GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

இவ்வரிகள் இடம்பெறும் நூல்/பகுதி – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   "அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்
உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி" - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?
Answer: A.   பெரியபுராணம்
2.   "உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்"
இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?
Answer: C.   மூன்றாம் தந்திரம்
3.   "கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
Answer: A.   திருவாசகம்
4.   "தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த" இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
Answer: C.   பதிற்றுப்பத்து
5.   'எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி' என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் இவ்வடி இடம் பெற்ற நூல்
Answer: C.   மதுரைக் காஞ்சி
6.   "நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்பு மினது தான்"
-என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
Answer: B.   புறநானூறு
7.   பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்
Answer: B.   திருவாசகம்
9.   "நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத் துருபே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: B.   நன்னூல்
10.   “நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே” - இவ்வரிகள் இடம்பெற்ற நூல்
Answer: C.   கலிங்கத்துப்பரணி
11.   "மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
Answer: D.   மூதுரை
14.   'வாலெங்கே? நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே? நாலு __________ __________ எனத் தொடங்கும் இரட்டுறமொழிதல் பாடலின் ஆசிரியர் யார்?
Answer: C.   கவி காளமேகம்
15.   பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க.
“தூற்றின் கண் தூவிய வித்து”
Answer: D.   திரிகடுகம்
;