TNPSC Group 4 2025
General Tamil Questions 51 to 75
51.
அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
“தகுதியான் வென்று விடல்”
“தகுதியான் வென்று விடல்”
Answer:
B.
பொறுமை
52.
தொடரமைக்க:
விரிந்தது - விரித்தது
விரிந்தது - விரித்தது
Answer:
D.
மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது
53.
கூற்று: 'கலைக் கழகம்' என்பது கலையைக் கற்பிக்கும் கழகம் ஆகும்.
காரணம்: இரண்டு சொற்களுக்கு இடையே 'க்' என்ற ஒற்று மிகுவதால் கலையைக் கற்பிக்கும் கழகம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
காரணம்: இரண்டு சொற்களுக்கு இடையே 'க்' என்ற ஒற்று மிகுவதால் கலையைக் கற்பிக்கும் கழகம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
Answer:
A.
கூற்று - சரி; காரணம் - சரி
54.
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக:
Answer:
D.
உடுக்கை
55.
திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை - தமது தமிழகராதியின் பின் இணைப்பில், தமிழ் மொழியில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் கூறியுள்ளவாறு பொருத்துக:
| (a) போர்ச்சுக்கீசிய மொழி | 1. 34 |
| (b) தெலுங்கு மொழி | 2. 486 |
| (c) அரபு, பாரசீக, இந்துஸ்தானி | 3. 06 |
| (d) ஆங்கில மொழி | 4. 411 |
Answer:
C.
3 1 4 2
56.
பெயரெச்சங்களின் வகை அறிந்து பொருத்துக:
| (a) நிகழ்காலப் பெயரெச்சம் | 1. இல்லாத பொருள் |
| (b) உடன்பாட்டுப் பெயரெச்சம் | 2. அறிந்த பையன் |
| (c) குறிப்புப் பெயரெச்சம் | 3. ஓடுகிற குதிரை |
| (d) ஈறுகெடாத பெயரெச்சம் | 4. அறியாத குழந்தை |
குறிப்பு:
இந்தக் கேள்வியில் பிழை உள்ளது. TNPSC இறுதி விடைக்குறிப்பின்படி அனைத்து விடைத் தேர்வுகளும் ஏற்கப்பட்டுள்ளன.
57.
“ஓலக்கம்" என்னும் சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிக.
Answer:
A.
ஓல்
58.
பொருத்துக:
| (a) அணிகம் | 1. காமன் |
| (b) அநிகம் | 2. சிவிகை |
| (c) அனிகம் | 3. படையில் ஓர் அளவு |
| (d) அநங்கு | 4. ஊர்தி |
Answer:
A.
4 3 2 1
59.
கூற்று: வினவப்பயன்படும் எழுத்துகள் வினா எழுத்துகள் எனப்படும்.எ, ஏ, யா, ஆ, ஓ என்னும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும்.
காரணம்: இவ்வினாவெழுத்துகளை இடவினா எழுத்துகள் எனக் குறிக்கலாம்.
காரணம்: இவ்வினாவெழுத்துகளை இடவினா எழுத்துகள் எனக் குறிக்கலாம்.
Answer:
D.
கூற்று - சரி, காரணம் - சரி
60.
கூற்று: மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.
காரணம்: உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
காரணம்: உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
Answer:
C.
கூற்று - சரி; காரணம் – சரி
61.
பொருத்துக:
| (a) மருப்பு | 1. வழிவந்தோன் |
| (b) விரகு | 2. தந்திரம் |
| (c) மருகன் | 3. சிறிய அடி |
| (d) சீறடி | 4. யானைத் தந்தம் |
Answer:
C.
4 2 1 3
62.
பொருத்துக:
| (a) மாணி | 1. பொன் |
| (b) மானி | 2. குள்ளன் |
| (c) கணகம் | 3. படை |
| (d) கனகம் | 4. மாமன் |
Answer:
B.
2 4 3 1
63.
சேர்த்து எழுதுக.
பலா + அருமை
பலா + அருமை
Answer:
C.
பலாவருமை
64.
பிரித்து எழுதுக.
“கங்கௌகம்” - என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
“கங்கௌகம்” - என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
Answer:
D.
கங்கா + ஓகம்
65.
"கோறல், கொல்லுதல்” – போன்ற பொருள்களைத் தரக்கூடிய ஒரு சொல்லைக் கண்டறிக.
Answer:
D.
அடுதல்
66.
பறவை, பூ, நீக்கம், அழிவு ஆகிய பொருள்களைத் தரும் ஓர் எழுத்து
Answer:
B.
வீ
67.
நாட்டில் பின்னால் நிகழப்போவதை முன்னரே அறிந்து கொள்பவரின் பெயர் _________ என்ற பெயரால் அழைப்பர்.
Answer:
D.
நீரவர்
68.
குதிர்தல் - இணையான வேறு சொல்லறிக.
குறிப்பு:
இந்தக் கேள்வியில் பிழை உள்ளது. TNPSC இறுதி விடைக்குறிப்பின்படி ஏற்கப்பட்ட விடைத் தேர்வுகள்:
A/B/C.
69.
எழுத்துப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
Answer:
A.
எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத் தோன்றும் அழகு
70.
பொருத்தமானதைத் தேர்வு செய்க:
மலை
மலை
Answer:
A.
வெற்பு, சிலம்பு, பொருப்பு
71.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
கலி, கழி
கலி, கழி
Answer:
A.
போர், மிகுதி
72.
அரைப்புள்ளி அமையும் இடங்கள்:
கூற்று: கபிலர் பாரியைக் கண்டார்; புகழ்ந்து பாடினார்; பரிசு பெற்றார்.
காரணம்: கபிலர் என்ற ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிந்துள்ளன.
கூற்று: கபிலர் பாரியைக் கண்டார்; புகழ்ந்து பாடினார்; பரிசு பெற்றார்.
காரணம்: கபிலர் என்ற ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிந்துள்ளன.
Answer:
D.
கூற்று, காரணம் இரண்டும் சரி
73.
ஆசிரியர் புகழினியாளிடம் வந்து கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்
இவ்வாக்கியத்தில் சரியான இடத்தில் கால்புள்ளி இடுக.
இவ்வாக்கியத்தில் சரியான இடத்தில் கால்புள்ளி இடுக.
Answer:
A.
ஆசிரியர் புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்.
74.
பொருத்துக:
| விலங்குகள் | இளமைப்பெயர் |
|---|---|
| (a) நவ்வி | 1. சினை |
| (b) முதலை | 2. ஓந்தி |
| (c) உடும்பு | 3. பார்ப்பு |
| (d) மீன், கெண்டை | 4. மறி |
குறிப்பு:
இந்தக் கேள்வியில் பிழை உள்ளது. TNPSC இறுதி விடைக்குறிப்பின்படி அனைத்து விடைத் தேர்வுகளும் ஏற்கப்பட்டுள்ளன.
75.
புல்லின் உறுப்பைக் கண்டறிக.
Answer:
D.
ஓலை