GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2014 Preliminary Examination

Aptitude Questions 1 to 25

1.  வரிசையில் உள்ள விடுபட்ட வரைபடத்தைக் கண்டுபிடிக்கவும்: வட்டங்களுக்குள் கிடைமட்ட மற்றும் செங்குத்துக் கோடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் உருவத் தொடர் புதிர்
Answer: B.   உருவத் தொடர் புதிர் - விருப்பம் (B) - கிடைமட்டமாக 3 கோடுகளும் செங்குத்தாக 3 கோடுகளும் கொண்ட வட்டம்
2.  கீழ்க்கண்ட வார்த்தைகளை, அர்த்தமுள்ள வரிசையில் எழுதுக:
1. தேன்
2. பூ
3. வண்டு
4. மெழுகு
Answer: C.   2, 3, 1, 4
3.  ஒரு எண்ணில் 30 சதவீதம் அதே எண்ணின் ஐந்தில் மூன்று மடங்கை விட 15 குறைவு எனில் அந்த எண்
Answer: C.   50
4.  ஒரு எண்ணானது 13-ஆல் வகுக்கப்படும் போது மீதி 11-ஐத் தருகிறது. அதே எண் 17-ஆல் வகுக்கப்படும் போது மீதி 9-ஐத் தருகிறது. அந்த எண்
Answer: C.   349
5.  500 சிறு குழல் விளக்குகளின் வாழ்நாள் விவரம் கீழே தரப்பட்டுள்ளன:

வாழ்நாள் (மாதங்களில்) 9 10 11 12 13 14 14-ஐ விட அதிகம் மொத்தம்
விளக்குகளின் எண்ணிக்கை 26 71 82 102 89 77 53 500

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழல் விளக்கின் வாழ்நாள் அதிகபட்சம் 11 மாதங்களுக்கு மிகாமல் இருப்பதற்கான நிகழ்தகவு
Answer: B.   \(\dfrac{179}{500}\)
6.  7 சிலந்திகள், 7 கூடுகளை 7 நாட்களில் செய்தால் 1 சிலந்தி 1 கூட்டினை எத்தனை நாட்களில் செய்யும்?
Answer: C.   7
7.  வரிசையில் அடுத்த படத்தைக் கண்டுபிடி: இதழ் போன்ற வடிவங்கள் எண்ணிக்கையும் திசையும் மாறும் உருவத் தொடர் புதிர்
Answer: C.   உருவத் தொடர் புதிர் - விருப்பம் (C) - ஒரு கருப்பு இதழ் மற்றும் மூன்று வெள்ளை இதழ்கள் கொண்ட வடிவம்
8.  ஒரு நிதி மையத்தில், மாலினி ஆண்டிற்கு 15% என்ற வீதத்தில், 3 ஆண்டுகளுக்கு ரூ. 7,000/- முதலீடு செய்தார். கூட்டு வட்டி முறையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு மாலினி பெறும் வட்டித் தொகையும் மொத்தத் தொகையும் யாவை?
Answer: B.   கூட்டுவட்டி - ரூ. 3,646, தொகை - ரூ. 10,646
9.  ஒரு தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களின் சராசரி ஊதியம் ரூ. 60. அதில் அதிகாரிகள் 12 பேரின் சராசரி ஊதியம் ரூ. 400. மீதமுள்ள தொழிலாளர்களின் சராசரி ஊதியம் ரூ. 56 எனில் தொழிற்சாலையில் உள்ள மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை காண்
Answer: B.   1032
10.  கீழ்காணும் படத்தில் உள்ள நேர்க்கோடுகளின் எண்ணிக்கை நேர்க்கோடுகளை எண்ணும் செவ்வக வடிவ படம்
Answer: B.   12
11.  பின்வரும் படத்தில் விடுபட்ட எண் எது?

4 5
20 9
10 8
80 18
12 8
? 20
Answer: C.   96
12.  மூன்று பகா எண்களின் கூடுதல் 101. அவற்றில் இரண்டு எண்களுக்கு இடைப்பட்ட வித்தியாசம் 24 எனில் அவ்வெண்கள் யாவை?
Answer: D.   3, 61, 37
13.  A என்பவர் ஓரிடத்திலிருந்து ஒரு திசையை நோக்கி ஒரு கிலோ மீட்டர் நடந்த பிறகு இடப்பக்கம் திரும்பி \(\dfrac{1}{2}\) கிலோ மீட்டர் நடந்து பிறகு மீண்டும் இடப்பக்கம் திரும்பி நடந்து செல்கிறார். தற்போது அவர் கிழக்கு திசை நோக்கி நடந்து சென்றால், தொடக்கத்தில் அவர் எந்த திசையை நோக்கி நடக்கத் தொடங்கினார்?
Answer: A.   மேற்கு
14.  கொடுக்கப்பட்ட வட்ட வரைபடமானது ஒரு நாட்டின் குறிப்பிட்ட ஆண்டிற்குள் பல்வேறு விளையாட்டுக்கான செலவினத்தைக் காட்டுகிறது. கீழ்க்கண்ட வரைபடத்தைப் பார்த்து கேள்விக்கு பதில் கொடு. பல்வேறு விளையாட்டுகளுக்கான செலவினத்தை காட்டும் வட்ட விளக்கப்படம் எத்தனை சதவீதம் மொத்த செலவினத்தில் டென்னிஸுக்காக செலவிடப்படுகிறது?
Answer: A.   \(12\dfrac{1}{2}\%\)
15.  ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் \(\dfrac{1}{2} : \dfrac{1}{3} : \dfrac{1}{4}\) என்ற விகிதத்தில் உள்ளன. அதன் சுற்றளவு 104 செ.மீ. அதன் நீளமான பக்கத்தின் அளவு என்ன?
Answer: B.   48 செ.மீ.
16.  A-ன் வருமானம் B-யின் வருமானத்தை விட 20% குறைவாக உள்ளது எனில் B-யின் வருமானம் A-யின் வருமானத்தை விட எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?
Answer: B.   25%
17.  ஒரு கன சதுரத்தின் கன அளவு 125 கன செ.மீ. எனில் அதன் புறப்பரப்பளவு எவ்வளவு?
Answer: C.   150 ச.செ.மீ.
18.  \((x - y)\) -ன் 50% = \((x + y)\) -ன் 30% எனில் \(x\)-ல் \(y\)-ன் சதவீதம் என்ன?
Answer: A.   25%
19.  ஒரு எண்ணுடன் ஒன்றைக் கூட்ட அது 12, 18, 24, 32-ஆல் மீதமின்றி வகுபடுகிறது. அத்தகைய மீச்சிறு எண்
Answer: C.   287
20.  9, 225, 16, 196, 25, 169, _?_ , 144 என்ற தொடரில் விடுபட்ட எண்
Answer: C.   36
21.  \(4^{x}\times64^{2x}=16^{x+5}\) எனில், \(x\)-இன் மதிப்பு
Answer: D.   2
22.  ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ. 1,000 ஆனது ரூ. 1,150 ஆகிறது. 3% கூடுதலாக வட்டி வீதம் இருப்பின், தற்போதைய மொத்த மதிப்பு
Answer: D.   1,240
23.  ஒரு கூடையில் உள்ள மொத்த ஆரஞ்சு பழங்களில் 18% ஆனது 36 எனில் மொத்தமுள்ள ஆரஞ்சு பழங்களின் எண்ணிக்கை
Answer: C.   200
24.  இரண்டு மாடுகளின் விலை விகிதமானது 23 : 16. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் மாட்டின் விலை ரூபாய் 477-ஆக உயர்ந்தது மற்றும் இரண்டாவது மாட்டின் விலை 10% உயர்ந்தது. தற்போது விலையின் விகிதமானது 20 : 11 ஆகும். உண்மை விலையைக் காண்க.
Answer: A.   ரூபாய் 1,219, ரூபாய் 848
25.  ஒரு தெருவில் நிறுத்தப்பட்டுள்ள 25 அடி நீளமுள்ள ஏணி தரைமட்டத்திலிருந்து 24 அடி உயரமுள்ள சன்னலைத் தொடுகிறது. அடியை மாற்றாமல் அவ்வேணியை சுழற்ற அத்தெருவின் மறுபக்கத்திலுள்ள சன்னலை 7 அடி உயரத்தில் தொடுகிறது எனில் அத்தெருவின் அகலம்
Answer: D.   31
;