநாத ஐயர்
C.   வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்
D.   வையாபுரிப்பிள்ளை
Answer: C.  வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்
10.  “தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?
A.   கமில்சுவலபில்
B.   மாக்சு முல்லர்
C.   முனைவா எமினோ
D.   வில்லியம் ஜோன்ஸ்
Answer: B.  மாக்சு முல்லர்
11.  ‘இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது’ என்றவர் யார்?
A.   மாக்சு முல்லர்
B.   கால்டுவெல்
C.   கெல்லட்
D.   எமினோ
Answer: D.  எமினோ
12.  விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன?
A.   போட்டி
B.   பொழுதுபோக்கு
C.   உடற்பயிற்சி
D.   உற்சாகம்
Answer: A.  போட்டி
13.  ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?
A.   எட்வார்டு மை பிரிட்சு
B.   வால்ட் விட்மன்
C.   எடிசன்
D.   கீட்ஸ்
Answer: C.  எடிசன்
14.  “எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்
A.   சிற்பி
B.   சி.சு. செல்லப்பா
C.   ந. பிச்சமூர்த்தி
D.   மு. மேத்தா
Answer: B.  சி.சு. செல்லப்பா
15.  வழக்குரைஞராகவும், இந்துசமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்?
A.   அப்துல் ரகுமான்
B.   சிற்பி
C.   ந. பிச்சமூர்த்தி
D.   இரா. மீனாட்சி
Answer: C.  ந. பிச்சமூர்த்தி
16.  “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” என்று கூறியவர் யார்?
A.   மு. மேத்தா
B.   பசுவய்யா
C.   ந. பிச்சமூர்த்தி
D.   ஈரோடு தமிழன்பன்
Answer: D.  ஈரோடு தமிழன்பன்
17.  “தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்
A.   பாரதிதாசன்
B.   நாமக்கல் கவிஞர்
C.   வாணிதாசன்
D.   முடியரசன்
Answer: C.  வாணிதாசன்
18.  “வாழ்வினிற்கோ செம்மையைச் செய்பவன் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?
A.   தமிழ்நாடு அரசு
B.   புதுவை அரசு
C.   பிரெஞ்சு அரசு
D.   ஆங்கில அரசு
Answer: B.  புதுவை அரசு
19.  இளங்கோவடிகள், “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” என்று யாரைப் பாராட்டியுள்ளார்?
A.   நாதகுத்தனார்
B.   தோலா மொழித்தேவர்
C.   திருத்தக்க தேவர்
D.   சீத்தலைச் சாத்தனார்
Answer: D.  சீத்தலைச் சாத்தனார்
20.  வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?
A.   திருநாவுக்கரசர்
B.   சுந்தரர்
C.   திருஞானசம்பந்தர்
D.   மாணிக்கவாசகர்
Answer: A.  திருநாவுக்கரசர்
21.  ‘ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!’ என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A.   பட்டினத்தார்
B.   மருதகாசி
C.   உடுமலை நாராயணகவி
D.   பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
Answer: B.  மருதகாசி
22.  ‘காவடிச் சிந்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர் _________
A.   பாரதியார்
B.   சென்னி குளம் அண்ணாமலையார்
C.   அருணகிரியார்
D.   விளம்பி நாகனார்
Answer: B.  சென்னி குளம் அண்ணாமலையார்
23.  கலிங்கத்துப்பரணி - நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?
A.   596
B.   599
C.   593
D.   597
Answer: B.  599
24.  “நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே” - இவ்வரிகள் இடம்பெற்ற நூல்
A.   வங்கத்துப் பரணி
B.   திராவிடத்துப் பரணி
C.   கலிங்கத்துப்பரணி
D.   தக்கயாகப் பரணி
Answer: C.  கலிங்கத்துப்பரணி
25.  அதியமானின் தூதராக ஒளவை சென்றதைக் கூறும் நூல் எது?
A.   பதிற்றுப்பத்து
B.   பரிபாடல்
C.   புறநானூறு
D.   ஆத்திச்சூடி
Answer: C.  புறநானூறு
;