GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2018

General Tamil Questions 51 to 75

1.  கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
A.   சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது
B.   வினைத்தொகையில் வல்லினம் மிகாது
C.   வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது
D.   உவமைத் தொகையில் வல்லினம் மிகாது
Answer: B.  வினைத்தொகையில் வல்லினம் மிகாது
2.  'தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது' எனத் தேர்ந்தெடு.
A.   பண்புத்தொகை
B.   அன்மொழித்தொகை
C.   வினைத்தொகை
D.   உவமைத்தொகை
Answer: B.  அன்மொழித்தொகை
3.  பரிதிமாற்கலைஞருக்கு "திராவிட சாஸ்திரி" என்னும் பட்டத்தை வழங்கியவர்
A.   மு.சி. பூர்ணலிங்கம்
B.   சி.வை. தாமோதரனார்
C.   மறைமலையடிகள்
D.   திரு.வி. கலியாண சுந்தரனார்
Answer: B.  சி.வை. தாமோதரனார்
4.  'எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி' என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் இவ்வடி இடம் பெற்ற நூல்
A.   குற்றாலக் குறவஞ்சி
B.   முல்லைப் பாட்டு
C.   மதுரைக் காஞ்சி
D.   திருமுருகாற்றுப்படை
Answer: C.  மதுரைக் காஞ்சி
5.  'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' – என அழைக்கப்படும் நகரம்
A.   திருநெல்வேலி
B.   தஞ்சை
C.   திருச்சி
D.   மதுரை
Answer: D.  மதுரை
6.  “உலகினில் நாகரிகம் முற்றிலும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்?
A.   ஜி.யு. போப்
B.   கால்டுவெல்
C.   பாரதிதாசன்
D.   பாரதியார்
Answer: B.  கால்டுவெல்
7.  நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றியவர் யார்?
A.   தவத்திரு சங்கரதாஸ்
B.   பரிதிமாற் கலைஞர்
C.   பம்மல் சம்பந்தனார்
D.   திண்டிவனம் இராமசாமி ராஜா
Answer: B.  பரிதிமாற் கலைஞர்
8.  கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடு
A.   கரைவெட்டி
B.   கோவன்புத்தூர்
C.   வெள்ளோடு
D.   சித்திரங்குடி
Answer: B.  கோவன்புத்தூர்
9.  ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்தில் உள்ளது என்பதைத் தெரிவு செய்க
A.   மேற்கு வங்காள
B.   குஜராத்
C.   உத்தரஞ்சல்
D.   உத்தர பிரதேசம்
Answer: C.  உத்தரஞ்சல்
10.  கண்ணதாசன் படைத்த நாடகம்
A.   மாங்கனி
B.   ஆட்டனத்தி ஆதிமந்தி
C.   கல்லக்குடி மகா காவியம்
D.   இராசதண்டனை
Answer: D.  இராசதண்டனை
11.  கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
அயற்கூற்றில் வருவன
A.   மேற்கோள்குறிகள் வராது
B.   தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது
C.   அது, அவை – அங்கே என மாறும்
D.   காலப் பெயர்கள் அந்நாள், மறுநாள் என மாறும்
Answer: B.  தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது
12.  “புத்தகம் வாசிப்பதனை கடமையாக ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படி செய்தால், புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது” என்று கூறியவரை தேர்ந்தெடு
A.   டாக்டர். மு. வரதராசனார்
B.   பேரறிஞர் அண்ணா
C.   நேரு
D.   காந்தி
Answer: C.  நேரு
13.  கீழ்க்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததைத் தேர்ந்தெடு
A.   செந்தமிழ் ஞாயிறு
B.   செந்தமிழ்ச் செல்வர்
C.   இலக்கியச் செம்மல்
D.   தமிழ்ப்பெருங்காவலர்
Answer: C.  இலக்கியச் செம்மல்
14.  'உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு' என்னும் நூலை எழுதியவர் யார்?
A.   இபான்
B.   எச். ஏ. கிருட்டிணப் பிள்ளை
C.   தால்சுதாய்
D.   முனைவர் எமினோ
Answer: C.  தால்சுதாய்
15.  பொருத்துக:
(a) பெருஞ்சித்திரனார் 1. காவியப்பாவை
(b) சுரதா 2. குறிஞ்சித்திட்டு
(c) முடியரசன் 3. கனிச்சாறு
(d) பாரதிதாசன் 4. தேன்மழை
A.   2 3 4 1
B.   3 4 1 2
C.   2 4 1 3
D.   4 3 2 1
Answer: B.  3 4 1 2
16.  பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?
A.   கொய்யாக்கனி
B.   கனிச்சாறு
C.   கல்லக்குடி மகா காவியம்
D.   நூறாசிரியம்
Answer: C.  கல்லக்குடி மகா காவியம்
17.  பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக:
(a) யுனெஸ்கோ விருது 1. 21,400
(b) அஞ்சல்தலை 2. 10,700
(c) பங்கேற்ற கூட்டங்கள் 3. 1970
(d) உரையாற்றிய மணிநேரம் 4. 1978
A.   4 3 1 2
B.   3 4 2 1
C.   2 3 4 1
D.   1 3 4 2
Answer: B.  3 4 2 1
18.  திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு
A.   மதுரைக் காண்டம்
B.   கூடற் காண்டம்
C.   வஞ்சிக் காண்டம்
D.   திருவாலவாய்க் காண்டம்
Answer: C.  வஞ்சிக் காண்டம்
19.  “நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்” இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு.
A.   முதலாம் குலோத்துங்கன்
B.   இராசராசன்
C.   கரிகாலன்
D.   பராந்தகன்
Answer: C.  கரிகாலன்
20.  'மணிமேகலை' - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்
A.   மணிமேகலா தெய்வம்
B.   சுதமதி
C.   தீவதிலகை
D.   அறவண அடிகள்
Answer: C.  தீவதிலகை
21.  "சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண்செல்வம் செல்வமென் பதுவே” - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?
A.   முன்றுறை அரையனார்
B.   காரியாசான்
C.   மிளைகிழான் நல்வேட்டனார்
D.   கணிமேதாவியார்
Answer: C.  மிளைகிழான் நல்வேட்டனார்
22.  தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது
A.   மதுரைக் காண்டம்
B.   சுந்தர காண்டம்
C.   திருவாலவாய்க் காண்டம்
D.   கூடற் காண்டம்
Answer: C.  திருவாலவாய்க் காண்டம்
23.  'அஷ்டப்பிரபந்தம்’ கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?
A.   எட்டு சிற்றிலக்கியங்கள்
B.   எட்டு பெருங்காப்பியங்கள்
C.   ஆறு நூல்கள்
D.   ஒன்பது உரைகள்
Answer: A.  எட்டு சிற்றிலக்கியங்கள்
24.  காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
A.   ஓராயிரத்து முப்பத்து நான்கு
B.   ஈராயிரத்து முப்பத்து நான்கு
C.   மூவாயிரத்து முப்பத்து நான்கு
D.   நான்காயிரத்து முப்பத்து நான்கு
Answer: B.  ஈராயிரத்து முப்பத்து நான்கு
25.  "நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்பு மினது தான்"
-என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
A.   அகநானூறு
B.   புறநானூறு
C.   திருக்குறள்
D.   ஐங்குறுநூறு
Answer: B.  புறநானூறு
;