GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 76 to 100

76.  மறைமலையடிகளாரின் மகள்
Answer: C.   நீலாம்பிகை அம்மையார்
77.  'உண்பது நாழி உடுப்பவை இரண்டே' - என்றபாடலடி இடம்பெற்றுள்ள நூல்
Answer: C.   புறநானூறு
78.  'போரை ஒழிமின்’- என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?
Answer: A.   நெடுங்கிள்ளி
79.  பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்
Answer: B.   திருவாசகம்
80.  'தேம்பாவணி' என்பது
Answer: A.   கிறித்தவக் காப்பியம்
81.  "தண்டமிழ் ஆசான்” என்று பாராட்டப் பெற்றவர்.
Answer: D.   சீத்தலைச்சாத்தனார்
82.  திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?
Answer: A.   ஜம்பத்து மூவர்
83.  '____________' எனத்தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.
Answer: B.   ஒன்றுகொலாம்
84.  பொருத்துக:
நூல் நூலாசிரியர்
(a) களவழி நாற்பது 1. முன்றுறையரையனார்
(b) கைத்நிலை 2. பொய்கையார்
(c) கார் நாற்பது 3. புல்லங்காடனார்
(d) பழமொழி 4. கண்ணங்கூத்தனார்
Answer: A.   2 3 4 1
85.  'அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்'? - இது பயின்று வந்த நூல் எது?
Answer: A.   பழமொழி
86.  தமிழெண்களைக் கூட்டுக:
ருஅ + ௬அ = ?
Answer: D.   கஉ௬
87.  ஆற்றீர் - பகுபத உறுப்பிலக்கணத்தின் படி எவ்வாறு பிரியும்?
Answer: D.   ஆற்று + ஆ + ஈர்
88.  தமிழ் _________ ஓசை மொழி.
Answer: C.   மெல்
89.  "சான்றாண்மை" - அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
Answer: B.   சான்+ றாண் + மை
90.  புறத்திணைகள் ______________ வகைப்படும்.
Answer: A.   பன்னிரெண்டு
91.  நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை?
Answer: B.   பொருட்டு, நிமித்தம்
92.  பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் ‘குளிர்காவுஞ்' இதில் இடம்பெற்றுள்ள 'கா' என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer: D.   காடு
93.  "நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத் துருபே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: B.   நன்னூல்
94.  நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் 'ஐவர்' என்பதன் இலக்கணம் யாது?
Answer: A.   ஒன்றொழி பொதுச் சொல்
95.  "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு" -
இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?
Answer: A.   வேற்றுமையணி
96.  “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்"
இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளை தேர்ந்தெடு.
Answer: B.   ஊன்றுகோல் - பெரியோர்சொல்
97.  "பட்டியுள் காளை படிபால் கறக்குமே நல்ல பசு வேளை தவிரா துழும்"
இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் வகையினை தேர்ந்தெடு.
Answer: B.   கொண்டு கூட்டுப் பொருள்கோள்
98.  "அண்ணம் நுனிநா வருட" எவ்வெழுத்துகள் தோன்றும்?
Answer: A.   ரழ வரும்
99.  னல முன்னும் ணள முன்னும் தநக்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி?
Answer: C.   னல முன்றனவும் ணளமுன் டணவும்
100.  "வித்தொடு சென்ற வட்டி"
என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன்பொருள் என்ன?
Answer: A.   பனையோலைப் பெட்டி
;