TNPSC Group 4 2019
General Tamil Questions 26 to 50
26.
தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்?
Answer:
B.
தில்லையாடி வள்ளியம்மை
27.
உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்து சொன்னவர் யார்?
Answer:
A.
கலிலியோ
28.
தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்
Answer:
C.
ஜேம்ஸ் பிராங்கா
29.
"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?
Answer:
B.
ஜி.யு.போப்
30.
"வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்று
தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்று
தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?
Answer:
A.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
31.
'துரை மாணிக்கம்' என்பது இவரின் இயற்பெயர்
Answer:
D.
பெருஞ்சித்திரனார்
32.
திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
Answer:
C.
தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
33.
பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?
Answer:
A.
மு.சி. பூர்ணலிங்கம்
34.
"கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்" எனக் கூறியவர் யார்?
Answer:
C.
புதுமைப்பித்தன்
35.
தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்
Answer:
C.
மெய்ப்பாட்டியல்
36.
பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?
Answer:
C.
இசைக்கலை
37.
'சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு' - என்று கூறியவர்
Answer:
A.
அண்ணா
38.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?
Answer:
C.
தேன்மழை
39.
''இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை..." என்று பாடியவர் யார்?
Answer:
A.
சுரதா
40.
பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?
Answer:
B.
பிசிராந்தையார்
41.
நாமக்கல் கவிஞருக்கு “பத்மபூஷண்” விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?
Answer:
A.
நடுவணரசு
42.
சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?
Answer:
B.
திருமூலர்
43.
'லிட்டன் பிரபு' எழுதிய 'இரகசிய வழி' என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்
Answer:
A.
மனோன்மணீயம்
44.
மனோன்மணியத்தை இயற்றியவர்
Answer:
A.
சுந்தரம் பிள்ளை
45.
செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது?
Answer:
A.
இரண்டாம் பருவம்
46.
பெரியபுராணத்திற்கு சேக்கிழாரிட்டப் பெயர்
Answer:
C.
திருத்தொண்டர் புராணம்
47.
சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?
Answer:
A.
பல்கலைக்கழகம்
48.
பொருளறிந்து பொருத்துக
| (a) தடக்கர் | 1. கரடி |
| (b) எண்கு | 2. காட்சி |
| (c) வள்உகிர் | 3. பெரிய யானை |
| (d) தெரிசனம் | 4. கூர்மையான நகம் |
Answer:
A.
3 1 4 2
49.
குண்டலகேசியின் கதைத் தலைவி - குண்டலகேசி, அவளின் வேறு பெயர்
Answer:
B.
பத்தரை
50.
கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?
Answer:
A.
சமணத் துறவி