GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2018

General Studies Questions 1 to 25

1.  பின்வரும் காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு, பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.
(1) இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.
(2) இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.
(3) தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய வைக்கும்.
A.   (1), (2) மற்றும் (3)
B.   (1) மற்றும் (2) மட்டும்
C.   (2) மற்றும் (3) மட்டும்
D.   (1) மற்றும் (3) மட்டும்
Answer: B.  (1) மற்றும் (2) மட்டும்
2.  சரியாகப் பொருத்துக:
(a) ஆஸ்மியம் 1. சிறந்த மின்கடத்தி
(b) லித்தியம் 2. மிகக் கனமான உலோகம்
(c) டங்ஸ்டன் 3. மிக இலேசான உலோகம்
(d) சில்வர் 4. அதிக உருகுநிலை - 3300°C
A.   1 2 3 4
B.   2 1 4 3
C.   2 3 4 1
D.   3 4 1 2
Answer: D.  3 4 1 2
3.  பட்டியல் I-லிருந்து பட்டியல் II-ஐ சரியாகப் பொருத்துக:
பட்டியல்-I
(கரைசல்)
பட்டியல்-II
(pH-மதிப்பு)
(a) குருதி 1. 6.5
(b) சிறுநீர் 2. 7.3 - 7.5
(c) வினிகர் 3. 5.5 - 7.5
(d) பால் 4. 2.4 - 3.4
A.   2 3 4 1
B.   2 4 1 3
C.   4 2 3 1
D.   3 1 4 2
Answer: B.  2 4 1 3
4.  2017 அக்டோபர் 4 முதல், 2017 அக்டோபர் 10 வரையில் கொண்டாடப்பட்ட உலகச் சிறப்பு வாரத்தினது கருப்பொருள்:
A.   விண்வெளியில் புது உலகத்தினைத் தேடல்
B.   நலமுடைமைக்கான யோகா
C.   உள்ளடங்கிய வளர்ச்சிக்கான நீர் மற்றும் ஆற்றல்
D.   அமைதி, முன்னேற்றம் மற்றும் செழுமை
Answer: D.  அமைதி, முன்னேற்றம் மற்றும் செழுமை
5.  2017-ம் ஆண்டு, குவஹாட்டியில் நடைபெற்ற உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டவர்களுள் மிகச் சிறந்த வீரர் என பாராட்டப்பட்டவர்:
A.   நபின் சந்திரா
B.   சர்ஜுபாலா தேவி
C.   மினு பாகமலரி
D.   அங்குசிட்டா போரோ
Answer: D.  அங்குசிட்டா போரோ
6.  ‘பனி பாலம் நடவடிக்கை’ எந்த அமைப்போடு தொடர்புடையது?
A.   ISS
B.   ISRO
C.   NASA
D.   ESA
Answer: C.  NASA
7.  புது டெல்லியில், 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அமைப்பு எது?
A.   அனைத்திந்திய யுனானி மருத்துவ நிறுவனம்
B.   அனைத்திந்திய சித்த மருத்துவ கழகம்
C.   அனைத்திந்திய ஆயுர்வேத மருத்துவ கழகம்
D.   அனைத்திந்திய இயற்கை மருத்துவ கழகம்
Answer: C.  அனைத்திந்திய ஆயுர்வேத மருத்துவ கழகம்
8.  2017 இதற்கான பட்டம் வென்றவரையும், சாம்பியன் ஷிப் பட்டத்தையும் பொருத்துக:
(a) செல்வி.சாய்கோம் மீராபாய் சானு - 1. உலக இளநிலை (U 20) சதுரங்க சாம்பியன்ஷிப்
(b) செல்வி மேரி காம் - 2. உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப்
(c) திரு. கோபி தொளெக்கல் - 3. ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்
(d) செல்வன் அரவிந்த் சிதம்பரம் - 4. ஆசிய மாராத்தான் சாம்பியன்ஷிப்
A.   (A) 3 4 2 1
B.   (B) 2 3 4 1
C.   (C) 2 3 1 4
D.   (D) 3 2 1 4
Answer: D.  (D) 3 2 1 4
9.  2017-ஆம் ஆண்டிற்கான வியாஸ் சம்மான் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‘துக்கம் கக்கம்’ என்ற நாவலின் ஆசிரியரான இவர், திரு/திருமதி
A.   சுரிந்தர் வர்மா
B.   சுனிதா ஜெயின்
C.   மம்தா காலியா
D.   கமல் கிஷோர் கோயன்கா
Answer: C.  மம்தா காலியா
10.  15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்?
A.   ஜனவரி 1, 2018
B.   ஏப்ரல் 1, 2018
C.   ஏப்ரல் 1, 2020
D.   ஜனவரி 1, 2020
Answer: C.  ஏப்ரல் 1, 2020
11.  செப்டம்பர்2017-ல் இந்தியாவின் முதல் UNESCO பாரம்பரிய சான்றிதழ் பெற்ற நகரம் எது?
A.   பூரி
B.   காஞ்சிபுரம்
C.   அவுரங்காபாத்
D.   அகமதாபாத்
Answer: D.  அகமதாபாத்
12.  இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டர்செஸ் விளையாட்டு சாம்பியன் 2017 யார்?
A.   ஸ்ரீநாத் நரேன்
B.   ஸ்ரீநாத் நாராயணன்
C.   ஸ்ரீநாத் வேணு
D.   ஸ்ரீநாத் ஸ்ரீநிவாசன்
Answer: B.  ஸ்ரீநாத் நாராயணன்
13.  பொருத்துக:
குறைபாட்டு நோய்கள்
(a) A 1. பெல்லக்ரா
(b) B1 2. நிக்டலோபியா
(c). B6 3. பெர்னீசியஸ் அனீமியா
(d) B12 4. பெரி-பெரி
A.   2 3 1 4
B.   1 4 2 3
C.   4 1 3 2
D.   2 4 1 3
Answer: D.  2 4 1 3
14.  கீழ்க்கண்டவற்றுள் தவறான இணைகள் யாது?
I. குளோரோபுளோரோ கார்பன் - குளிர்சாதனப் பெட்டி
II. மீத்தேன் - பண்ணை மண்ணை உழுதல்
III. நைட்ரஸ் ஆக்ஸைடு - கால்நடைகளில் செரித்தல்
IV. கார்பன் டை ஆக்ஸைடு - புதை படிவ எரிபொருட்களை எரித்தல்
A.   I மற்றும் II
B.   II மற்றும் III
C.   III மற்றும் IV
D.   I மற்றும் IV
Answer: B.  II மற்றும் III
15.  காற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸின் சுவாச ஈவு ____________ ஆகும்.
A.   ஒன்று
B.   நான்கு
C.   முடிவற்றது
D.   ஒன்றுக்கு குறைவானது
Answer: C.  முடிவற்றது
16.  எந்த மாநில அரசு க்யான்கங்ஞ் மின்-வர்க்க திட்டத்தினை செயல்படுத்தியது?
A.   ஆந்திர பிரதேஷ்
B.   டெல்லி
C.   கேரளா
D.   குஜராத்
Answer: D.  குஜராத்
17.  நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஒன்றிய அமைச்சகம் 2017-நவம்பர்-28 அன்று ICMR உடன் இணைந்து IHMI-யினை துவக்கியுள்ளது. IHMI என்பது எதைக் குறிக்கும்?
A.   இந்திய அதிக இரத்த அழுத்தம் மேலாண்மை தொடக்கம்
B.   இந்திய தேகநிலை மற்றும் நல மேலாண்மை தொடக்கம்
C.   இந்தியனின் இதய மற்றும் மூளை நல அறிவு
D.   இந்திய தேகநிலை ஆரோக்கியம் மற்றும் பராமரித்தல் தொடக்கம்
Answer: A.  இந்திய அதிக இரத்த அழுத்தம் மேலாண்மை தொடக்கம்
18.  உணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட உலக தரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட கமிஷன்
யாது?
A.   கோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன்
B.   உணவு மற்றும் வேளாண்மைத் துறை கமிஷன்
C.   உலக சுகாதார கமிஷன்
D.   இந்திய தர குழுமம்
Answer: A.  கோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன்
19.  அளிப்பு நிலையாக இருக்கும் காலம்
A.   குறுகிய காலம்
B.   மிகக் குறுகிய காலம்
C.   நீண்ட காலம்
D.   மிக நீண்ட காலம்
Answer: B.  மிகக் குறுகிய காலம்
20.  பொருத்துக:
(a) ஆளுநர் 1. விதி 171
(b) முதலமைச்சர் 2. விதி 170
(c) மேலவை 3. விதி 153
(d) சட்டசபை 4. விதி 163
A.   3 2 4 1
B.   3 4 1 2
C.   1 4 3 2
D.   2 3 1 4
Answer: B.  3 4 1 2
21.  கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
தலக் காற்றுகள் இடங்கள்
(a) சின்னுக் 1. மெக்சிகோ வளைகுடா
(b) ஃபான் 2. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
(c) மிஸ்ட்ரல் 3. வடக்கு இத்தாலி
(d) நார்ட் 4. ஆல்ப்ஸ் மலை
A.   2 3 4 1
B.   4 3 2 1
C.   1 4 2 3
D.   4 2 1 3
Answer: A.  2 3 4 1
22.  வரிசை I உடன் வரிசை II-னை பொருத்துக:
முக்கிய வெள்ளச் சீர்குலைவு
வரிசை I வரிசை II
(a) சைனா 1. செயின்ட் பிரான்ஸிஸ்
(b) பென்சில்வேனியா 2. அஸ்ஸாம்
(c) லாஸ் ஏஞ்சல்ஸ் 3. ஹாவாங் ஹோ
(d) இந்தியா 4. ஜோன்ஸ்டான்
A.   4 1. 2 3
B.   3 4 1 2
C.   2 1 3 4
D.   3 1 2 4
Answer: B.  3 4 1 2
23.  வாக்பதர் எழுதிய நூல்
A.   பஞ்ச சித்தாந்திகா
B.   அஷ்டாங்க சம்கிருகம்
C.   கிருதார்ச்சுனியம்
D.   அமரகோஷம்
Answer: B.  அஷ்டாங்க சம்கிருகம்
24.  கொரில்லா போர் முறை என்றால்
A.   முறையான போர் முறை
B.   பயிற்சி பெற்ற போர் முறை
C.   முறைசாரா போர் முறை
D.   கலப்பு போர் முறை
Answer: C.  முறைசாரா போர் முறை
25.  1948-ம் ஆண்டு மின்பகிர்மான சட்டத்தின்படி தமிழகத்தில் எந்த ஆண்டு மின்சார வாரியம் (TNEB) அமைக்கப்பட்டது?
A.   1957 ஜூலை 1
B.   1957 ஆகஸ்ட் 1
C.   1957 செப்டம்பர் 1
D.   1957 அக்டோபர் 1
Answer: A.  1957 ஜூலை 1
;