GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 26 to 50

26.  "அறவுரைக் கோவை" என அழைக்கப் பெறும் நூல் எது?
Answer: A.   முதுமொழிக்காஞ்சி
27.  இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல் எது?
Answer: C.   திருக்குறள்
28.  குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?
Answer: C.   சிலப்பதிகாரம்
29.  எட்டுத்தொகை நூல்களில் "நாடகப் பாங்கில்" அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Answer: C.   கலித்தொகை
30.  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?
Answer: D.   கணிமேதாவியார்
31.  'என்காற் சிலம்பு மணியுடை அரியே"
இவ்வடிகளில் 'மணி' என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.
Answer: B.   மாணிக்கம்
32.  "கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
Answer: A.   திருவாசகம்
33.  தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு
Answer: B.   இந்துத்தானி
34.  'பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய' - இத்தொடரில் உள்ள “துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.
Answer: D.   பவளம்
35.  "தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த" இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
Answer: C.   பதிற்றுப்பத்து
36.  உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்
Answer: B.   சேக்கிழார்
37.  'புள்ளுறு புன்கண் தீர்த்தோன்'
இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.
Answer: C.   புறா
38.  பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
– இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?
Answer: D.   ஏகதேச உருவக அணி
39.  'முட்டையிட்டது சேவலா, பெட்டையா'?
Answer: D.   வினாவழு
40.  பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்: மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.
Answer: D.   கிளிஞ்சல்
41.  சொல்லைப் பொருளோடு பொருத்துக:
சொல் பொருள்
(a) வனப்பு 1. காடு
(b) அடவி 2. பக்கம்
(c) மருங்கு 3. இனிமை
(d) மதுரம் 4. அழகு
Answer: C.   4 1 2 3
42.  பிழையற்ற வாக்கியம் எது?
Answer: C.   ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
43.  'எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்' எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு.
Answer: D.   செய்வினைத் தொடர்
44.  பொருத்துக:
(a) என்றல் 1. முற்றும்மை
(b) நுந்தை 2. குறிப்பு வினைமுற்று
(c) யாவையும் 3. மரூஉ
(d) நன்று 4. தொழிற்பெயர்
Answer: A.   4 3 1 2
45.  உம்மைத்தொகையில் 'உம்' என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதைத் தேர்ந்தெடு.
Answer: C.   இடையிலும் இறுதியிலும் வரும்
46.  ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு.
Answer: D.   இரண்டாம் வேற்றுமை
47.  பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?
Answer: D.   கயற்கண்
48.  'தானம் தவம்இரண்டும் தங்கா வியனுலகம்' இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனைப் பெயரினைத் தேர்ந்தெடு.
Answer: B.   கூழmanagement மோனை
49.  "உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்" — என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?
Answer: B.   கன்றா
50.  "விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி"
இக்குறட்பாவில் காணப்படும் மோனை எது?
Answer: A.   மேற்கதுவாய் மோனை
;