GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2019

General Tamil Questions 51 to 75

1.  சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?
A.   சீவகசிந்தாமணி
B.   மணிமேகலை
C.   குண்டலகேசி
D.   நீலகேசி
Answer: B.  மணிமேகலை
2.  "அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள்! - மன்னுபார்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும்"
இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
A.   சிலம்பு
B.   கம்ப இராமாயணம்
C.   மணிமேகலை
D.   பெரிய புராணம்
Answer: C.  மணிமேகலை
3.  குறுந்தொகை நூலின் 'பா' - வகை யாது?
A.   கலிப்பா
B.   வஞ்சிப்பா
C.   வெண்பா
D.   அகவற்பா
Answer: D.  அகவற்பா
4.  துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர்
அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான்
- இக்கூற்றிற்குரியவர் யார்?
A.   இராமன்
B.   இலக்குவன்
C.   அனுமன்
D.   குகன்
Answer: D.  குகன்
5.  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
A.   நற்றிணை
B.   குறிஞ்சிப்பாட்டு
C.   பரிபாடல்
D.   ஏலாதி
Answer: D.  ஏலாதி
6.  பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?
A.   இன்னா நாற்பது
B.   நான்மணிக்கடிகை
C.   நாலடியார்
D.   சிறுபஞ்சமூலம்
Answer: C.  நாலடியார்
7.  கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள _____________ ஆகும்.
A.   நற்பண்ப
B.   நற்குணம்
C.   புகழ்
D.   நல்லெண்ணங்கள்
Answer: D.  நல்லெண்ணங்கள்
8.  பொருட்பாலின் இயல்கள்
A.   பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
B.   அரசியல், அங்கவியல், ஒழிபியல்
C.   களவியல், கற்பியல்
D.   பாயிரவியல், அரசியல், களவியல்
Answer: B.  அரசியல், அங்கவியல், ஒழிபியல்
9.  வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.
A.   தென்னை போன்ற தோள்
B.   பளிங்கு போன்ற தோள்
C.   மூங்கில் போன்ற தோள்
D.   வாழை போன்ற தோள்
Answer: C.  மூங்கில் போன்ற தோள்
10.  பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
A.   எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்
B.   எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது
C.   எழிலரசி சிலப்பதிகாரம் கல்லாள்
D.   எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
Answer: D.  எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
11.  தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார். - பொருத்தமான வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.
A.   அயற்கூற்று வாக்கியம்
B.   நேர்க்கூற்று வாக்கியம்
C.   கலவை வாக்கியம்
D.   எதிர்மறை வாக்கியம்
Answer: A.  அயற்கூற்று வாக்கியம்
12.  பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்
A.   தன்வினை வாக்கியம்
B.   செய்வினை வாக்கியம்
C.   பிறவினை வாக்கியம்
D.   செயப்பாட்டுவினை வாக்கியம்
Answer: C.  பிறவினை வாக்கியம்
13.  அவன் சித்திரையான் - எவ்வகை பெயர்
A.   குணப் பெயர்
B.   இடப் பெயர்
C.   காலப் பெயர்
D.   தொழில் பெயர்
Answer: C.  காலப் பெயர்
14.  வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக:
மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க.
A.   மாணவர்கள் உட்கார வட்டமாகச் செய்க
B.   மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க
C.   மாணவர்களை உட்கார வட்டமாகச் செய்க
D.   மாணவர்களை செய்க வட்டமாக உட்கார
Answer: B.  மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க
15.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
A.   மாலை மீது மலையின் மழை பெய்தது நேற்று
B.   மலையின் மாலை மீது நேற்று பெய்தது மழை
C.   நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது
D.   பெய்தது மழை மலையின் மீது நேற்றுமாலை
Answer: C.  நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது
16.  அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக.
A.   கொன்றை, கெண்டை, கண், கீரன், காடை
B.   கெண்டை, கீரன், கொன்றை, காடை, கண்
C.   கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை
D.   கண்,கீரன், காடை, கொன்றை, கெண்டை
Answer: C.  கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை
17.  சொல்லுக்கேற்ற பொருளறிக:
A.   வலிமை - திண்மை
B.   நாண் தன்னைக்குறிப்பது
C.   கான் - பார்
D.   துணி - துன்பம்
Answer: A.  வலிமை - திண்மை
18.  சரியான இணையைத் தேர்ந்தெடு
மரை - மறை
A.   மான் - வேதம்
B.   தாமரை - புலன்
C.   வேதம் - இயல்பு
D.   யானை - மறைத்தல்
Answer: A.  மான் - வேதம்
19.  ஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
A.   ஒளி நகல்
B.   ஒலி நகல்
C.   அசல் படம்
D.   மறு படம்
Answer: A.  ஒளி நகல்
20.  "மா" ஓரெழுத்து ஒரு மொழியின்பொருள்
A.   பெரிய
B.   இருள்
C.   வானம்
D.   அழகு
Answer: A.  பெரிய
21.  பாகற்காய் - பிரித்தெழுதுக
A.   பாகு + அல் + காய்
B.   பாகு + அற்காய்
C.   பாகற் + காய்
D.   பாகு + கல் + காய்
Answer: A.  பாகு + அல் + காய்
22.  பைந்நிணம் - பிரித்தெழுதுக
A.   பை + நிணம்
B.   பை + இணம்
C.   பசுமை + நிணம்
D.   பசுமை + இணம்
Answer: C.  பசுமை + நிணம்
23.  “திருத்தொண்டர் புராணம்” என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்
A.   திருவிளையாடற்புராணம்
B.   மேருமந்த புராணம்
C.   திருவாசகம்
D.   பெரியபுராணம்
Answer: D.  பெரியபுராணம்
24.  மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
A.   ஐங்குறுநூறு
B.   குறுந்தொகை
C.   கலித்தொகை
D.   புறநானூறு
Answer: A.  ஐங்குறுநூறு
25.  தவறான இணை எது?
A.   மணித்தக்காளி - வாய்ப்புண்
B.   முசுமுசுக்கை வேர் - இருமல்
C.   அகத்திக் கீரை - கண்நோய்
D.   வேப்பங்கொழுந்து - மார்புச்சளி
Answer: C.  அகத்திக் கீரை - கண்நோய்
;