GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 1 to 25

1.  உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
‘உள்ளங்கை நெல்லிக்கனி போல'
Answer: A.   வெளிப்படைத் தன்மை
2.  ‘சிலை மேல் எழுத்து போல' இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
Answer: C.   நிலைத்து நிற்கும்
3.  ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர்.
இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
Answer: C.   ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
4.  மாலதி மாலையைத் தொடுத்தாள்.
இது எவ்வகை வாக்கியம்?
Answer: A.   செய் வினை
5.  இலக்கணக் குறிப்பறிதல்.
சாலச் சிறந்தது - தொடரின் வகையை அறிக.
Answer: D.   உரிச்சொல் தொடர்
6.  பெயர்ச்சொற்களைப் பொருத்துக.
(a) மல்லிகை 1. சினைப்பெயர்
(b) பள்ளி 2. பண்புப்பெயர்
(c) கிளை 3. இடப்பெயர்
(d) இனிமை 4. பொருள்பெயர்
Answer: A.   4 3 1 2
7.  பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக.
(a) காலப்பெயர் - செம்மை
(b) சினைப்பெயர் - கண்
(c) பண்புப்பெயர் - ஆண்டு
(d) தொழிற்பெயர் - ஆடுதல்
Answer: A.   (a), (c)
8.  'கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
Answer: A.   கேட்டு
9.  'தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
Answer: A.   தணி
10.  'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
Answer: C.   தா
11.  'சோ' - ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
Answer: C.   மதில்
12.  'மா' - என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
Answer: A.   பெரிய
13.  'பரவை'- இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
Answer: B.   கடல்
14.  மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.
Answer: C.   கூகை குழறும்
15.  சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.
Answer: D.   வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
16.  குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.
Answer: D.   பசு
17.  பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
Answer: C.   இசைவு
18.  பொருத்துக.
(a) சோறு 1. குடித்தான்
(b) பால் 2. உண்டான்
(c) பழம் 3. பருகினான்
(d) நீர் 4. தின்றான்
Answer: C.   2 3 4 1
19.  பொருத்துக.
(a) 8 7 6 1. ௩ ௬ ௯
(b) 5 4 3 2. ௩ உ க
(c) 3 2 1 3. ௫ ச ௩
(d) 3 6 9 4. அ எ ௬
Answer: C.   4 3 2 1
20.  பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்
Answer: B.   சித்தர்கள்
21.  'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு
Answer: C.   பள்ளுப்பாட்டு
22.  ‘வரதன்' என்ற இயற்பெயரைக் கொண்டவர்
Answer: C.   காளமேகப் புலவர்
23.  'மரமும் பழைய குடையும்' – ஆசிரியர்
Answer: B.   அழகிய சொக்கநாதப் புலவர்
24.  'நீலப் பொய்கையின் மிதந்திடும்
தங்கத் தோணிகள்' - இக்கூற்று யாருடையது?
Answer: A.   அர்ச்சுனன்
25.  “உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்” என்று கூறியவர் யார்?
Answer: C.   திரு.வி. கலியாண சுந்தரனார்
;