GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

கூற்று மற்றும் கூறியவர் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

23.   "எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு" - என்று கூறிய தமிழறிஞர்
Answer: B.   தேவநேயப்பாவாணர்
25.   தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி - எனக் கூறியவர்
Answer: C.   கால்டுவெல்
26.   'திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்' - என்று கூறியவர் யார்?
Answer: C.   காந்தியடிகள்
27.   “தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் திகழ்கிறார்” - என்று புகழ்ந்துரைத்தவரைக் கண்டறிக.
Answer: B.   அறிஞர் அண்ணா
28.   திருமணம் செல்வக்கேசவராயரால், ‘தமிழுக்கு கதியாவார் இருவர்' என்று குறிப்பிடப்படுபவர்கள்
Answer: B.   கம்பர், திருவள்ளுவர்
;