TNPSC Group 4 2019
Aptitude Questions 1 to 25
1.
ஒரு வகுப்பில் 12 மாணவர்களின் சராசரி உயரம் 152 செ.மீ எனக் கணக்கிடப்பட்டது. சரிபார்க்கும் போது 172 செ.மீ என்பதை 148 செ.மீ என தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிய வந்தது எனில் சரியான சராசரி உயரம் யாது?
Answer:
D.
154 செ.மீ
2.
இரண்டு மிகை எண்களின் வர்க்கங்களின் வித்தியாசம் 45. சிறிய எண்ணின் வர்க்கம் ஆனது பெரிய எண்ணின் நான்கு மடங்கிற்குச் சமம் எனில் அந்த எண்களைக் காண்க
Answer:
D.
9 மற்றும் 6
3.
மாட்டு வண்டிச் சக்கரத்தின் ஆரம் 35 செ.மீ. அது 154 மீ தொலைவு கடந்தால், அச்சக்கரம் எத்தனை முழுச்சுற்றுகள் சுற்றியிருக்கும்?
Answer:
A.
70
4.
சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கரின் வயதைப் போல 6 மடங்கு. 4 வருடங்கள் கழித்து அவரின் வயது மகன் வயதைப் போல 4 மடங்கு எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன?
Answer:
B.
36, 6
5.
\(0.\overline{35}\) என்ற எண்ணை பின்னமாக மாற்றுக
Answer:
A.
\(\dfrac{35}{99}\)
6.
200 க்கும் 300 க்கும் இடையே 6, 8 மற்றும் 9 ஆகிய எண்களால் வகுபடக் கூடிய எண்கள் எத்தனை உள்ளன?
Answer:
B.
இரண்டு
7.
A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
Answer:
B.
12 நாட்கள்
8.
14 அச்சுக் கோர்ப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர். 10 மணி நேரத்தில், 100 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக்கோர்ப்பவர்கள் தேவை?
Answer:
B.
10
9.
₹ 7,500 க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதங்களுக்கான தனி வட்டியைக் காண்க.
Answer:
D.
₹ 900
10.
கிரிக்கெட் வீரர் டோனியின் முதல் 30 ஆட்டங்களுக்கான சராசரி ஓட்டம் (runs) 72 எனக் கணக்கிடப்பட்டிருந்தது. 31 வது ஆட்டம் நடைபெற்ற பின் அவருடைய சராசரி ஒட்டம் 73 ஆக உயர்ந்தது எனில் 31 ஆவது ஆட்டத்தில் அவர் எடுத்திருந்த ஓட்டங்கள் (runs) எத்தனை?
Answer:
B.
103
11.
ஏறு வரிசையில் எழுதுக \(\dfrac{3}{4}, \dfrac{1}{2}, \dfrac{5}{8}\)
Answer:
A.
\(\dfrac{1}{2}, \dfrac{5}{8}, \dfrac{3}{4}\)
12.
T - 20 மட்டைப்பந்து போட்டியில் ராசு 50 பந்துகளை எதிர் கொண்டு 10 முறை "ஆறு” ஓட்டங்களை எடுத்தார். அவர் எதிர்கொண்ட பந்துகளில் ஒரு பந்தை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் போது அதில் அவர் “ஆறு” ஓட்டங்கள் எடுக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
Answer:
B.
\(\dfrac{4}{5}\)
13.
ஒரு குறிப்பிட்ட வாரத்தில் நகரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 34.8°C, 38.5°C, 33.4°C, 34.7°C, 35.8°C, 32.8°C, 34.3°C ஆக இருந்தது. அந்த வாரத்தின் சராசரி வெப்பநிலையைக் காண்க.
Answer:
B.
34.9°C
14.
ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர், அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8 செ.மீ மற்றும் மாறுபாட்டுக்கெழு 3.2 எனில், அவர்களுடைய உயரங்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.
Answer:
C.
5.24
15.
ரீணா மற்றும் உஷாவின் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீணாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?
Answer:
A.
7 : 4
16.
சுருக்குக: \(\dfrac{(3^3)^{-2}\times(2^2)^{-3}}{(2^4)^{-2}\times 3^{-4}\times 4^{-2}}\)
Answer:
C.
\(7\dfrac{1}{9}\)
17.
ஒரு கனச் சதுரத்தின் மொத்த வளைபரப்பு 384 m\(^{2}\) எனில் அதன் பக்கம் எவ்வளவு
Answer:
B.
8 மீ
18.
\(3(a-1),\ 2(a-1)^2,\ (a^2-1)\) -ன் மீச்சிறு பொது மடங்கு காண்க.
Answer:
D.
\(6(a-1)^2(a+1)\)
19.
\(1\dfrac{61}{64}\)-ன் முப்படி மூலம் காண்
Answer:
C.
\(\dfrac{5}{4}\)
20.
இரண்டு உருளைகளின் உயரங்கள் முறையே 1 : 2 மற்றும் அவற்றின் ஆரங்கள் முறையே 2 : 1 ஆகிய விகிதங்களிலிருப்பின், அவற்றின் கன அளவுகளின் விகிதம்
Answer:
C.
2 : 1
21.
ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டி வீதம் என்னவாக இருக்க வேண்டும்
Answer:
A.
10%
22.
ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் \(t_2 = \dfrac{3}{5}\) மற்றும் \(t_3 = \dfrac{1}{5}\) எனில் பொது விகிதம் காண்க.
Answer:
B.
\(\dfrac{1}{3}\)
23.
\(a_1 = -1\) மற்றும் \(a_n = \dfrac{a_{n-1}}{n+2},\ n>1\ \forall\ n \in \mathbb{N}\) எனில் \(a_2,\ a_3\) காண்க.
Answer:
D.
\(\dfrac{-1}{4},\ \dfrac{-1}{20}\)
24.
\(1 + 2 + 3 + \cdots + n = K\) எனில் \(1^3 + 2^3 + \cdots + n^3\) என்பது
Answer:
A.
\(K^2\)
25.
\(a^{m-n},\ a^m,\ a^{m+n}\) என்ற பெருக்குத் தொடர் வரிசையின் பொது விகிதம்
Answer:
C.
\(a^n\)