GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 26 to 50

26.  பிறவினைத் தொடரைக் கண்டறிக.
Answer: D.   அரசன் மாலை அணிவித்தான்.
27.  எவ்வகை வினை என்பதைக் கண்டறிக.
இரண்டாம் வேற்றுமையில் இருப்பது முதல் வேற்றுமையாகவும், முதல் வேற்றுமையில் இருப்பது மூன்றாம் வேற்றுமையாகவும் மாறும் வினை எப்போது நிகழும்?
Answer: A.   செய்வினை செயப்பாட்டு வினையாக மாறும்போது
28.  வரலாற்றியலில் 'Whitehall' - என்னும் சொல்லிற்கு இணை கண்டறிக.
Answer: D.   பிரிட்டானிய அரசு அலுவலகம்
29.  இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக:
(a) Dark Fiber 1. பின்னணி நிரல்
(b) Demon 2. அடர்த்தி
(c) Darkest 3. மிகு இருள்மை
(d) Density 4. இருட்டு இழை
Answer: B.   4 1 3 2
30.  புவியியலில் "Advance" என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக.
Answer: B.   கடற்கரையியக்கம்
31.  பொருத்துக:
(a) Pre-censorship 1. உடைமை
(b) Possession 2. முன் தணிக்கை
(c) Prescription 3. முனைமம்
(d) Premium 4. நீடனுபோகம்
Answer: A.   2 1 4 3
32.  கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக - Veteran
Answer: B.   திறனாளர்
33.  கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
Glacier
Answer: D.   பனியாறு
34.  ‘தனிமரம் காடாதல் இல்' என்ற பழமொழி உணர்த்தும் பொருள்
Answer: C.   பகையை நீக்குதல்
35.  அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. இக்குறள் உணர்த்தும் பழமொழியைக் கண்டறிக.
Answer: B.   ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறவாதே
36.  மரபுத் தொடர்களுக்கு ஏற்ற பொருளைக் கண்டறிக.
(a) அடரடி படரடி 1. சித்தி அடைதல்
(b) அகட விகடம் 2. உறுதியின்மை
(c) ஈரொட்டு 3. தந்திரம்
(d) கை கூடுதல் 4. பெருங்குழப்பம்
Answer: B.   4 3 2 1
37.  மரபுத் தொடரைத் தேர்ந்தெடு
காட்டில் சிங்கம் _______,யானை ________
Answer: C.   முழங்கும், பிளிறும்
38.  உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் கண்டறிக.
(a) அலை ஓய்ந்த கடல் போல் 1. நடுங்குதல்
(b) அடியற்ற மரம் போல் 2. மனம் உடைதல்
(c) மத்தில் அகப்பட்ட தயிர்போல் 3. அமைதி
(d) புயலில் சிக்கிய பூங்கொடிபோல் 4. வீழ்தல்
Answer: A.   3 4 2 1
39.  உகிர்ச் சுற்றின் மேல் உலக்கை விழுந்தாற் போல இத்தொடரில் உகிர் சுற்று என்பது என்ன?
Answer: C.   நகச்சுற்று
40.  பொருத்துக:
(a) Call book 1. பதிவேடு வழங்கு குறிப்பேடு
(b) Record issue register 2. வறியர் வழக்குப் பதிவேடு
(c) Pauper suit register 3. செம்மைப்படி பதிவேடு
(d) Fair copy register 4. மறுக馚ிப்புப் பதிவேடு
Answer: D.   4 1 2 3
41.  "Adoring” என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தமிழ்ச்சொல் கண்டறிக.
Answer: C.   போற்றுதல்
42.  தோழன் என்று பொருள் தரும் காம்ரேட் என்ற சொல் எம்மொழியில் இருந்து பெறப்பட்டது?
Answer: D.   பிரெஞ்சு மொழி
43.  சரியான இணையைக் கண்டறிக:
(1) தாராபாரதி - ஆசியஜோதி
(2) முடியரசன் - வீரகாவியம்
(3) கவிமணி - இதய ஒலி
(4) இரசிகமணி - விரல் நுனி வெளிச்சங்கள்
Answer: A.   (2) - சரி
44.  ‘பூட்கை' என்ற சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
Answer: C.   குறிக்கோள்
45.  உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் ___________
Answer: C.   தேவநேயப் பாவாணர்
46.  கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப்பட்ட விதத்தைக் கண்டறிக.
Answer: D.   கண்ணெழுத்துகள்
47.  ஏலாதியில் இடம் பெறாத மருந்துப் பொருள்
(1) சுக்கு
(2) திப்பிலி
(3) கண்டங்கத்திரி
(4) சிறுநாவற்பூ
Answer: C.   (3) மட்டும்
48.  பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க.
“தூற்றின் கண் தூவிய வித்து”
Answer: D.   திரிகடுகம்
49.  கூற்று [A]: அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே.
காரணம் [R]: ஒருவருக்கு அதனை விடச் சிறந்த செல்வம் வேறு உண்டு.
Answer: A.   [A] சரி [R] தவறு
50.  சரியான சொற்றொடரைத் தேர்வு செய்து கீழ்க்காணும் தொடரை நிறைவு செய்க.
தாம் கற்றவற்றைக் கற்றவர் முன் தெளிவாகச்
சொல்ல வல்லவர் _________
Answer: A.   கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்
;