GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2025

General Studies Questions 26 to 50

1.  கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தி உள்ளது?
(1) டிரான்ஸ் சைபீரியன் இருப்புப்பாதை - இது பால்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது
(2) டிரான்ஸ் காஸ்பியன் இருப்புப்பாதை - இது மத்திய ஆசியாவையும் ஜப்பானையும் இணைக்கிறது
(3) கனேடியன் பசிபிக் இருப்புப்பாதை - இது அட்லாண்டிக் பெருங்கடலையும், இந்திய பெருங்கடலையும் இணைக்கிறது
(4) டிரான்ஸ் கான்டினென்டல் இருப்புப்பாதை - இது பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் வால்பரைஸோ நகரத்தையும் இணைக்கிறது
A.   (1) மட்டும்
B.   (2) மட்டும்
C.   (3) மட்டும்
D.   (4) மட்டும்
Answer: C.  (3) மட்டும்
2.  இந்திய அரசமைப்பின் 42-ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் யார்?
A.   ஜவஹர்லால் நேரு
B.   வி.பி. சிங்
C.   இந்திராகாந்தி
D.   மொரார்ஜி தேசாய்
Answer: C.  இந்திராகாந்தி
3.  கூற்று [A] : பல்லவர்கள், மரம், சுதை, உலோகம், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்கள் இன்றிக் குடைவரைக் கோவில்களை உருவாக்கினர்.
காரணம் [R] : கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்குக் “கற்றளிகள்” என்று பெயர்.
A.   [A] சரி ஆனால் [R] தவறு
B.   [A] தவறு ஆனால் [R] சரி
C.   [A] மற்றும் [R] இரண்டும் சரி
D.   [A] மற்றும் [R] இரண்டும் தவறு
Answer: C.  [A] மற்றும் [R] இரண்டும் சரி
4.  தவறான இணையைக் கண்டுபிடி.
(1) தென்திராவிட மொழி - மலையாளம்
(2) கிழக்கு திராவிட மொழி - முண்டா
(3) நடுத்திராவிட மொழி - தெலுங்கு
(4) வடதிராவிட மொழி - குரூக்
A.   (1)
B.   (2)
C.   (3)
D.   (4)
Answer: B.  (2)
5.  கூற்று [A] : இரவீந்தரநாத் தாகூர் தனது 'சர்' பட்டத்தைத் துறந்தார்.
காரணம் [R] : 13 ஏப்ரல் 1919 அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக்
படுகொலை நடைப்பெற்றது.
A.   [A] சரி [R] தவறு
B.   [A] மற்றும் [R] சரி, [R] [A] யினுடைய சரியான விளக்கம்
C.   [A] தவறு [R] சரி
D.   [A] மற்றும் [R] சரி ஆனால் [R], [A] யினுடைய சரியான விளக்கமல்ல
Answer: B.  [A] மற்றும் [R] சரி, [R] [A] யினுடைய சரியான விளக்கம்
6.  கூற்று [A] : இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு 1885 டிசம்பர் 28 ஆம் தேதி பம்பாயில் கூடியது.
காரணம் [R] : தமிழ்நாட்டு பகுதியிலிருந்து 21 பேர் கலந்து கொண்டனர்.
A.   கூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
B.   கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி மற்றும் கூற்று [A] விற்கு காரணம் [R] சரியான விளக்கமாகும்
C.   கூற்று [A] தவறு காரணம் [R] சரி
D.   கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி ஆனால் காரணம் [R] கூற்று [A] விற்கு சரியான விளக்கமல்ல என்பது சரி
Answer: D.  கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி ஆனால் காரணம் [R] கூற்று [A] விற்கு சரியான விளக்கமல்ல என்பது சரி
7.  சிந்து நாகரிகம் குறித்து பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
(i) 1920களில் மார்டிமர் வீலர் ஹரப்பா பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தினார்.
(ii) மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத்தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது.
(iii) பிராகிருத கல்வெட்டுகளில் "மெலுகா” என்ற சொல் சிந்து பகுதியைக் குறிக்கிறது.
(iv) ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த "மதகுரு அரசன்” மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டது.
A.   (i) மற்றும் (ii) மட்டும்
B.   (i) மற்றும் (iii) மட்டும்
C.   (ii) மற்றும் (iii) மட்டும்
D.   (ii) மற்றும் (iv) மட்டும்
Answer: D.  (ii) மற்றும் (iv) மட்டும்
8.  புதியதாக பதவியேற்றுள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரைப் பற்றிய சரியான கூற்றுகளானது:
(i) ஞானேஷ் குமார் பிப்ரவரி 19, 2025 அன்று இந்தியாவின் 26வது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார்.
(ii) அவர் 1989 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியின் கேரள பிரிவு அதிகாரி ஆனார்.
(iii) கேரள அரசின் செயலாளராக பல்வேறு துறைகளைக் கையாளும் பொறுப்பை அவர் வகித்துள்ளார்.
A.   (i) மட்டும்
B.   (i) மற்றும் (iii) மட்டும்
C.   (i) மற்றும் (ii) மட்டும்
D.   (ii) மற்றும் (iii) மட்டும்
Answer: B.  (i) மற்றும் (iii) மட்டும்
9.  கீழ்கண்டவற்றைப் பொருத்துக.
சட்டத்தின் பெயர் இயற்றப்பட்ட ஆண்டு
(a) நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 1. 1930
(b) மருந்துக் கட்டுப்பாடு சட்டம் 2. 1987
(c) ஏகபோக மற்றும் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள் சட்டம் 3. 1950.
(d) பொருட்கள் விற்பனைச் சட்டம் 4. 1969
A.   2 3 4 1
B.   3 1 2 4
C.   1 3 4 2
D.   4 1 2 3
Answer: A.  2 3 4 1
10.  கருத்து [A] மற்றும் காரணம் [R] வினாவை கருதுக.
கருத்து [A] : குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்கிறார்.
காரணம் [R] : நீதிபதிகளை நியமனம் செய்யும் பொழுது சட்ட அமைச்சரையும் கலந்தாலோசிக்க வேண்டும்.
A.   [A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்
B.   [A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கம் இல்லை
C.   [A] சரி ஆனால் [R] தவறு
D.   [A] தவறு ஆனால் [R] சரி
Answer: C.  [A] சரி ஆனால் [R] தவறு
11.  மாநிலங்களுக்கிடையேயான குழுக்களை காலவரிசைப்படி ஒழுங்குபடுத்தவும்.
(1) புன்ச்சி குழு
(2) இராஜமன்னார் குழு
(3) சர்க்காரியா குழு
(4) வெங்கட செல்லையா குழு
A.   (3), (4), (2), (1)
B.   (2), (1), (4), (3)
C.   (2), (4), (3), (1)
D.   (2), (3), (4), (1)
Answer: D.  (2), (3), (4), (1)
12.  சரியான இணையைத் தெரிவு செய்க
(1) உச்ச நீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது - 60
(2) இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் நிற்பதற்கான குறைந்தபட்ச வயது - 35
(3) மேலவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது - 30
(4) கீழவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது - 21
A.   (1) மற்றும் (3) சரியானவை
B.   (1) மற்றும் (2) சரியானவை
C.   (2) மற்றும் (3) சரியானவை
D.   (3) மற்றும் (4) சரியானவை
Answer: C.  (2) மற்றும் (3) சரியானவை
13.  பின்வரும் விருதுகளை காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
1. பாரத ரத்னா
2. பத்ம விபுஷன்
3. பத்மஸ்ரீ
4. பத்ம பூஷன்
A.   2, 3, 1, 4
B.   1, 2, 4, 3
C.   4, 3, 2, 1
D.   3, 1, 4, 2
Answer: B.  1, 2, 4, 3
14.  பொருத்துக:
மாநிலங்கள் பெயர் மாநிலங்கள் இருக்கும் பகுதி
(a) இமாச்சலப் பிரதேசம் 1. A
(b) இராஜஸ்தான் 2. D
(c) மேற்கு வங்காளம் 3. B
(d) அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் 4. C
A.   4 3 1 2
B.   2 4 1 3
C.   3 1 2 4
D.   1 2 4 3
Answer: A.  4 3 1 2
15.  சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
கூற்று [A] : ஸ்பேஷ் MAITRI என்பது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான கூட்டு விண்வெளி திட்டம்.
காரணம் [R] : இத்திட்டத்தின் மூலம் விண்வெளிக்கான அணுகல் செலவினை இந்தியா குறைக்க எண்ணுகிறது.
A.   [A] மற்றும் [R] சரியே, மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்
B.   [A] மற்றும் [R] சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
C.   [A] சரியே, ஆனால் [R] தவறு
D.   [A] தவறு ஆனால் [R] சரி
Answer: C.  [A] சரியே, ஆனால் [R] தவறு
16.  பின்வருவனவற்றில் 2021-2022-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேளாண்மை சாகுபடியோடு தொடர்புடைய உண்மையான கூற்று(க்கள்) எவை/யாவை?
(i) மயிலாடுதுறையில் தமிழ்நாட்டிலே அதிகமான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
(ii) பெரம்பலூரில் தமிழ்நாட்டிலே அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.
(iii) கள்ளக்குறிச்சியில் தமிழ்நாட்டிலே அதிகமாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.
A.   (i) மட்டும்
B.   (i) மற்றும் (iii) மட்டும்
C.   (i) மற்றும் (ii) மட்டும்
D.   (ii) மற்றும் (iii) மட்டும்
Answer: D.  (ii) மற்றும் (iii) மட்டும்
17.  கூற்று மற்றும் காரணத்தை நன்றாக புரிந்து கொண்ட பின் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
கூற்று [A] : தமிழ்நாட்டின் 2024-2025 பொருளாதார ஆய்வறிக்கையின் படி தமிழ்நாட்டின் நகர்ப்புற பணவீக்கம் 2019-2020 ஆம் ஆண்டில் 6% லிருந்து 2024-2025 ஆம் ஆண்டில் 4.5% ஆகக் குறைந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் கிராமப்புற பணவீக்கம் 5.4% என்ற விகிதத்தில் நிலையாக உள்ளது.
காரணம் [R] : இது முக்கியமாக அரசாங்கத்தினால் அமல்படுத்தப் பெறும் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்றும் நூறு நாள் வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் போன்ற பிற வருமான ஆதரவுத் திட்டங்களால் ஏற்படுகிறது.
A.   [A] சரி [R] தவறு
B.   [A] மற்றும் [R] சரி மற்றும் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும்
C.   [A] தவறு [R] சரி
D.   [A] மற்றும் [R] சரி ஆனால் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் அல்ல
Answer: B.  [A] மற்றும் [R] சரி மற்றும் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும்
18.  கூற்று [A] : கோவிட்-19 பெருந்தொற்றால் பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாட்டில் “இல்லம் தேடிக் கல்வி” திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
காரணம் [R] : இந்தத் திட்டத்தில், தன்னார்வலர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாற்றுவழிகள் கொண்ட கல்வியை வழங்குகிறார்கள்.
A.   [A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
B.   [A] மற்றும் [R] இரண்டும் உண்மை, ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கமில்லை
C.   [A] உண்மை ஆனால் [R] தவறானது
D.   [A] தவறானது ஆனால் [R] சரியானது
Answer: A.  [A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
19.  பின்வருவனவற்றுள் மண்டல் கமிஷன் அறிக்கையோடு தொடர்புடைய சரியான கூற்று(க்கள்) எது/யாவை?
(i) இந்த ஆணையமானது சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரம் என்ற மூன்று குறிகாட்டிகளை பயன்படுத்தியுள்ளது.
(ii) சமூக குறிகாட்டியில் ஐந்து அளவுகோல்களும் மற்றும் கல்வி குறிகாட்டியில் இரண்டு அளவுகோல்களும் பயன்படுத்தப் பெற்றன.
(iii) பொருளாதார குறிகாட்டியில் நான்கு அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன. ஆக மொத்தம் 11 அளவுகோல்கள் மண்டல் கமிஷன் அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
A.   (i) மட்டும்
B.   (i) மற்றும் (iii) மட்டும்
C.   (i) மற்றும் (ii) மட்டும்
D.   (ii) மற்றும் (iii) மட்டும்
Answer: B.  (i) மற்றும் (iii) மட்டும்
20.  இந்தியாவின் பணவீக்கம் அதிகமாக இருப்பதற்கான காரணம்
A.   அதிக தேவை
B.   டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு
C.   குறைவான உற்பத்தி
D.   குறைவான பண அளிப்பு
Answer: B.  டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு
21.  வறுமை ஒழிப்பு திட்டங்களை கால வரிசைப்படுத்தி எழுதுக.
1. தேசிய ஊரக வாழ்வாதார திட்டம்
2. ராஜீவ் ஆவாஸ் யோஜனா
3. பாரத் நிர்மான் யோஜனா
4. தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம்
A.   1 2 4 3
B.   3 1 4 2
C.   3 2 1 4
D.   2 3 4 1
Answer: C.  3 2 1 4
22.  பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதுக.
(1) MFAL – இறுதிநிலை விவசாயி மற்றும் விவசாயக் கூலி தொழிலாளி முன்னேற்றத் திட்டம்
(2) DPAP – வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான திட்டம்
(3) DDP – மாவட்ட வளர்ச்சித் திட்டம்
(4) HDA – மலைப் பகுதிக்கான முன்னேற்றத் திட்டம்
A.   (1) மற்றும் (2)
B.   (1) மற்றும் (3)
C.   (3) மற்றும் (4)
D.   (2) மற்றும் (3)
Answer: C.  (3) மற்றும் (4)
23.  பின்வருவனவற்றுள் தவறான இணைப்பு எது?
(1) TSC – முழு உடல் நலம் காக்கும் நடவடிக்கை
(2) NIC – தேசிய தகவல் மையம்
(3) MIS – மேலாண்மைத் தகவல் முறை
(4) IMIS – ஒருங்கிணைந்த மேலாண்மை உள்கட்டமைப்பு முறை
A.   (1), (2), (3) மற்றும் (4)
B.   (1), (2) மற்றும் (3)
C.   (1), (2) மற்றும் (4)
D.   (4) மட்டும்
Answer: D.  (4) மட்டும்
24.  சரியான இணையைத் தேர்ந்தெடு :
1. பாம்பே திட்டம் - 1940
2. காந்தியத் திட்டம் - 1945
3. மக்கள் திட்டம் - 1944
4. சர்வோதயத் திட்டம் - 1950
A.   2 மற்றும் 3 சரி
B.   1 மற்றும் 2 சரி
C.   1 மற்றும் 4 சரி
D.   2 மற்றும் 4 சரி
Answer: C.  1 மற்றும் 4 சரி
25.  கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து
இக்குறட்பாவின் கருத்து
(1) கொக்கைப் போன்று செயல்படுவது தவறு.
(2) காலம் கைகூடுவதற்குக் காத்திருக்க வேண்டும்.
(3) இக்குறள் தெரிந்துதெளிதல் என்னும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.
(4) 'வாடியிருக்குமாம் கொக்கு' என்ற சொல் இக்குறட்பாவிற்குப் பொருத்தமான விளக்கம் தரும்.
A.   (1) - சரி (2) - தவறு (3) - தவறு (4) - தவறு
B.   (1) - தவறு (2) - சரி (3) - சரி (4) - தவறு
C.   (1) - தவறு (2) - சரி (3) - தவறு (4) - சரி
D.   (1) - சரி (2) - தவறு (3) - சரி (4) - சரி
Answer: C.  (1) - தவறு (2) - சரி (3) - தவறு (4) - சரி
;