GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2022

General Studies Questions 26 to 50

26.  இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர்
Answer: C.   அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
27.  குரோமோசோம் 21-இல் ஒரு நகல் கூடுதலாக இருப்பின் அதனால் ஏற்படுவது
Answer: B.   டவுன் சின்ட்ரோம்
28.  சரியான இணையைத் தேர்வு செய்க.
(1) பட்டடக்கல் - வாதாபி சாளுக்கியர்
(2) எலிபெண்டா குகைகள் - அசோகர்
(3) எல்லோரா குகைகள் - ராஷ்டிரக்கூடர்கள்
(4) மாமல்லபுரம் - முதலாம் நரசிம்மவர்மன்
Answer: A.   1, 3, 4 சரியானது
29.  "இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்” எனக் கூறியவர்
Answer: B.   ஜவஹர்லால் நேரு
30.  கீழ்க்கண்டவற்றுள் எவை சரியான வாக்கியங்கள்?
(i) இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ளது.
(ii) பஞ்சாப்-ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ளன.
(iii) கங்கைச் சமவெளி மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழக்கில் மிசோரம் வரை பரவியுள்ளது.
(iv) பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி மேகாலயாவில் அமைந்துள்ளது.
Answer: B.   (i) மற்றும் (ii) மட்டும்
31.  சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
வாக்கியம் 1: கங்கை-பிரம்மபுத்திரா டெல்டர் பகுதிகளில் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் உள்ளன.
வாக்கியம் 2: அலையாத்திக் காடுகள் "மாங்குரோவ்” காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
Answer: A.   இரண்டு வாக்கியங்களும் சரி
32.  விருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக:
விருதுகள் அங்கீகாரம்
(a) பெருந்தலைவர் காமராசர் விருது 1. பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல்
(b) புதுமைப் பள்ளி விருது 2. சிறந்த செயல்பாட்டிற்கான விருது
(c) கனவு ஆசிரியர் விருது 3. சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்துதல்
(d) ராதா கிருஷ்ணன் விருது 4. ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல்
Answer: B.   2 3 1 4
33.  புவிசார் குறியீடு (GI tag) பொருட்களை அதன் இடத்துடன் பொருத்துக.
பொருள் இடம்
(a) மஞ்சள் 1. ஈரோடு
(b) பாய் 2. பத்தமடை
(c) வண்ணப்பூச்சு (ஓவியம்) 3. தஞ்சாவூர்
(d) சுங்குடி 4. மதுரை
Answer: B.   2 3 4 1
34.  பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான, சமூக, கல்வி மற்றும் உளவியல் நல வாழ்வு தொடர்பான சிந்தனை ________ எனப்படும்.
Answer: B.   தேசிய ஒருங்கிணைப்பு
35.  தேசிய ஊராட்சி நாள் ______ ஆகும்.
Answer: C.   ஏப்ரல் 24
36.  “இழுக்கா இயன்றது அறம்” – எவை?
Answer: A.   அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்
37.  சரியான இணைகளைத் தேர்வு செய்க.
1. ஒண்டிவீரன் - மருது சகோதரர்கள்
2. கோபால நாயக்கர் - திண்டுக்கல் கூட்டமைப்பு
3. குயிலி - புலித்தேவர்
4. முத்துவடுகநாதர் - காளையார் கோவில் போர்
Answer: D.   2 மற்றும் 4 சரி
38.  ஒருவனுடைய செல்வம் சமுதாயத்திற்குப் பயன்படுவதை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?
Answer: A.   ஊருணி
39.  தமிழ்நாட்டின் முதலாவது பல்முனையம் சரக்குப் போக்குவரத்துப் பூங்காவில் ___________ அமைப்பிற்குத் தொடர்பு இல்லை.
Answer: D.   சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
40.  2021ஆம் ஆண்டிற்கான “ஞானபீட விருதை” வென்றவர் யார்?
Answer: A.   தாமோதர் மௌசோ
41.  இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் அதிகாரத்தை மீட்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம், கீழ்கண்ட மூன்று அரசமைப்புக் கூறுகளைத் திருத்தியது.
Answer: C.   338B, 342A மற்றும் 366
42.  கீழ்க்காணும் வாக்கியங்களில் எவையெல்லாம் சரி?
(i) மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் CDRI கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டை சோதிக்க உள்நாட்டிலேயே “Om” எனும் ஆர்டி-பிசிஆர் கண்டறியும் கருவி உருவாக்கியுள்ளது.
(ii) ஒமிக்ரானின் குறிப்பிட்ட சோதனைக்கு எந்த ஒரு அரசு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் கருவி “Om”
(iii) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாவது கொரோனா வைரஸ் சோதனை கருவி "Om"
Answer: D.   (i), (ii) மற்றும் (iii) அனைத்தும்
43.  தீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் மூன்று ஆறுகள்
Answer: C.   நர்மதை, தபதி மற்றும் மாஹி
44.  சரியான இணையைக் கண்டுபிடி.
Answer: C.   பியூரின்கள் - அடினைன் மற்றும் குவானைன்
45.  மென்மையான வண்டல் பாறை அடுக்குகளின் துளைகளில் உள்ள வாயுவின் பெயர் என்ன?
Answer: A.   ஷேல் வாயு
46.  கூட்டுப் பொருளை அதன் வினைபடு தொகுதியுடன் இணை
கூட்டுப்பொருள் வினைபடு தொகுதி
(a) ஆல்கஹால் 1. -COOH
(b) ஆல்டிஹைடு 2. -OH
(c) கீட்டோன் 3. -CHO
(d) கார்பாக்சிலிக் அமிலம் 4. O=-C-
Answer: D.   2 3 4 1
47.  வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த எந்த விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன?
Answer: C.   பாஸ்கல் விதி
48.  கீழ்க்காணும் சமன்பாடுகளுள் எது விசைக்கான சமன்பாடில்லை?
Answer: B.   F = ΔP×t
49.  கீழ்க்கண்ட கலப்படத்தை உணவோடு இணை செய்க.
(a) ஹைட்ரஜன் பெராக்ஸைடு 1. பளபளப்பான தோற்றம்
(b) உணவு நிறமூட்டிகள் 2. பால்
(c) கால்சியம் கார்பைடு 3. பசுமைத் தோற்றம்
(d) கார்னோபா மெழுகு 4. வாழைப்பழத்தைப் பழுக்க வைப்பதற்கு
Answer: B.   2 3 4 1
50.  பொருத்துக:
(a) சிவசுப்ரமணியனார் 1. கயத்தாறு கோட்டை
(b) கட்டபொம்மன் 2. சங்ககிரி கோட்டை
(c) மருது சகோதரர்கள் 3. நாகலாபுரம்
(d) தீரன் சின்னமலை 4. திருப்பத்தூர் கோட்டை
Answer: A.   3 1 4 2
;