GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2022 Preliminary Examination

General Studies Questions 126 to 150

126.  பின்வரும் பட்டங்களில் பாண்டிய மன்னர்களுடன் தொடர்புடையது எது?
(i) மீனவர்
(ii) வில்லவர்
(iii) குடவர்
(iv) பஞ்சவர்
Answer: C.   (i) மற்றும் (iv) மட்டும்
127.  "தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்” எனப் பாடியவர் யார்?
Answer: B.   திருநாவுக்கரசர்
128.  எந்த தமிழ் கவிஞர் தேசியம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டில் உணர்வுகளை தூண்டினார்?
Answer: B.   பாரதியார்
129.  ராஷ்டிரகூடர்களின் தேசிய சின்னம் என்ன?
Answer: B.   தங்க கழுகு
130.  கீழ்க்காண்ப்வற்றுள் எது மெய்யுணர்தலுக்கான செயல்பாடு இல்லை?
Answer: A.   பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணர்தல்
131.  "வேந்தர்க்கு ஒளியாவது" என்று திருக்குறள் எதனைக் கூறுகின்றது?
(i) கொடை
(ii) அளி
(iii) செங்கோல் குடியோம்பல்
Answer: D.   (i), (ii) மற்றும் (iii)
132.  பொருத்துக
(a) தாருகன் 1. தேர்ச்சக்கரம்
(b) ஆழி 2. அரக்கன்
(c) நற்றிறம் 3. தேவர்
(d) இமையவர் 4. அறநெறி
Answer: B.   2 1 4 3
133.  அகழ்வு (தொல்பொருள்) ஆராய்ச்சியின் இடம் மற்றும் அவை தரும் தகவல்களோடு சரியானவற்றைப் பொருத்துக:
(a) தஞ்சாவூர் அகழ்வாராய்ச்சி 1. ரோமானிய மட்பாண்டங்கள்
(b) கீழையூர் அகழ்வாராய்ச்சி 2. புத்த மத மையம்
(c) திருக்கம்புலியூர் அகழ்வாராய்ச்சி 3. ரோமானியருக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள வணிக தொடர்பு
(d) உறையூர் அகழ்வாராய்ச்சி 4. காவேரியின் கலாச்சாரம்
Answer: A.   1 2 4 3
134.  பின்வரும் கல்வெட்டுகளில் எந்தக் கல்வெட்டில் 'மதுரா' என்னும் பழமையான சொல் குறிப்பிடப்பட்டுள்ளது?
(a) சித்தர்மலை கல்வெட்டு
(b) அழகர்மலை கல்வெட்டு
(c) மாமண்டூர் கல்வெட்டு
(d) பாத்திபுரலு கல்வெட்டு
Answer: A.   (a) மற்றும் (b) மட்டும்
135.  “தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்"
- பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் இதனைச் சொல்பவர் யார்?
Answer: C.   அர்ச்சுனன்
136.  பின்வரும் தொடரைப் படித்துச் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்
(i) நாயக்க மன்னர்கள் ஆட்சியில் உருவான வியத்தகு அமைப்பு இசைத்தூண்கள் ஆகும்.
(ii) கல்லால் இசையை எழுப்பும் கலைஞர்களின் கைவண்ணம் கண்டு, பன்னாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர்.
(iii) மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பல சிறு தூண்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு சிறு தூணும் இசை ஒலி எழுப்புவதைக் காணலாம்.
(iv) இராமேஸ்வரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உள்ள தூண்களில் ஏழு ஸ்வரங்கள் ஒலிக்கப்படுவதைக் கேட்கலாம்.
Answer: B.   (i), (ii), (iii) ஆகியவை மட்டும் சரி
137.  சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் சோழர்கள் பற்றிய சரியான வாக்கியத்தைக் கூறுக.
(i) அசோக கல்வெட்டில் சோழர்கள் பற்றி முதல் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
(ii) தமிழகத்தில் சுதந்திர அரசாக அவர்கள் விளங்கினர்.
(iii) கன்னியாகுமரி கல்வெட்டுகள் மற்றும் அன்பில் சாசனமும் சோழர்கள் பற்றிய தகவல்களைக் கூறுகிறது.
Answer: C.   (i), (ii) மற்றும் (iii) சரியானது
138.  ஜிஎஸ்டி கவுன்சில் பற்றிய பின்வரும் அறிக்கைகளில் எது உண்மையல்ல?
1. ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள் தங்களில் ஒருவரை கவுன்சிலின் துணைத் தலைவராக தேர்வு செய்கிறார்கள்.
2. ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒவ்வொரு முடிவும் கலந்து கொள்ளும் மற்றும் வாக்களிக்கும் உறுப்பினர்களின் வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத கூட்டத்தால் எடுக்கப்படும்.
3. ஜிஎஸ்டி கவுன்சிலின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதி பேர் அதன் கூட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான நபரே பங்கு பெறுவர்.
Answer: C.   1 மற்றும் 3
139.  'PURA' என்னும் சொல்லின் சரியான விரிவாக்கத்தைத் தேர்ந்தெடுக்க.
Answer: D.   கிராமப்புற பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்துதல்
140.  கீழ்க்கண்டவற்றுள் புதிய தொழிற்கொள்கையின் நோக்கங்களை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முறைகள் யாவை?
(1) தொழில் உரிமம்
(2) அயல்நாட்டு முதலீடு
(3) அயல்நாட்டு வாணிபக் கொள்கை
(4) பொது துறை நிர்வாகம்
Answer: C.   (1), (2) மற்றும் (4) மட்டும்.
141.  இந்திய அரசின் பணவாக்கக் கொள்கையானது பொருளாதாரக் கொள்கையின் பின்வரும் இரண்டு நோக்கங்களை வலியுறுத்துகின்றது.
(i) பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைப்பதற்கும்.
(ii) தேசிய வருமானம் மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த.
(iii) தலா வருமானத்தை அதிகரிக்க.
(iv) மளிவுப் பணக்கொள்கைக்காக
குறியீடுகளைப் பயன்படுத்திச் சரியான விடை காண்க.
Answer: B.   (i) மற்றும் (ii) சரியானவை
142.  இந்திய சுற்றுலா புள்ளி விவரம் 2022ன் படி அந்நியநாட்டு சுற்றுலா பயணிகளால் அதிக அளவில் சுற்றி பார்க்கப்படும் சுற்றுலா தளம்
Answer: C.   மஹாபலிபுரம்
143.  கீழ்க்காண்பனவற்றுள் எது போஷன் 2.0 திட்டத்தில் கூறப்படாதது?
Answer: D.   வயது முதிர்ந்தவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு
144.  பின்வரும் அறிக்கைகளில், தொழில்துறை உற்பத்தியின் வரிசை (IIP) பற்றிய சரியான கூற்று எது?
1. IIP என்பது, பல்வேறு பொருளாதார துறைகளின் உற்பத்தி நடவடிக்கைகளின் முக்கிய பொருளாதார குறிகாட்டியாகும்.
2. IIP தரவுகள் மத்திய புள்ளியியல் அமைப்பு (CSO) – வால் தொடர்ந்து வெளியிடப்படுகிறது.
3. IIPக்கான அடிப்படை ஆண்டு 2011-12 ஆகும்.
Answer: D.   1, 2 மற்றும் 3
145.  நேரு-மகலநோபிஸ் திட்ட மாதிரி பின்வரும் உத்திகளை வலியுறுத்துகிறது.
(i) அதிக சேமிப்பு வீதம்
(ii) கனரக தொழிலுக்கு முன்னுரிமை
(iii) இறக்குமதி பதிலீட்டு ஊக்கமின்மை
(iv) புதிய தொழிலுக்கு பாதுகாப்பு
Answer: C.   (i), (ii) மற்றும் (iv) சரி
146.  “இந்தியர்களின் ஒத்துழைப்போடு ஆங்கிலேயரின் ஆட்சி நிறுவப்பட்டது. இந்த ஒத்துழைப்பினால் தான் இந்த ஆட்சி பிழைத்துகொண்டிருக்கிறது. இந்தியர்கள் ஒத்துழைக்க மறுத்தால், இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி ஒரு வருடத்தில் வீழ்ந்து சுயராஜ்ஜியம் மலரும்” என்றுகூறியவர் யார்?
Answer: C.   மகாத்மா காந்திஜி
147.  1944-ல் இந்திய அரசாங்கம் ______________ தலைமையின் கீழ் ஒரு திட்டத் துறையை ஏற்படுத்தியது.
Answer: D.   சர் அர்தேசிர் தலால்
148.  வரிசை I உடன் வரிசை II-னைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலுள்ள சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை I வரிசை II
(a) காங்கிரசு அமைச்சரவை பதவி விலகல் 1. 1943
(b) நீல் சிலை சத்யாகிரகம் 2. 1942
(c) வெள்ளையனே வெளியேறு தீர்மானம் 3. 1927
(d) சுதந்திர இந்தியாவின் மாகாண அரசாங்கம் 4. 1939
Answer: C.   4 3 2 1
149.  1933-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்ததற்காக ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டவர் யார்?
Answer: C.   காமராஜ்
150.  1923 ஆம் ஆண்டில் மேற்கொண்ட டாக்டர் B.R. அம்பேத்காரின் முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு என்ன?
Answer: A.   ரூபாயின் பிரச்சினை
;