GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2025 Preliminary Examination

37.  கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடு:
நேற்றைப் போல் இன்று இல்லை. இன்று போல் நாளை இல்லை என்கிற நியதியை அறிந்து நாளும் கற்கிற கட்டாயம் வருகிறபொழுது நாம் மீளவும் இளையோராகி பயிலத் தொடங்குகிறோம். புறத் தேவைகளுக்கான அறிவுசார் நூல்களும் அகத்தேவைகளுக்கான அறம்சார் நூல்களும் நம் முன் பக்கங்களாய் விரிந்து கிடக்கின்றன. மனிதன் இரு கால்களை ஊன்றி நடக்கப்பழகியதில் இருந்து பெற்ற வளர்ச்சிக்கு இன்னும் முடிவில்லை. நடை ஒன்று தான் நம் உடல் நலம் பேணும் பயிற்சிகளில் முதன்மையான ஒன்று என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அது புறநடை, அதுபோல் இளமையில் கற்கத் தொடங்கிய அகநடைப் பயிற்சி காலம் முழுவதும் தொடர வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இளமையில் கற்றல் என்பது இளமையாகவே இருக்க உதவும் கலையாக கல்வி மலர்கிறது என்பதை உணர்த்துகிறது.
உள்ளத்தேவைகளுக்காக நம் முன் இருப்பவை எவை?

Answer: C.   அற நூல்கள்
;