GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2025

General Tamil Questions 76 to 100

1.  அஃறிணைத் தொடரைக் கண்டறிக.
A.   மலர்கள் மலர்ந்தன
B.   மக்கள் கூடினர்
C.   மாணவர்கள் விளையாடினர்
D.   ஆசிரியர்கள் மகிழ்ந்தனர்
Answer: A.  மலர்கள் மலர்ந்தன
2.  ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.
A.   அவர் கோவிலுக்குச் சென்றனர்.
B.   மரம் முறிந்து விழுந்தன.
C.   சீவகனிடம் விடாமுயற்சி இருந்தது.
D.   சிறுவர் தெருவில் ஓடி விளையாடினர்.
Answer: C.  சீவகனிடம் விடாமுயற்சி இருந்தது.
3.  கீழ்க்காண்பவற்றுள் இடைச்சொல் தொடரைக் கண்டறிக.
A.   கடி மணம்
B.   அழைத்தனர் உற்றார்
C.   நிலவோ காய்ந்தது
D.   அம்ம வாழி
Answer: D.  அம்ம வாழி
4.  சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் :
பாடறிந்து ஒழுகுதல் பண்பு எனப்படுவது.
A.   பண்பு எனப்படுவது ஒழுகுதல் பாடறிந்து
B.   பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
C.   பாடறிந்து பண்பு எனப்படுவது ஒழுகுதல்
D.   ஒழுகுதல் எனப்படுவது பண்பு பாடறிந்து
Answer: B.  பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
5.  ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
Visual Scanner
A.   காட்சிப் பக்கம்
B.   படப்பிடிப்பு
C.   கட்புலமேவி
D.   காட்சி உணர்தல்
Answer: C.  கட்புலமேவி
6.  பொறியியலில் "Anchorage" - என்னும் ஆங்கிலச் சொல்லிற்குக் கலைச்சொல் தருக.
A.   நேர்கோட்டு வைப்பு
B.   ஊன்றுதளை
C.   வெட்டுமுகம்
D.   நீர்க்குழல்
Answer: B.  ஊன்றுதளை
7.  "Monopoly Control" என்ற கலைச்சொல்லிற்கான தமிழ்ச் சொல்லைத் தருக.
A.   தனி ஆதிக்க விலை
B.   தனி வல்லாண்மைக் கட்டுப்பாடு
C.   தனி வல்லாளர்
D.   தனி வரைவு கட்டுப்பாடு
Answer: B.  தனி வல்லாண்மைக் கட்டுப்பாடு
8.  பொருத்துக:
(a) Abulia 1. சீழ்கட்டி
(b) Acomia 2. உடல் வழுக்கை
(c) Abscess 3. மன உறுதிக் குறைபாடு
(d) Alopecia Universalis 4. தலை வழுக்கை
A.   3 4 2 1
B.   3 4 1 2
C.   2 4 1 3
D.   2 3 4 1
Answer: B.  3 4 1 2
9.  'தென்னிந்தியாவின் ஸ்பா' என்று அழைக்கப்படும் குற்றாலம் நவீன வசதிகளுடன் ரூ. 15.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். பெயரைச் சொல்லும்போதே உற்சாகம் பிறக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகள் நிறைந்த பகுதி குற்றாலம். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ‘தென்னிந்தியாவின் ஸ்பா' என்று அழைக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குற்றாலத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகள் ஏற்படுத்த ரூ. 15.00 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
'தென்னிந்தியாவின் ஸ்பா' என்றழைக்கப்படும் அருவியைக் கண்டறிக.
A.   ஆகாயகங்கை அருவி
B.   கேத்ரின் அருவி
C.   சுருளி அருவி
D.   குற்றால அருவி
Answer: D.  குற்றால அருவி
10.  தமிழ் வளர்ச்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025
1.6 - கனவு இல்லம் :
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “கனவு இல்லம் திட்டம்” தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, சாகித்ய அகாதெமி,ஞானபீட விருது, தொல்காப்பியர் விருது, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது (தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு மட்டும்) மற்றும் நோபல் பரிசு இலக்கியம் (தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பணிகளுக்கு பெற்றிருப்பின்) ஆகிய விருதுகளைப் பெற்ற விருதாளர்களுக்கு 2021-2022-ஆம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் அதிகபட்சமாக 10 விருதாளர்களுக்கு வீடு வழங்கப்படுகிறது.
‘கனவு இல்லத் திட்டத்தின்' சார்பாக ஒவ்வொரு நிதியாண்டிலும் எத்தனை விருதாளர்களுக்கு இல்லம் வழங்கப்படுகிறது என்பதைக் கண்டறிக.
A.   9
B.   17
C.   8
D.   10
Answer: D.  10
11.  "கடுகு சிறுத்தாலும் காரம் போகுமோ?" எனும் பழமொழியின் பொருள் கண்டறிக.
A.   பெருமை
B.   கர்வம்
C.   குறைத்து மதிப்பிடாதே
D.   புகழ்
Answer: C.  குறைத்து மதிப்பிடாதே
12.  மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைப் பொருத்துக:
(a) கடன் கழித்தல் 1. கலங்கல் நீர்
(b) கடை விரித்தல் 2. முரண்படுதல்
(c) கட்சைக் கட்டுதல் 3. தன் ஆற்றலைச் சொல்லுதல்
(d) கக்கல் கரிசல் 4. மனமின்றிச் செய்தல்
A.   4 3 2 1
B.   4 1 2 3
C.   4 2 3 1
D.   3 4 2 1
Answer: A.  4 3 2 1
13.  "வேளைப் பிசகு" - எனும் மரபுத் தொடரின் பொருள் தேர்க.
A.   நல்ல காலம்
B.   தீய காலம்
C.   கடந்த காலம்
D.   வரும் காலம்
Answer: B.  தீய காலம்
14.  ‘ஆப்பசைத்தக் குரங்கதனைப் போல' என்ற உவமைத்தொடர் உணர்த்தும் சரியான பொருளைக் கண்டறிக.
A.   இன்பம்
B.   ஏக்கம்
C.   வேகம்
D.   வேதனை
Answer: D.  வேதனை
15.  கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத்
தேர்ந்தெடுத்தல். [90-92]
இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ. சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர் வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் 'சுதேசி நாவாய்ச் சங்கம்' என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.
சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?
A.   வ.உ. சிதம்பரனார்
B.   பாரதியார்
C.   சுபாஷ் சந்திரபோஸ்
D.   பாரதிதாசன்
Answer: A.  வ.உ. சிதம்பரனார்
16.  வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?
A.   நேதாஜி
B.   பாரதியார்
C.   பாரதிதாசன்
D.   திரு.வி.க.
Answer: B.  பாரதியார்
17.  வ.உ.சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை?
A.   சமஸ்கிருதம், தமிழ்
B.   ஆங்கிலம், கன்னடம்
C.   தமிழ், ஆங்கிலம்
D.   மலையாளம், தமிழ்
Answer: C.  தமிழ், ஆங்கிலம்
18.  Proposal எனும் சொல்லிற்கான இணையான சொல்லைத் தருக.
A.   உண்மை உரு
B.   பொய் உரு
C.   கருத்துரு
D.   எண்ண உரு
Answer: C.  கருத்துரு
19.  "Irrigation Technology" – என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லறிக.
A.   தகவல் தொழில்நுட்பம்
B.   சூழலியல் தொழில்நுட்பம்
C.   நீர்ப்பாசனத் தொழில்நுட்பம்
D.   வெப்ப மண்டலத் தொழில்நுட்பம்
Answer: C.  நீர்ப்பாசனத் தொழில்நுட்பம்
20.  “தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் திகழ்கிறார்” - என்று புகழ்ந்துரைத்தவரைக் கண்டறிக.
A.   தந்தை பெரியார்
B.   அறிஞர் அண்ணா
C.   ம.பொ. சிவஞானம்
D.   ப. ஜீவானந்தம்
Answer: B.  அறிஞர் அண்ணா
21.  டி.கே. சிதம்பரநாதருடன் தொடர்பில்லாதது எது?
(1) தமிழ் எழுத்தாளர்
(2) திறனாய்வாளர்
(3) வழக்கறிஞர்
(4) பேராசிரியர்
A.   (1) மட்டும்
B.   (2) மட்டும்
C.   (3) மட்டும்
D.   (4) மட்டும்
Answer: D.  (4) மட்டும்
22.  கூற்று [A] : உ.வே. சாமிநாதர் அனைவராலும் அன்போடும் உரிமையோடும் தமிழ்த்தாத்தா உ.வே.சா என்று அழைக்கப்படுகிறார்.
காரணம் [R] : அழிவு நிலையில் இருந்த வெவ்வேறு சுவடிகளைப் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்து வாசித்து, நமக்காகத் தாளில் எழுதி அச்சிட்டுப் புத்தகமாக இலக்கியங்களை வழங்கினார். தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்புப் பணியினை மேற்கொண்டார்.
A.   [A] சரி ஆனால் [R] தவறு, [R] என்பது [A]ஐ விளக்கவில்லை
B.   [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A]ஐ விளக்கியுள்ளது
C.   [A] மற்றும் [R] இரண்டும் தவறு
D.   [A] தவறு ஆனால் [R] சரி
Answer: B.  [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A]ஐ விளக்கியுள்ளது
23.  கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்.
(1) இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது.
(2) பல கிளை மொழிகளும் இந்தியாவில் பேசப்படுவதால் இந்தியநாடு மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது.
(3) திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ஹீராஸ் பாதிரியார்.
(4) திராவிட மொழிக் குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
A.   (1) மட்டும்
B.   (2) மட்டும்
C.   (3) மட்டும்
D.   (4) மட்டும்
Answer: C.  (3) மட்டும்
24.  ‘நான்மணிக்கடிகை' என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் இயற்பெயரைச் சுட்டுக.
A.   நாயனார்
B.   நல்லந்துவனார்
C.   நாகனார்
D.   சேந்தனார்
Answer: C.  நாகனார்
25.  'மண்ணோடியைந்த மரத்தனையர்' என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
A.   மனமார விருந்தினரை உபசரியாதவர்
B.   பண்புடன் பழகாதவர்
C.   இரக்கம் இல்லாதவர்
D.   மேடைக்கு அஞ்சிச் சொல்ல மாட்டாதவர்
Answer: C.  இரக்கம் இல்லாதவர்
;