GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2022 Preliminary Examination

General Studies Questions 101 to 125

101.  லண்டன் பாலம் நடவடிக்கை என்பது
Answer: A.   மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வல நிகழ்வுகள்
102.  டாப்ளர் விளைவைப் பொருத்து கீழ்க்காணும் கூற்றுகளுள் எவை சரியானவை?
(1) ஒளியில் டாப்ளர் விளைவு சமச்சீரானது
(2) ஒலியில் டாப்ளர் விளைவு சமச்சீரானது
(3) ஒளியில் டாப்ளர் விளைவு சமச்சீரற்றது
(4) ஒலியில் டாப்ளர் விளைவு சமச்சீரற்றது
Answer: B.   (1) மற்றும் (4) சரியானவை
103.  பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் (PMUY) இன் முக்கிய நோக்கத்தைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எந்த ஒன்று சரியானது?
Answer: B.   அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் திரவமாக்கப்பட்ட சுத்தமான பெட்ரோலிய வாயு ஆற்றல் எரிபொருளை வழங்குதல்
104.  இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ள மைய வங்கியின் மெய்நிகர் மின்னணு பணத்தின் அமைப்புகள் எவ்வாறானவை?
1. விகிக் கணக்கு அடிப்படையிலானது
2. அடையாள வில்லை
Answer: C.   (1) மற்றும் (2)
105.  MSME இன் துறையை எளிதாக்குவதற்கு அரசாங்கம் பின்வரும் முக்கிய அம்சங்களைத் தொடங்கியுள்ளது
(i) கடன் அணுகல்
(ii) சந்தை அணுகல்
(iii) தொழில் நுட்ப மேம்படுத்துதல்
(iv) MSME-இன் துறை ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பு
Answer: B.   (i), (ii) மற்றும் (iii) மட்டும்
106.  பின்வருவனவற்றுள் "Catch the Rain" இயக்கத்துடன் தொடர்பில்லாதது எது?
(i) இந்த இயக்கமானது தேசிய நீர் பணியால் தொடங்கப்பட்டது
(ii) இந்த இயக்கமானது, தடுபணைகள் மற்றும் நீர் சேகரிப்பு குழு நடவடிக்கைகளை அமைக்கிறது
(iii) கால்வாய்களில் உள்ள தடைகளை அகற்ற இந்த இயக்கம் வலியுறுத்துகிறது
(iv) மழை நீரை சேமிக்க மக்களுக்கு வழிகாட்ட மழை மையங்களை திறக்குமாறு இந்த இயக்கம் மத்திய நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது
Answer: D.   (iv) மட்டும்
107.  VVPAT எனும் சுருக்கப்பட்டச் சொல் குறிப்பது
Answer: C.   வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதத் தணிக்கை நடைமுறை
108.  கீழ்வருபனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
(a) நாயக்குழு 1. அமைப்பு சாரா துறை
(b) தாராபூர் குழு 2. மத்திய-மாநில தொடர்பு
(c) இராஜமன்னார் குழு 3. சிறிய அளவு தொழிற்சாலைகளுக்கு கடன் கிடைப்பது
(d) அர்ஜூன்சென் குப்தா குழு 4. மூலதன கணக்கு மாற்றுத் திறன்
Answer: C.   3 4 2 1
109.  கூற்று [A]: இந்தியாவின் பாலைவனப் பகுதியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம் - "பெரிய பாலைவனம்” மற்றும் “சிறிய பாலைவனம்".
காரணம் [R]: இந்த இரு பாலைவனங்களுக்கிடையே பாறை நிலம் மற்றும் சுண்ணாம்புக் கல் முகடுகளால் வெட்டப்பட்ட ஒரு மண்டலம் உள்ளது.
Answer: B.   [A] கூற்று மற்றும் [R] காரணம் இரண்டும் சரி, மற்றும் [A] கூற்றுக்கான [R] காரணம் சரி
110.  Li-அயனி பேட்டரிகளுக்கு/மின்கலன்களுக்கு பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
Answer: A.   பேட்டரி மின்னிறக்கம் அடையும்போது, Li-அயனிகள் ஆனோடிலிருந்து கேத்தோடுக்கு வெளியிடப்படுகிறது.
111.  மூவலூர் இராமாமிருதம் அம்மையார் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான பயனாளிகள்
Answer: C.   6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழக அரசுப் பள்ளிகளில் பயின்ற இளம்பட்ட வகுப்பு வரை பயிலும் மாணவியர்
112.  தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்து மனிதர்களைப் பாதுகாப்பது பின்வருவனவற்றில் எது?
Answer: C.   ஓசோன் படலம்
113.  M. விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாள் இந்தியாவின் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவர் எந்த சமஸ்தானத்தின் திவானாக இருந்தார்?
Answer: C.   மைசூர்
114.  “எண்ணும் எழுத்தும்" திட்டத்தின் நோக்கங்களை பின்வரும் கூற்றுக்களில் எது சிறப்பாக விளக்குகிறது?
I. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் குறைபாடுகளை சரிசெய்ய குழந்தைகளுக்கு உதவும் வண்ணம் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
II . அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
III. சமத்துவ சமூகத்தை வளர்க்கும் உயரிய நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
IV. 2025 ஆம் ஆண்டிற்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத, படிக்க மற்றும் எண்களை அறிந்தவர்களாக மாற்றுவது என்ற நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது
Answer: D.   I மற்றும் IV மட்டும்
115.  பின்வரும் பத்தியைப் படித்து அதை தொடர்ந்து வரும் வினாவிற்குவிடையளி.
மாநிலப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வேளாண்மையே தொடர்ந்து உள்ளது. இது
வாழ்க்கைத் தொழில் பாதுகாப்பையும் மற்றும் உணவுப் பாதுகாப்பையும் அளிக்கிறது.
மாநிலப் பயிர் விளைச்சல் பிரகாசமாக இருக்கிறது. தென்மேற்குப் பருவமழைப் பொழிவு
இயல்பாகவும் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக இருந்ததால் நிலத்தடி நீர் குறிப்பிடத்தக்க
அளவு மீள நிரம்பியது. மேலும் மாநிலத்தில் போதிய அளவு நீர் இருப்பு இருந்தது..
இவையனைத்துக் காரணிகளும் சேர்ந்து நீர்பாசன சூழலை ஊக்கப்படுத்தியது. இதன்
விளைவாக அதிக நிலங்கள் பயிரிடப்பட்டன. அரசும் போதிய வேளாண் உள்ளீடுகளைச்
சரியான நேரத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கின. போதியளவு
பயிர்க்கடன் சரியான நேரத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்குத் தொடக்க வேளாண்
கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிடைக்க வகை செய்யப்பட்டது..
பின்வரும் எந்தச் சொற்றொடர் மேலே உள்ள பத்தியின் உட்கருத்தைச் சிறப்பாக வெளிக்கொணர்கிறது?
Answer: B.   சரியான மழைப்பொழிவாலும், வேளாண் உள்ளீடுகள் மற்றும் கடன் வழங்கிய அரசின் முயற்சியாலும் வேளாண்மைசெழிப்படைந்துள்ளது
116.  கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக:
சுகாதாரத் திட்டங்கள் குறிக்கோள்கள்
(a) தமிழ்நாடு சுகாதார அமைப்பு மறுகட்டமைப்புத்திட்டம் 1. நவீன மற்றும் உயர்தர சுகாதார வசதிகளை ஏழைகளுக்கு அளிக்க
(b) தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டம் 2. நகர ஏழைகளின் ஆரோக்கியத்தை உயர்த்த
(c) முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் 3. சமூக-பொருளாதார அடுக்கில் கீழே உள்ளவர்களின் ஆரோக்கியத்தை உயர்த்த
(d) தமிழ்நாடு நகர சுகாதாரத் திட்டம் 4. SDG-3-ஐ அடைய
Answer: A.   4 3 1 2
117.  மத்தியப் பல்கலைக் கழகங்கள் (திருத்தம்) சட்டம், 2022 ல் சேர்க்கப்பட்ட சரத்துக்கள் எது?
1. கதி சக்தி விஷ்வவித்யலா நிறுவப்படல்
2. இயற்பியல் அறிவியல் தொடர்பான பல்வேறு துறைகளில் உயர்தர கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் திறன்மேம்பாடு ஆகியவற்றை வழங்குதல்
3. மாநிலப் பல்கலைக்கழகங்களை மத்தியப் பல்கலைக்கழகங்களாகத் தரம் உயர்த்துதல்
4. போக்குவரத்து தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை தொடர்பான பல்வேறு துறைகளில் உயர்தர கற்பித்தல் ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டை வழங்குதல்
Answer: D.   1 மற்றும் 4
118.  கூற்று [A] : இந்திய அரசாங்கம் பொருளாதாரம் சார்ந்த திட்டங்களைத் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் இன மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்துகிறது.
காரணம் [R] : பொம்மை செய்தல், கூடை முடைதல், அகர்பத்தி மற்றும் பீடி சுற்றுதல், துணித் தையலகம், காலணி தயாரித்தல் போன்ற சிறு தொழில்களுக்குக் கடன் கொடுப்பதன் மூலம் ஏழை மக்கள் துணை வருமானம் பெற அரசு உதவி செய்கிறது.
Answer: B.   கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A] -க்கான சரியான விளக்கமாகும்.
119.  கூற்று [A] : விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.
காரணம் [R] : பொருளின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது..
Answer: D.   [A] கூற்று சரியானது, [R] காரணம் கூற்று [A]ன் சரியான விளக்கம்
120.  சட்டம் தொடர்பான சரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்.
1. விதி 371 மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்கள் தொடர்பானது
2. விதி 371 A நாகாலாந்து மாநிலம் தொடர்பானது
3. விதி 371 D ஆந்திரபிரதேச மாநிலம்தொடர்பானது
4. விதி 371 H தமிழ்நாடு மாநிலம் தொடர்பானது
Answer: D.   1, 2 மற்றும் 3 சரியானவை
121.  கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
தலைவர் குழு
(a) காகா கலேகர் 1. பழங்குடியினர் முன்னேற்றம்
(b) சாக்சா 2. 7வது ஊதியக் குழு
(c) மண்டல் 3. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழு
(d) ஜஸ்டிஸ் A.K. மாத்தூர் 4. முதலாவது பிற்படுத்தப்பட்டோர் குழு
Answer: B.   4 1 3 2
122.  மாவட்ட மனநலத் திட்டத்தின் குறிக்கோள்களாவன
1. மாவட்ட சுகாதாரப் பாதுகாப்பு விநியோக அமைப்பில் தடுப்பு, பதவி உயர்வு மற்றும் நீண்ட கால பராமரிப்பு உள்ளிட்ட மனநலச் சேவைகளை வழங்குதல்
2. மனநலப் பாதுகாப்புக்கான உள்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் மனித வளம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவன திறனை அதிகரித்தல்
3. வீடுதோறும் மனநல சேவைகளை எளிதாக்குதல்
4. சமூக விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் மனநல சுகாதார சேவைகளை வழங்குவதில் பங்கேற்றல்
Answer: C.   1, 2, 4 மட்டும்
123.  பெரியாருடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைக் கால வரிசைப்படி வரிசை படுத்தவும்.
1. வைக்கம் சத்தியாகிரகம்
2. ஒத்துழையாமை இயக்கம்
3. கள்ளுக்கடை mறியல்
4. சென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவர்
Answer: A.   2, 3, 4, 1
124.  கால வரிசைப்படி சரியானவற்றை தேர்ந்தெடுக/முறைப்படுத்துக:
Answer: D.   பராந்தகன் I, இராஜராஜன் I, இராஜாதிராஜன் I, குலோத்துங்கன் I
125.  வடநூலாரின் 'தத்துவ ஞானம்' என்னும் கருத்தை முன்னிறுத்தும் திருக்குறளின் அதிகாரத்தைக் கண்டறிக.
Answer: D.   மெய் உணர்தல்
;