GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 51 to 75

51.  மோனைத் தொடை _____ வகைப்படும்.
Answer: B.   எட்டு
52.  புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசா லை வேண்டும் நாட்டில் யாண்டும்.
- இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
Answer: B.   புனிதமுற்று, புத்தகசாலை
53.  எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
‘கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்'.
Answer: C.   பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
54.  கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக.
Answer: D.   அரசு ஆணை பிறப்பித்தது
55.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
ஐந்து மாடுகள் மேய்ந்தன.
Answer: A.   எத்தனை மாடுகள் மேய்ந்தன?
56.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
இங்கு நகரப் பேருந்து நிற்கும்
Answer: C.   இங்கு நகரப்பேருந்து நிற்குமா?
57.  சரியான தொடரைக் கண்டறிக.
Answer: C.   தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழட்டும்
58.  சரியான தொடரைக் கண்டறிக.
Answer: D.   "தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி" என்று கவிஞர் கூறினார்
59.  சரியான அகரவரிசையைத் தேர்க.
Answer: B.   கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து
60.  பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.
Answer: B.   ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்
61.  'தேடு' - வினைமுற்று சொல்
Answer: B.   தேடினார்
62.  பொருத்துக.
(a) வெண்பா 1. துள்ளல் ஓசை
(b) ஆசிரியப்பா 2. தூங்கல் ஓசை
(c) கலிப்பா 3. செப்பல் ஓசை
(d) வஞ்சிப்பா 4. அகவல் ஓசை
Answer: D.   3 4 1 2
63.  ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக.
'கோல்டு பிஸ்கட்'
Answer: C.   தங்கக்கட்டி
64.  ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக.
(a) Vowel 1. மெய்யெழுத்து
(b) Consonant 2. ஒரு மொழி
(c) Homograph 3. உயிரெழுத்து
(d) Monolingual 4. ஒப்பெழுத்து
Answer: D.   3 1 4 2
65.  ‘நனந்தலை உலகம் வளைஇ நெமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை'
என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற ‘நனந்தலை உலகம்' என்பதற்கு எதிர்ச்சொல்?
Answer: C.   சிறிய உலகம்
66.  எடுப்பு - எதிர்ச்சொல் தருக.
Answer: B.   முடித்தல்
67.  ‘தண்டளிர்ப்பதம்' இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.
Answer: C.   தண்மை + தளிர் + பதம்
68.  கலம்பகம் - இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
Answer: B.   கலம் + பகம்
69.  'பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்' என்று குறிப்பிடும் நூல்
Answer: C.   அகநானூறு
70.  அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
Answer: B.   திருக்குறள்
71.  சரியான பதிலைத் தேர்வு செய்க.
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்
II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்
III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது
IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது
Answer: D.   அனைத்தும் சரி
72.  பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
Answer: B.   குலசேகரர்
73.  தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமயப் போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் யார்?
Answer: B.   திருஞானசம்பந்தர்
74.  தொல்காப்பியம் குறிப்பிடும் "நிறை மொழி மாந்தர்" யார்?
Answer: C.   சித்தர்கள்
75.  வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது
Answer: A.   தூது
;