GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2025 Preliminary Examination

General Studies Questions 51 to 75

51.  கீழ்வரும் கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவற்றை பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:

கூற்று [A]: இந்திய அரசமைப்புச் சட்டம் மிகவும் குறிப்பாக நீதிப்புனராய்வு அதிகாரத்தைக் குறிப்பிடுகிறது.
காரணம் [R]: நீதித்துறையானது தனது நீதிப்புனராய்வு அதிகாரத்தை அடுத்தடுத்தாண்டுகளில் விரிவாக்கிக் கொண்டது.
Answer: C.   [A] ஆனது தவறு, [R] ஆனது சரி
52.  முன்னுரிமை அட்டவணை வரிசையின்படி சரியான வரிசை ஒழுங்கினைக் கண்டறிக
Answer: B.   துணை ஜனாதிபதி, மக்களவை சபாநாயகர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அரசாங்கத்தின் இணை அமைச்சர்கள்
53.  கீழ்க்காண்பவற்றுள் பொருத்தமற்றது எது?
Answer: C.   பிரகாஷ்சிங் வழக்கு (2006) - நீதித்துறைச் சீர்திருத்தம்
54.  கீழ்க்கண்ட பத்தியினை வாசித்து, பின்வருவனவற்றிற்கு விடையளிக்கவும். உங்கள் விடை இப்பகுதியை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும்.

பெண்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு நாடோ அல்லது ஒரு சமூகமோ முன்னேற்றம் அடைய முடியாது. பாலின வேறுபாட்டினை நாம் களைந்தால் குடும்பம், நாடு மற்றும் இந்த உலகம் வளர்ச்சி அடைவதற்கான திறமை மற்றும் அறிவினை பெண்கள் வெளிப்படுத்துவர். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொது செயலாளர் கோஃபி அன்னான் அவர்கள் பாலின சமத்துவம் என்பது குறிக்கோளை விடவும் மேலானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் வறுமையைக் குறைக்க, நீடித்த சீரான வளர்ச்சி மற்றும் சிறந்த ஆளுமைக் கட்டமைப்பிற்கு இது முன் நிபந்தனை என கூறியுள்ளார்.
Answer: B.   பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்
55.  "நாட்டின் அடிப்படைச் சட்டத்தின்படியே அன்றி எந்த ஒரு மனிதனும் கைது செய்யப்படவோ, சிறைப்படுத்தப்படவோ, நாடுகடத்தப்படுவதோ, அவரின் சொத்துக்களைக் கைப்பற்றவோ" வேறு எந்த வகையிலோ அழிக்கப்பட முடியாது.
இந்த புகழ்பெற்ற வாசகம் அமைந்துள்ள ஆவணம்...
Answer: C.   மகாசாசனம்
56.  தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் (NCDC) பற்றிய கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
(1) இது ஓர் சட்டப்பூர்வ கழகம்
(2) இது ஓர் தன்னாட்சி நிறுவனமாகும்
(3) இன்று இதுவோர் பொது நிதி நிறுவனமாக இருக்கிறது
(4) இது வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது
Answer: B.   (1) மற்றும் (3) மட்டும்
57.  கூற்று [A]: எச்.ஐ.வி தொற்று பெரும்பாலும் உணர்வுள்ள நடத்தை முறை காரணமாக பரவுகிறது.
காரணம் [R]: இரத்தமாற்ற நோயாளிகளுக்கு எய்ட்ஸ் தொற்று மோசமான கண்காணிப்பு காரணமாக ஏற்படலாம்.
Answer: C.   கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல
58.  பின்வரும் திட்டங்கள் மற்றும் கருத்துகளை அது தொடர்புடைய பெயர்களுடன் சரியாக பொருத்துக:
(a) ரயத்வாரி திட்ட அறிக்கை 1. தந்தை பெரியார்
(b) பஞ்சமர் பள்ளிகளை ஆதிதிராவிடர் பள்ளிகள் என அழைப்பது 2. தாமஸ் மன்றோ மற்றும் ப்ரான்சிஸ் எலிஸ்
(c) ஆணாதிக்க பேரினவாதத்தை எதிர்த்த தலைவர் 3. ஜான் ரால்ஸ்
(d) நீதிக் கோட்பாடு 4. அயோதிதாசர் மற்றும் சிங்காரவேலர்
Answer: D.   2 4 1 3
59.  கூற்று [A]: பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது சமூக நீதியின் ஒரு மூலக்கல்லாகும். பணிபுரியும் பெண்கள் விடுதிகள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள் மற்றும் பெண்கள் தொடர்பான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற முயற்சிகள் பணித் தொகுதியில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
காரணம் [R]: பொருளாதாரத்தில் பெண்கள் பங்கேற்பதற்கான தடைகளை நீக்கி, அரசாங்கம் மிகவும் உள்ளடக்கிய மற்றும் துடிப்பான தொழிலாளர்களை வளர்த்து வருகிறது.
Answer: C.   கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
60.  இந்தியாவில் திறந்தவெளி மலம் கழிப்பதை ஒழிப்பதற்கும், 'ஸ்வச் பாரத் மிஷன்' மூலம் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்
Answer: C.   பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் தூய்மைக் கலாச்சாரத்தை வளர்ப்பது
61.  புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை மூன்று வருடங்களுக்கு வழங்குவது என்று தொடங்கப்பட்டது நிதி சட்டம்?
Answer: A.   நிதிச் சட்டம், 2016
62.  பின்வருவனவற்றுள் கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்வு குறித்த தவறான பொருத்தத்தைக் கண்டறிக.
(1) கிராமத்திலிருந்து கிராமத்திற்கு இடம் பெயர்வு - தலைகீழ் எதிர் நகர்வு
(2) கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்வு - நெருக்குதல் வெளியேறுதல் செயல்பாடு
(3) நகரத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்வு - நகர்புற மறுசுழற்சி
(4) நகரத்திலிருந்து கிராமத்திற்கு இடம் பெயர்வு - கிராமப்புற மறுசுழற்சி
Answer: A.   (1) மற்றும் (4)
63.  தமிழ்நாட்டில் உள்ள முக்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரம்
Answer: A.   காற்றாலை
64.  கூற்று [A]: இடப்பெயர்வு என்பது பிராந்தியங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு இடையே மக்கள் இடம்பெயர்தல் ஆகும்.
காரணம் [R] : இடப்பெயர்வு வெளிப்புறமாகவோ அல்லது சர்வதேசமாகவோ இருக்கலாம்.
Answer: C.   கூற்று [A] ம் மற்றும் காரணம் [R] ம் சரி
65.  பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(1) கோயம்புத்தூர் - தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
(2) மதுரை - தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரம்
(3) நாமக்கல் - தமிழகத்தின் நெற்களஞ்சியம்
(4) தஞ்சாவூர் - முட்டை நகரம்
Answer: D.   (3) மற்றும் (4)
66.  பின்வருவனவற்றுள் எவை சரியாகப் பொருந்தியுள்ளன?
(1) குறிஞ்சி - கிளி
(2) முல்லை - காட்டுக் கோழி
(3) மருதம் - வானம்பாடி
(4) நெய்தல் - ஆந்தை
(5) பாலை - புறா
Answer: D.   (1), (2), (5)
67.  சரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்கவும்.
(1) காவேரிப்பாக்கம் கல்வெட்டு - வரகுணா
(2) திருமுக்கூடல் கல்வெட்டு - வீரராஜேந்திரா
(3) திருவாலங்காடு செப்பேடு - முதலாம் ராஜேந்திரா
(4) உத்திரமேரூர் கல்வெட்டு - முதலாம் பராந்தகா
Answer: C.   (2), (3) மற்றும் (4) சரி
68.  பின்வரும் கூற்று மற்றும் காரணத்தைப் படித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
கூற்று (A]: 1801ம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் ஓர் சக்திவாய்ந்த படையுடன் சிவகங்கையைத் தாக்கினர்.
காரணம் [R]: 1801ம் ஆண்டில் மருது சகோதரர் சின்ன மருது ஊமைதுரைக்கு அடைக்கலம் கொடுத்தார்.
Answer: C.   கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி மற்றும் காரணம் [R] என்பது கூற்று [A] இன் சரியான விளக்கம்
69.  மதராஸ் மாகாணத்தில் ஒத்துழையாமை இயக்க எதிர்ப்பு சங்கத்தை தொடங்கிய கட்சியை அடையாளம் காண்க.
Answer: B.   நீதிக்கட்சி
70.  'உன்னதமான, தூய்மையான மனிதச் சிந்தனையின் தொகுதியே திருக்குறள்' - என்னும் எம். ஏரியலின் கருத்தை அடியொற்றி திருக்குறளை 'தமிழர் வேதம்' எனக் குறிப்பிட்டவர்
Answer: A.   மகாத்மா காந்தியடிகள்
71.  சரியான கூற்றினைக் கண்டறிக.
(1) திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்தவர் - அப்பாதீட்சிதர்
(2) திருக்குறளை ஜெர்மனில் மொழிபெயர்த்தவர் - ஏரியல்
(3) திருக்குறள் 'அ'கரத்தில் தொடங்கி 'ன'கரத்தில் முடிகிறது
(4) நட்பியல் 13 அதிகாரங்களைக் கொண்டுள்ளது
Answer: B.   (1), (3) மட்டும்
72.  சான்றாண்மையின் இலக்கணம் குறித்து வள்ளுவர் கூறுவனவற்றை நிரல்படுத்துக.
(1) நாணம்
(2) வாய்மை
(3) அன்பு
(4) ஒப்புரவு
(5) கண்ணோட்டம்
Answer: D.   (3), (1), (4), (5), (2)
73.  கூற்று [A]: "எல்லாப் பொருளும் இதன்பா லுள,
இதன்பால் இல்லாத எப்பொருளு மில்லை"
காரணம் [R]: திருவள்ளுவரின் கருத்துகளில் பல அவர் காலத்தில் நிலவிய கொள்கைகளோடு ஒப்பிடும் போது புதுமையானவை, புரட்சிகரமானவை.
Answer: D.   [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது கூற்று [A]விற்கு சரியான விளக்கமல்ல
74.  "இருப்பு முகம் செறித்த ஏந்தெழில் மருப்பின்" இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி
Answer: A.   உவமை அணி
75.  சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
தமிழகத்தில் சங்ககால காசுகள் கிடைத்த இடங்கள்.
(1) தர்மபுரி - தொப்பூர்
(2) சேலம் - கன்னியன் குட்டை
(3) ஈரோடு - முக்கொம்பு
(4) திருச்சி - வெம்பாவூர்
Answer: D.   (2) மற்றும் (4) சரி
;