GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2022

Aptitude Questions 1 to 25

1.  15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹ 1,134 எனில் அதன் அசல்
Answer: A.   ₹ 16,000
2.  \(p\) மற்றும் \(q\)-ன் மீப்பெரு பொது வகுத்தி \(x\) மற்றும் \(q = xy\) எனில், \(p\) மற்றும் \(q\)-ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ளவற்றிலிருந்து காண்க.
Answer: D.   \(py\)
3.  ஒரு செவ்வகத்தின் நீளம் \((3x+2)\) அலகுகள் மற்றும் அதன் அகலம் \((3x-2)\) அலகுகள் எனில் அதன் பரப்பளவைக் காண்க. (\(x = 20\) அலகுகள்)
Answer: A.   3596 ச.அலகுகள்
4.  இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்பொழுது இரண்டிலும் ஒரே முகம் அல்லது கூடுதல் 4 கிடைக்க நிகழ்தகவு காண்க.
Answer: D.   \(\dfrac{2}{9}\)
5.  கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். "இன்று எனது பிறந்த நாள்" என கலா கூறினாள். வாணியிடம் "உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடுவாய்?" எனக் கேட்டாள். அதற்கு வாணி "இன்று திங்கட்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்" என பதிலளித்தாள். வாணியின் பிறந்தநாள் எந்தக் கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.
Answer: B.   புதன் கிழமை
6.  ஒரு மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணை 3, 5, 8 மற்றும் 12-ல் வகுக்கும் போது, கிடைக்கும் மீதி 2 எனில், மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணானது _____ ஆகும்.
Answer: D.   99962
7.  \(4^{3.5} : 2^5\) என்பதற்கு சமமான விகிதம்.
Answer: B.   4 : 1
8.  4 P + S r 9 B # A 3 ? 7 c > Z % 6 d * Q @ 1
கொடுக்கப்பட்ட தொடரின் முதல் பாதியை பின்னோக்கு வரிசையில் எழுதினால் வரும் தொடரின் வலதுபக்கத்திலிருந்து 14-வதாக அமையும் உறுப்பினைக் காண்க.
Answer: D.   +
9.  10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்?
Answer: B.   15 நாட்கள்
10.  18, a, b, -3 இவை கூட்டுத்தொடர் வரிசையில் உள்ளது எனில் (a + b)-யின் மதிப்புக் காண்க.
Answer: C.   15
11.  ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியை சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ₹7,875-ஐச் சேமிக்கிறார் எனில் முதல் ஆண்டு சேமிப்பு
Answer: B.   ₹ 4,000
12.  ஒரு குறிப்பிட்ட அசல் தனிவட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் 60% அதிகரிக்கிறது. அதே வட்டி வீதத்தில் ₹ 12,000-க்கு 3 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி
Answer: C.   ₹3,972
13.  ஒரு கிராமத்தின் மக்கட்தொகை ஆண்டொன்றுக்கு 7% வீதம் அதிகரிக்கிறது. இப்பொழுது மக்கள் தொகை 90,000 எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை
Answer: D.   1,03,041
14.  கீழ்கண்ட வரைபடத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன? முக்கோணங்களை எண்ணும் வடிவியல் படம்
Answer: D.   15
15.  3-க்கு எதிரான தளத்தில் உள்ள எண் எது? இரு பகடைகளின் நிலைகளைக் காட்டும் படம்
Answer: B.   4
16.  விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி
49, 121, 169, ?, 361
Answer: C.   289
17.  ஒரு செவ்வகத்தின் ஒரு பக்கம் 5 செ.மீ. மற்றும் அதன் மூலைவிட்டம் 13 செ.மீ. எனில், செவ்வகத்தின் பரப்பு காண்க.
Answer: C.   60 செ.மீ.\(^2\)
18.  ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக பணியமர்த்தப்பட்டார். ஆனால் அவர் சில நாட்கள் வேலைக்கு வராமல், வேலை செய்த நாட்களுக்கான ஊதியமாக ரூ. 1,387 பெற்றார். அவர் அனைத்து நாட்களிலும் வேலை செய்திருந்தால் ஊதியமாக ரூ. 1,752 பெற்றிருப்பார் எனில் அவர் வேலை செய்த நாட்களைக் காண்க.
Answer: A.   19
19.  கொடுக்கப்பட்ட மூன்று எண்களின் பெருக்கற்பலன் 1875 மற்றும் அவற்றின் மீ.பொ.வ-5 எனில் அவற்றின் மீ.பொ.ம
Answer: A.   75
20.  ஐந்தின் ஒரு பகுதி மற்றும் எட்டின் ஒரு பகுதி என இரு பகுதியாக பிரிக்கப்பட்ட எண் 94-இன் விகிதம் 3:4 எனில் அதன் முதல் பகுதி
Answer: B.   30
21.  எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துக்களை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க.
R M E N B U
↓ ↓ ↓ ↓ ↓ ↓
1 2 3 4 5 6
Answer: B.   462531
22.  100-லிருந்து 10-ஐ உன்னால் எத்தனை முறை கழிக்க முடியும்?
Answer: A.   1
23.  முகேஷ் ஒரு நாளில் \(\dfrac{2}{7}\) பகுதி வேலையை செய்து முடிப்பார் எனில் எத்தனை நாட்களில் அவ்வேலையை முழுமையாக செய்து முடிப்பார்?
Answer: B.   \(3\dfrac{1}{2}\) நாட்கள்
24.  ஒரு விவசாயி ₹ 20,000-ஐ ஆண்டொன்றுக்கு 4.5% தனி வட்டியில் ஒருவரிடமிருந்து கடனாக பெறுகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் முழுவதும் கடனை அடைக்க செலுத்த வேண்டிய தொகை
Answer: D.   ₹ 24,500
25.  ₹1,500-க்கு 3 ஆண்டுகளில் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து கிடைத்த தனிவட்டிகளின் வித்தியாசம் ₹13.50 எனில் வட்டி வீதங்களின் வித்தியாசம்
Answer: C.   0.3%
;