GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2019

General Tamil Questions 1 to 25

1.  எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்
A.   அகநானூறு
B.   ஐங்குறுநூறு
C.   நற்றிணை
D.   பரிபாடல்
Answer: C.  நற்றிணை
2.  அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?
A.   பரிபாடல்
B.   நற்றிணை
C.   ஐங்குறுநூறு
D.   பதிற்றுப்பத்து
Answer: A.  பரிபாடல்
3.  தவறான இணையைத் தேர்வு செய்க:
A.   குறிஞ்சி - கபிலர்
B.   முல்லை - ஓதலாந்தையார்
C.   மருதம் - ஓரம்போகியார்
D.   நெய்தல் - அம்மூவனார்
Answer: B.  முல்லை - ஓதலாந்தையார்
4.  பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க:
A.   கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்
B.   கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
C.   சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்
D.   கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
Answer: B.  கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
5.  செல்வச் செவிலி - இலக்கணக் குறிப்பு
A.   உவமை
B.   அடுக்குத்தொடர்
C.   எண்ணும்மை
D.   உருவகம்
Answer: D.  உருவகம்
6.  குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
- இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது?
A.   படை கவசம்
B.   படை கருவிகள்
C.   கைப்பொருள்
D.   வலிமையான ஆயுதம்
Answer: C.  கைப்பொருள்
7.  பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்றுவிடற்கு - எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.
A.   பொழிப்பு எதுகை
B.   கூழை எதுகை
C.   மேற்கதுவாய் எதுகை
D.   கீழ்க்கதுவாய் எதுகை
Answer: B.  கூழை எதுகை
8.  'அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்' - இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க.
A.   கூழை எதுகை
B.   மேற்கதுவாய் எதுகை
C.   கீழ்க்கதுவாய் எதுகை
D.   பொழிப்பு எதுகை
Answer: B.  மேற்கதுவாய் எதுகை
9.  தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க
A.   அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை.
B.   அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.
C.   அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?
D.   அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்.
Answer: B.  அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.
10.  இலக்கணக் குறிப்புத் தருக: கங்கையும் சிந்துவும்
A.   உம்மைத்தொகை
B.   பெண்பால் பெயர்கள்
C.   எண்ணும்மை
D.   அன்மொழித்தொகை
Answer: C.  எண்ணும்மை
11.  சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம்
A.   மிகும்
B.   மிகாது
C.   சில இடங்களில் வரும்
D.   சில இடங்களில் வராது
Answer: A.  மிகும்
12.  தாழ்பூந்துறை - என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக
A.   ஏவல் வினைமுற்று
B.   உரிச்சொல் தொடர்
C.   பண்புத்தொகை
D.   வினைத்தொகை
Answer: D.  வினைத்தொகை
13.  பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு செய்க?
A.   பழுத்த பழம்
B.   பழுக்கும் பழம்
C.   பழுக்கின்றது
D.   பழங்கள் பழுத்தன
Answer: C.  பழுக்கின்றது
14.  படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக?
A.   படித்து
B.   படித்தல்
C.   படித்த
D.   பாடுதல்
Answer: A.  படித்து
15.  "கல்” என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக?
A.   கற்றல்
B.   கற்பனை
C.   கண்டான்
D.   கல்லை
Answer: A.  கற்றல்
16.  "இயல்பானது" வேர்ச்சொல்லறிக
A.   இயல்
B.   இயல்பு
C.   இயைபு
D.   இய
Answer: B.  இயல்பு
17.  'ஏ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின்பொருள்
A.   தலைவன்
B.   நெருப்பு
C.   அரண்
D.   அம்பு
Answer: D.  அம்பு
18.  குழலியும் பாடத் தெரியும் - தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரை தேர்ந்தெடுக்க
A.   குழலிக்குப் பாடத்தெரியும்
B.   குழலியின் பாடத்தெரியும்
C.   குழலி பாடத்தெரியும்
D.   குழலியால் பாடத்தெரியும்
Answer: A.  குழலிக்குப் பாடத்தெரியும்
19.  தமிழ்ச் சொல்லைக் கண்டறிக:
A.   அனுமதி
B.   ஈசன்
C.   குபேரன்
D.   மணிமுடி
Answer: D.  மணிமுடி
20.  பொருந்தா இணையைச் சுட்டுக:
A.   குறிஞ்சி - யாமம்
B.   முல்லை - மாலை
C.   மருதம் - நண்பகல்
D.   நெய்தல் - எற்பாடு
Answer: C.  மருதம் - நண்பகல்
21.  மிசை - எதிர்ச்சொல் காண்க:
A.   இசை
B.   கீழ்
C.   விசை
D.   நாள்
Answer: B.  கீழ்
22.  கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் - இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக.
A.   கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்
B.   கலைச்செல்வி கட்டுரை எழுத விரும்பவில்லை
C.   கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்
D.   கலைச்செல்வி கட்டுரை வாசிக்கவில்லை
Answer: A.  கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்
23.  பொருத்துக
வேற்றுமை உருபு
(a) நான்காம் வேற்றுமை 1. இன்
(b) ஐந்தாம் வேற்றுமை 2. அது
(c) ஆறாம் வேற்றுமை 3. கண்
(d) ஏழாம் வேற்றுமை 4. கு
A.   4 1 2 3
B.   3 2 1 4
C.   2 3 4 1
D.   1 4 3 2
Answer: A.  4 1 2 3
24.  கீழ்க்கண்ட கூற்றுக்களுள் சரியானவற்றைத் தேர்வு செய்க
1. தாயுமானவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு
2. இவர் காலம் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
3. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்பது இவர் எழுதிய நூல்
4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சேதுபதியிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்
A.   1.4 சரி
B.   2,3 சரி
C.   2, 4 சரி
D.   1,3 சரி
Answer: B.  2,3 சரி
25.  தாயுமானவர் ஆற்றிய பணி எது?
A.   அரசுக்கணக்கர்
B.   தட்டச்சுப்பணியாளர்
C.   பத்திரிக்கையாளர்
D.   இசைப்பணியாளர்
Answer: A.  அரசுக்கணக்கர்
;