TNPSC Group 2 2025 Preliminary Examination
General Tamil Questions 26 to 50
26.
பிழையற்ற தொடரைத் தேர்க:
Answer:
A.
அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவிந்தன. தொண்டர்கள் பரிசுப் பொருட்களைக் குவித்தனர்.
27.
மோந்து பார்த்தால் வாடிவிடும் அனிச்சம் மலர். என்ன செய்தால் வாடுவர் விருந்தினர்?
Answer:
D.
முகம் திரிந்து நோக்கினால்
28.
மனைக்கு விளக்கம் மடவார்; மடவார்
தனக்குத் தகைசால் புதல்வர்;
- என்ற அடிகள் இடம்பெறும் நீதி நூலைக் கண்டறிக.
தனக்குத் தகைசால் புதல்வர்;
- என்ற அடிகள் இடம்பெறும் நீதி நூலைக் கண்டறிக.
Answer:
D.
நான்மணிக்கடிகை
29.
"ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை" என்ற அடி இடம்பெற்றுள்ள நூல்
Answer:
B.
முதுமொழிக்காஞ்சி
30.
ஏலாதியில் கூறப்பட்டுள்ள சமணத்திற்கே உரிய அறக்கருத்து
Answer:
C.
கொல்லாமை
31.
உ.வே. சாமிநாதரின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் ________.
Answer:
C.
என் சரிதம்
32.
பெருஞ்சித்திரனாரால் நடத்தப்படாத இதழைத் தெரிவு செய்க
Answer:
C.
தேசபக்தன்
33.
"கனலி" என்ற சொல்லைக் குறிக்காத சொல்லைத் தேர்க.
Answer:
D.
கரும்பு
34.
"இரவில் மாட்டிய இலங்குசுடர் நெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை...," - இச்சங்கச் செய்யுளை இயற்றிய ஆசிரியரைக் கண்டறிக.
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை...," - இச்சங்கச் செய்யுளை இயற்றிய ஆசிரியரைக் கண்டறிக.
Answer:
C.
உருத்திரங்கண்ணனார்
35.
BLOGGER-பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க.
Answer:
B.
வலைப்பதிவர்
36.
பிறமொழிச் சொல்லைத் தேர்ந்தெடு
Answer:
C.
வாடகை
37.
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடு:
நேற்றைப் போல் இன்று இல்லை. இன்று போல் நாளை இல்லை என்கிற நியதியை அறிந்து நாளும் கற்கிற கட்டாயம் வருகிறபொழுது நாம் மீளவும் இளையோராகி பயிலத் தொடங்குகிறோம். புறத் தேவைகளுக்கான அறிவுசார் நூல்களும் அகத்தேவைகளுக்கான அறம்சார் நூல்களும் நம் முன் பக்கங்களாய் விரிந்து கிடக்கின்றன. மனிதன் இரு கால்களை ஊன்றி நடக்கப்பழகியதில் இருந்து பெற்ற வளர்ச்சிக்கு இன்னும் முடிவில்லை. நடை ஒன்று தான் நம் உடல் நலம் பேணும் பயிற்சிகளில் முதன்மையான ஒன்று என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அது புறநடை, அதுபோல் இளமையில் கற்கத் தொடங்கிய அகநடைப் பயிற்சி காலம் முழுவதும் தொடர வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இளமையில் கற்றல் என்பது இளமையாகவே இருக்க உதவும் கலையாக கல்வி மலர்கிறது என்பதை உணர்த்துகிறது.
உள்ளத்தேவைகளுக்காக நம் முன் இருப்பவை எவை?

அற நூல்கள்
38.
இளமையாக இருக்க உதவும் கலை எது?
Answer:
D.
கல்வி
39.
மருத்துவர்கள் வலியுறுத்தும் பயிற்சிகளில் முதன்மையானது எது?
Answer:
A.
புறநடைப்பயிற்சி
40.
வாழ்நாள் காலம் முடியும் வரை பின்பற்றவேண்டிய ஒன்று எது?
Answer:
B.
அகநடைப்பயிற்சி
41.
கற்க வேண்டும் என்ற அவசியம் வருகின்ற போது நாம் எவ்வாறு மாறுகிறோம்?
Answer:
D.
இளமையாக
42.
'இடியோசை கேட்ட நாகம்போல'-என்ற உவமைத்தொடர் உணர்த்தும் பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer:
C.
மிரட்சி
43.
நீறு பூத்த நெருப்புப்போல
-நீறு என்பதன் பொருள் என்ன?
-நீறு என்பதன் பொருள் என்ன?
Answer:
A.
சாம்பல்
44.
பொருளறிந்து பொருத்துக:
| (a) ஓதுதல் | 1. திருத்தமாகச் சொல்லுதல் |
| (b) மொழிதல் | 2. பலர் அறியச் சொல்லுதல் |
| (c) விளம்புதல் | 3. காதில் மெல்லச் சொல்லுதல் |
| (d) உளறுதல் | 4. ஒன்றுக்கொன்று சொல்லுதல் |
Answer:
D.
3 1 2 4
45.
பழமொழியினை நிறைவு செய்க:
"மாலைசுற்றிப் பிறந்த பிள்ளை _______ ஆகாது".
"மாலைசுற்றிப் பிறந்த பிள்ளை _______ ஆகாது".
Answer:
D.
மாமனுக்கு
46.
'மீதூண் விரும்பேல்' என்ற ஆத்திச்சூடிக்குத் தொடர்புடைய பழமொழியைக் கண்டறிக.
Answer:
D.
நொறுங்கத் தின்றால் நூறு வயது
47.
புவியியல் மற்றும் சுரங்க ஆணையர் அலுவலகத்தில் உள்ள வேதியியல் ஆய்வகம் ரூபாய் 2 கோடி செலவில் மேம்படுத்தி புதுப்பிக்கப்படும் என்னும் அறிவிப்பு எத்துறைச் சார்ந்ததென்று கண்டறிக?
Answer:
A.
இயற்கை வளங்கள் துறை
48.
பொருத்துக:
| (a) Bracings | 1. பைஞ்சுதை |
| (b) Briquette | 2. மெல்லுறை |
| (c) Cement | 3. கட்டுச்சட்டங்கள் |
| (d) Veneer | 4. கட்டி |
Answer:
A.
3 4 1 2
49.
"Assailant" - என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்.
Answer:
A.
தாக்குபவர்
50.
பொருத்துக:
| (a) Arete | 1. களிமண் பாறை |
| (b) Arenaceous rock | 2. கத்திமுனைக் குன்று |
| (c) Argillaceous rock | 3. இடையாழ கிரானைட்டு பாறை |
| (d) Aplite | 4. மணற் பாறை |
Answer:
D.
2 4 1 3