GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

கூற்று மற்றும் கூறியவர் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்?
Answer: C.   இரசூல் கம்ச தோவ்
2.   "தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு" என்று கூறியவர்
Answer: C.   டாக்டர். கிரௌல்
3.   “உலகினில் நாகரிகம் முற்றிலும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்?
Answer: B.   கால்டுவெல்
4.   "கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்" எனக் கூறியவர் யார்?
Answer: C.   புதுமைப்பித்தன்
5.   ‘இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது’ என்றவர் யார்?
Answer: D.   எமினோ
7.   "உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்" எனக் கூறியவர்
Answer: D.   கம்பர்
9.   "தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்." - என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?
Answer: B.   பெரியார்
10.   'நோய்க்கு மருந்து இலக்கியம்' என்று கூறியவரை தேர்வு செய்க
Answer: B.   மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
11.   “புத்தகம் வாசிப்பதனை கடமையாக ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படி செய்தால், புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது” என்று கூறியவரை தேர்ந்தெடு
Answer: C.   நேரு
12.   "சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண்செல்வம் செல்வமென் பதுவே” - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?
Answer: C.   மிளைகிழான் நல்வேட்டனார்
13.   "வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்று
தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?
Answer: A.   பாவலரேறு பெருஞ்சித்திரனார்
14.   ''இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை..." என்று பாடியவர் யார்?
Answer: A.   சுரதா
15.   “தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?
Answer: B.   மாக்சு முல்லர்
16.   “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” என்று கூறியவர் யார்?
Answer: D.   ஈரோடு தமிழன்பன்
17.   ‘ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே! என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!’ என்ற பாடலின் ஆசிரியர் யார்?
Answer: B.   மருதகாசி
18.   வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்
Answer: A.   பாவலரேறு பெருஞ்சித்திரனார்
19.   'பெண் எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது' – எனப் பாடியவர்
Answer: C.   பாரதிதாசன்
;